TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
தமிழகத்துக்கு நடப்பு நிதியாண்டில் நபார்டு வங்கியின் நிதியுதவி ரூ.40 ஆயிரம் கோடியாக இருக்கும் என அவ்வங்கியின் தலைவர் சிந்தாலா தெரிவித்துள்ளார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியின் (NABARD) தலைவர் டாக்டர் ஜி.ஆர்.சிந்தாலா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இரு தினங்களுக்கு முன்பு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, நபார்டு வங்கியின் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.3 ஆயிரம் கோடிவரை உதவி, நபார்டு உள்கட்டமைப்பு நிதியின் கீழ் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, மீன்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி,பால்வள உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு, நபார்டு வங்கி மூலம் அளிக்கப்படும் நிதி உதவிகள் குறித்து விவாதித்தார்.
அடுத்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் ஊரக உள்ளடக்கிய வளர்ச்சிஎனும் லட்சியத்தின் அடிப்படையில், நபார்டு வங்கிக்கும், பாரதஸ்டேட் வங்கிக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சிந்தாலா முன்னிலையில், தமிழ்நாடு நபார்டு வங்கியின் தலைமைப் பொதுமேலாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோரி டையே கையெழுத்தானது. நபார்டு வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
***************************************************************