Tamil govt jobs   »   Latest Post   »   Jainism Part 1 in Adda247 Tamil...

Jainism Part 1 in Adda247 Tamil | சமண மதம் பகுதி – 1 Adda247 தமிழில்

சமண மதத்தின் தோற்றம்:

  • உலகத்தின் மிகப்பழமையான, தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் மதங்களில் சமணமும் ஒன்றாகும். 
  • சமணம் 24 தீர்த்தங்கரர்களை மையமாகக் கொண்டது. 
  • முதல் தீர்த்தங்கரர் – ரிஷபர். 
  • கடைசித் தீர்த்தங்கரர் – மகாவீரர். 
  • கி.மு. (பொ.ஆ.மு) ஆறாம் நூற்றாண்டில் மகாவீரரின் வழிகாட்டுதலில் சமணம் முக்கியத்துவம் பெற்றது.

TNUSRB CONSTABLE 2023

சமணம் (Jain) என்னும் சொல் ஜினா (Jina) என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் தன்னையும், வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும்.

Jainism Part 1 in Adda247 Tamil | சமண மதம் பகுதி - 1 Adda247 தமிழில்_3.1

இயற்பெயர் – வர்த்தமானர்
பிறப்பு – வைசாலிக்கு அருகேயுள்ள குந்தகிராமம், பீகார்
பெற்றோர் – சித்தார்த்தர், திரிசலா
இறப்பு – பவபுரி-பீகார்

மகாவீரர் (தலைசிறந்த வீரர்):

  • வர்த்தமானர் (செழிப்பு என்று பொருள்) ஒரு சத்திரிய இளவரசர். 
  • அவர் தன்னுடைய 30வது வயதில் இளவரசர் என்னும் தகுதியைக் கைவிட்டுவிட்டு துறவறம் மேற்கொண்டார். 
  • பன்னிரண்டரை ஆண்டுகால கடுமையான தவத்திற்குப் பின்னர் அவர் எல்லையற்ற அறிவை அடைந்தார்இந்நிலைக்கு ‘கைவல்ய‘ என்று பெயர்.
  • அதன் பின்னர் அவர் ஜினா (Jina) ஆனார். 
  • இவரைப் பின்பற்றியவர்கள் சமணர் (Jains) என்று அழைக்கப்பட்டனர். 
  • மகாவீரர் பண்டைய சிரமானிய (Sramanic) மரபுகளை மறு ஆய்வு செய்தார். 
  • இவர்தான் உண்மையிலேயே சமணத்தை உருவாக்கியவர் என நம்பப்படுகிறது.

சமணத்தின் தனித்தன்மை வாய்ந்த போதனைகள்

  • பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் மறுக்கிறது.
  • அகிம்சை அல்லது அறவழியே சமணத்தின் அடிப்படைத் தத்துவம்.
  • முக்தி அடைவது அல்லது பிறப்பு-இறப்பு- மறுபிறப்பு எனும் சுழற்சியிலிருந்து விடுபடுவதே சமணத்தின் இறுதி லட்சியமாகும்.
  • இறுதித் தீர்ப்பு என்ற நம்பிக்கையை சமணம் மறுக்கிறது (இறுதித் தீர்ப்பு என்பது யார் சொர்க்கத்திற்கு செல்வது? யார் நரகத்திற்கு செல்வது? என்பதைக் கடவுள் தீர்மானிப்பார் என்ற நம்பிக்கை) 
  • ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்மவினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமணம் ஆதரிக்கிறது.

Vedic Culture Part 1

Vedic Culture Part 2

Vedic Culture Part 3

Vedic Culture Part 4

Vedic Culture Part 5

Megalithic Culture Part 1

Megalithic Culture Part 2

Megalithic Culture Part 3

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 Tamil Nadu Home page Click here
Official Website = Adda247 Click here
Adda247App Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil