Tamil govt jobs   »   Study Materials   »   பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு நூல்கள், நூலாசிரியர் மற்றும் பிற தகவல்கள்

பத்துப்பாட்டு நூல்கள்: சங்ககால நூல்கள் பண்டகால தமிழர்களின் காதல், போர், வீரம், ஆட்சி, வணிகம், திறமை போன்றவற்றை நம் தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகின்றன. அத்தகைய சங்ககால நூலும் பதினெண் மேற்கணக்கு நூல்களில் ஒன்று பத்துப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்கள் TNPSC தேர்வுகளில் முக்கியமான ஒருதலைப்பு ஆகும். பத்துப்பாட்டு நூல்கள், நூல்பற்றிய தகவல்களை இந்த கட்டுரையில் காணலாம்.

பத்துப்பாட்டு நூல்கள் – முன்னோட்டம்

பத்துப்பாட்டு நூல்கள்: பத்துப்பாடல்கள் கொண்ட பத்துப்பாட்டு சங்க இலக்கியத் தொகைநூல்களுள் ஒன்று. இவை பழங்கால தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலாச்சாரம், அறிவு, ஆட்சி, வணிகம் பற்றிய பல அரிய தகவல்களை கொண்டுள்ளது. பத்துப் பாட்டு நூல்களில் இயற்கைக்கு முரண்பட கற்பனைகளோ பொருந்தா உவமைகளோ காணப்பெறவில்லை.

  1. திருமுருகாற்றுப்படை
  2. பொருநராற்றுப்படை
  3. சிறுபாணாற்றுப்படை
  4. பொரும்பாணாற்றுப்படை
  5. மலைபடுகடாம்
  6. மதுரைக்காஞ்சி
  7. குறிஞ்சிப்பாட்டு
  8. பட்டினப்பாலை
  9. முல்லைப்பாட்டு
  10. நெடுநல்வாடை

பத்துப்பாட்டு நூல்கள்- தகவல்கள் 

  • முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய மூன்றும் அகப்பொருள் பற்றியவை. மற்ற ஏழு நூல்களும் புறப்பொருள் பற்றியவை.
  • ஏழனுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை சிறுபாணாற்றுப்படை, – பெரும்பாணாற்றுப்படை மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப் படை ஆகிய இந்தும் ஆற்றுப் படையினைச் சார்ந்தவை.
  • பரிசில் பெற்ற ஒருவன் பெறாதவனைப் பரிசில் அளிப்பவன்பாற் சென்று பயனடையக் கூறுவது ஆற்றுப்படையாகும்.

அகப்பொருள் பற்றியவை: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம், மதுரைக்காஞ்சி

புறப்பொருள் பற்றியவை : குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு

அகமும் புறமும் கலந்து வருவது: நெடுநல்வாடை

Fill the Form and Get All The Latest Job Alerts

பத்துப்பாட்டு நூல்கள்

நூல்கள் ஆசிரியர் தலைவன் பாடலின் அடி
திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன் 317
பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் கரிகாலன் 248
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடன் 269
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் இளந்திரையன் 500
மலைபடுகடாம் பெருங்கௌசிகனார் நன்னன் சேய் நன்னன் 583
குறிஞ்சிப்பாட்டு கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தன் 261
முல்லைப்பாட்டு நப்பூதனார் 103
பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலன் 301
நெடுநல்வாடை நக்கீரர் நெடுஞ்செழியன் 188
மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனார் நெடுஞ்செழியன் 782

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்

பத்துப்பாட்டு நூல்கள், நூலாசிரியர் மற்றும் பிற தகவல்கள்_30.1
TamilNadu Test Mate

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil