TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி.
வர்த்தகம் மற்றும் மேம்பாடு தொடர்பான ஐக்கிய நாடுகளின் (United Nations Conference on Trade and Development (UNCTAD)) மாநாட்டின் பொதுச்செயலாளராக கோஸ்டாரிகா பொருளாதார நிபுணர் ரெபேக்கா கிரின்ஸ்பானை நியமிக்க UN பொதுச் சபை ஒப்புதல் அளித்துள்ளது. அவர் நான்கு ஆண்டு பதவியில் இருப்பார். UNCTAD க்கு தலைமை தாங்கிய முதல் பெண் மற்றும் மத்திய அமெரிக்கர் ஆவார். ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடரெஸ் அவர்களால் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2021 பிப்ரவரி 15 முதல் பொது செயலாளர் ஆக பணியாற்றி வரும் இசபெல் டுரான்ட்டைக்கு பதிலாக கிரின்ஸ்பன் பொறுப்பேற்பார். இதற்கு முன்பு, கிரின்ஸ்பன் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான UNDP பிராந்திய இயக்குநராகவும், 1994 முதல் 1998 வரை கோஸ்டாரிகாவின் இரண்டாவது துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் முக்கியமான குறிப்புக்கள்:
- UNCTAD தலைமையகம்: ஜெனீவா, சுவிட்சர்லாந்து.
- UNCTAD நிறுவப்பட்டது: 30 டிசம்பர் 1964
Coupon code- PREP75-75% offer plus double validity
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
| Adda247 Tamil telegram group |