தென்னிந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சமகாலத்தில் நிலவிய பண்பாடுகள்:
- வடஇந்தியாவின் தொடக்ககால வேதப் பண்பாடு இந்தியத் துணைக் கண்டத்தின் ஏனைய பகுதிகளில் நிலவிய செம்புக்கால பண்பாட்டோடு ஒத்துப்போகிறது.
- மக்கள் செம்பையும் (chalco) கல்லையும் (lithic) ஒரே காலகட்டத்தில் பயன்படுத்தியதால் இது செம்புக் காலகட்டம் (Chalcolithic Culture) என்று தமிழில் அழைக்கப்படுகின்றது.
- இந்தியாவின் செம்புக்காலப் பண்பாடு முதிர்ந்த நிலை ஹரப்பா பண்பாட்டின் சமகாலப் பண்பாடாகும்.
- ஹரப்பா பண்பாட்டின் வீழ்ச்சிக்குப் பின்னருங்கூட, செம்புக் காலப் பண்பாடு தொடர்ந்து நிலவியது.
- வடஇந்தியாவின் பின்வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவின் இரும்புக் காலமும் சமகாலத்தைச் சேர்ந்தவை ஆகும்.
- இரும்புக் காலத்தின் முடிவில் மக்கள் பெருங்கற்காலப் பண்பாட்டினுள் கி.மு. (பொ.ஆ.மு) 600 – கி.பி. (பொ.ஆ) 100 இல் காலடி எடுத்து வைத்தனர்.
- பண்டைய தமிழகத்தின் பெருங்கற்காலம், சங்ககாலத்திற்கு முந்தைய காலத்தோடு ஒத்துப்போகிறது.
- கருப்பு மற்றும் சிவப்புநிற மட்பாண்டங்கள் பெருங்கற்காலத்தின் ஒரு கூறாக உள்ளது.
தமிழ்நாட்டின் பெருங்கற்காலம் / இரும்புக்காலம்.
- பெருங்கற்காலம் ஆங்கிலத்தில் Megalithic Age என்று அழைக்கப்படுகிறது. Megalith என்பது கிரேக்கச் சொல்லாகும். ‘Mega’ என்றால் பெரிய, lith என்றால் ‘கல்’என்று பொருள்.
- இறந்தவர்களைப் புதைத்த இடங்களைக் கற்பலகைகளைக் கொண்டு மூடியததால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள பெருங்கற்கால/இரும்புக்கால தொல்லியல் ஆய்விடங்கள்.
ஆதிச்சநல்லூர்-தூத்துக்குடி மாவட்டம்:
அகழ்வாய்வில்,
- முதுமக்கள் தாழிகள்,
- பல்வகைப்பட்ட மட்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு)
- இரும்பாலான குத்துவாள்,
- கத்திகள்,
- ஈட்டிகள்,
- அம்புகள்,
- சில கல்மணிகள்,
- ஒரு சில தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன.
- வீட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யானை, மான் போன்றவற்றின் வெண்கலத்தாலான உருவங்கள் கிடைத்துள்ளன.
- மட்பாண்டங்கள் செய்தல், கல் மற்றும் மரங்களைப் பயன்படுத்தி பொருட்கள் செய்தல் போன்ற திறன்களை மக்கள் பெற்றிருந்தனர்.
வேதகாலம் பற்றி அறிந்துகொள்ள பகுதி – 1, பகுதி – 2, பகுதி – 3, பகுதி – 4 மற்றும் பகுதி – 5 ண்டை இங்கு படியுங்கள்.
இது பகுதி 01 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.
***************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group
Instagram = Adda247 Tamil