Tamil govt jobs   »   Latest Post   »   Jainism Part 2 in Adda247 Tamil...

Jainism Part 2 in Adda247 Tamil | சமண மதம் பகுதி – 2 Adda247 தமிழில்

கர்மா அல்லது கர்மவினை என்றால் என்ன?

இப்பிறவியில் ஒருவர் செய்யும் செயல்களே அவருடைய/ அவளுடைய இப்பிறவியின் பிற்பகுதி வாழ்க்கையையும், அடுத்த பிறவியில் அவர் வாழப்போகும் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது என்ற நம்பிக்கை ஆகும்.

திரிரத்தினங்கள் அல்லது மூன்று ரத்தினங்கள்:

கர்மாவிலிருந்து விடுதலை பெறுவதற்கும் மோட்ச நிலையை அடைவதற்கும் மகாவீரர் மூன்று வழிகளை அறிவுறுத்தினார்.

  • நன்னம்பிக்கை
  • நல்லறிவு
  • நற்செயல்
மோட்சம் என்பது பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியில் இருந்து விடுதலை பெறுதல் ஆகும்.

சமணத்தின் நடத்தை விதிகள்:

மகாவீரர் தன்னைப் பின்பற்றுவோரை ஒழுக்கம் மிகுந்த வாழ்க்கையை மேற்கொள்ளக் கூறினார். அப்படிப்பட்ட வாழ்வை மேற்கொள்ள ஐந்து கொள்கைகளைப் போதித்தார்.

  • அகிம்சை – எந்த உயிரினத்தையும் துன்புறுத்தாமல் இருப்பது
  • சத்யம் – உண்மையை மட்டுமே பேசுதல்
  • அஸ்தேயம் – திருடாமை
  • அபரிக்கிரகம்- பணம்,பொருள்,சொத்துக்கள் மீது ஆசை கொள்ளாமை
  • பிரம்மச்சரியம் – திருமணம் செய்து கொள்ளாமை
மகாவீரரின் தலைமைச் சீடரான கௌதமசுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார். அதன் பெயர் ஆகம சித்தாந்தம் எனப்படும்.

திகம்பரரும் சுவேதாம்பரரும்:

சமணம் திகம்பரர், சுவேதாம்பரர் என இரு பிரிவுகளாகப் பிரிந்தது.

திகம்பரர்:

  • திகம்பரர் வைதீக பழமைவாதப் போக்குடைய சீடர்கள்.
  • திகம்பரர் பிரிவைச் சேர்ந்த சமணத் துறவிகள் ஆடைகள் அணிவதில்லை. நிர்வாணமாக வாழ்ந்தனர். அவர்கள் எந்த விதமான உடைமையும் வைத்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது. 
  • பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என திகம்பரர் நம்பினர்.

Jainism Part 2 in Adda247 Tamil | சமண மதம் பகுதி - 2 Adda247 தமிழில்_3.1

சுவேதாம்பரர்:

  • சுவேதாம்பரர்கள் முற்போக்கானவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
  • சுவேதாம்பர பிரிவைச் சேர்ந்த துறவிகள் வெள்ளை நிற ஆடைகளை அணிகின்றனர். ரஜோகரனா (கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்) பிச்சைப் பாத்திரம், புத்தகம் ஆகியவை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.
  • ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலை பெற சமமான தகுதிகளைக் கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

Vedic Culture Part 4

Vedic Culture Part 5

Megalithic Culture Part 1

Megalithic Culture Part 2

Megalithic Culture Part 3

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 Tamil Nadu Home page Click here
Official Website = Adda247 Click here
Adda247App Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil