Tamil govt jobs   »   Latest Post   »   TNPSC யின் புதிய தலைவராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்

TNPSC யின் புதிய தலைவராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்

TNPSC தேர்வாணையத்தின் 27வது புதிய தலைவராக மூத்த IAS அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு TNPSC தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வு பெற்ற நிலையில், தற்போது எஸ்.கே. பிரபாகர் புதிய தலைவராக பதவியேற்கிறார்.

TNPSC Chairman
TNPSC Chairman

செய்தியாளர் சந்திப்பு

தொடர்ந்து பேசிய பிரபாகர், ’’TNPSC தேர்வாணையம் என்றுமே நேர்மையாகச் செயல்படும். தவறுகள் ஏதேனும் நேர்ந்து, அதை சுட்டிக் காட்டினால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். வெளிப்படையாக செயல்படுவோம்.TNPSC தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் உள்ள கால தாமதத்தை குறைப்பதே எங்களின் முதல் பணி. அதேபோல தேர்வுகளை ஆண்டுதோறும் குறிப்பிட்ட கால அட்டவணையில் நடத்தவும் விரைவில் நடவடிக்கை எடுப்போம்’’ என்று பிரபாகர் தெரிவித்தார்.

முன்னதாக, உள்துறைச் செயலர், வருவாய் நிர்வாகத் துறை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி எஸ்.கே.பிரபாகர், டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2028 வரை இப்பதவியில் இருப்பார்.

 

*******************************************************************************

TNPSC யின் புதிய தலைவராக பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்_4.1

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here