TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, RRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான நடப்பு நிகழ்வுகள் தலைப்புச் செய்தி
நீதிபதி நத்தலபதி வெங்கட ரமணா ஏப்ரல் 24, 2021 அன்று இந்திய 48 வது தலைமை நீதிபதியாக (CJI ) ஆக பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் நீதிபதி ரமணாவிற்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஏப்ரல் 23, 2021 அன்று பதவியில் இருந்து ஓய்வு பெறுகிற நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவுக்குப் பிறகு இவர் பதவி ஏற்கிறார் . 2022 ஆகஸ்ட் 26 வரை நீதிபதி ரமணா தலைமை நீதிபதியாக பணியாற்றுவார்.