Tamil govt jobs   »   Indus Valley Civilization in Adda247 Tamil...   »   Indus Valley Civilization in Adda247 Tamil...

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி – 3

சிந்துவெளி நாகரிகத்துக்கும், பிற சமகால நாகரிகங்களுக்கும் உள்ள தொடர்பை
அறிந்துகொள்ள பகுதி – 3 ண்டை இங்கு படியுங்கள்.

Indus Valley Civilization Part 1

Indus Valley Civilization Part 2

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

 • மொகஞ்ச-தாரோவில் வெண்கலத்தால் ஆன இந்த சிறிய பெண் சிலை கிடைத்தது. 
 • ‘நடன மாது’ என்று குறிப்பிடப்படுகிற இந்தச் சிலையைப் பார்த்த சர் ஜான் மார்ஷல் “முதலில் இந்தச் சிலையை நான் பார்த்த பொழுது இது வரலாற்றிற்கு முந்தைய காலத்தின் உருவாக்க முறையைச் சார்ந்தது என்று நம்புவதற்குக் கடினமாக இருந்தது. 
 • ஏனெனில்  இதுபோன்று உருவாக்கம் பண்டைய மக்களுக்கு கிரேக்க காலம் வரை தெரியவில்லை. 
 • இவை ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என நினைத்தேன். 
 • இச்சிலைகள் அக்காலகட்டத்துக்கு உரியதாகவே இருந்தன” என்றார்.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி - 3_3.1

 

TNUSRB SI Test Series 2023

TNPSC Group 4 Test Series 2023

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

 • கே.வி.டி (கொற்கை – வஞ்சி – தொண்டி) வளாகம்: பாகிஸ்தானில் இன்றும் கொற்கை, வஞ்சி, தொண்டி, மத்ரை, உறை, கூடல்கர் என்ற பெயர் கொண்ட இடங்கள் உள்ளன.
 • கொற்கை, பூம்புகார் போன்ற சங்க கால நகரங்கள் மற்றும் துறைமுகங்களின் பெயர்களுடன் உள்ள இடங்கள் ஆப்கானிஸ்தானில் உள்ளன.
 • ஆப்கானிஸ்தானில் உள்ள ஆறுகளான காவ்ரி, பொருண்ஸ் மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஆறுகளான காவிரி வாலா மற்றும் பொருனை ஆகிய பெயர்கள் தமிழ்ச் சொற்களை முழுமையாகப் பிரதிபலிக்கின்றன.

சிந்துவெளி நாகரிகத்தின் மறைந்த பொக்கிஷங்கள்:

 • பழங்கால எழுத்துக்களைப் படிப்பதன் மூலம் அக்கால நாகரிகத்தை நாம் அறிந்து கொள்ளலாம். 
 • ஆனால் சிந்துவெளி எழுத்துகளை இன்று வரை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

உடை:

 • பொதுவாக பருத்தி ஆடைகளே பயன்பாட்டில் இருந்தன.
 • அங்கு கண்டுபிடிக்கப்பட்ட நூலைச் சுற்றி வைப்பதற்கான சுழல் அச்சுக்கள் மூலம் அவர்கள் நூற்கவும் செய்திருக்கின்றனர் என்று தெரிகிறது.
 • கம்பளி ஆடைகளும் உபயோகப்படுத்தப்பட்டன.

அன்பும் அமைதியும்: 

 • குடியிருப்புகள் தரைமட்டத்திலிருந்து நன்கு உயர்த்தப்பட்ட தளங்களில் கட்டப்பட்டிருந்தன.
 • அவர்களிடம் படை இருந்ததற்கான எந்த ஆதாரம் இல்லை.
 • சில ஆயுதங்கள் மட்டுமே அங்கிருந்து கிடைத்துள்ளன.
 • அவர்கள் தங்களின் மேம்பட்ட நிலையை அவர்களுடைய ஆடைகள், விலைமதிப்பற்ற நகைகள் மற்றும் மேம்பட்ட நகர வாழ்க்கை மூலம் வெளிப்படுத்தினர்.

அணிகலன்கள்:

 • ஆண், பெண் இருபாலரும் ஆபரணங்களை விரும்பி அணிந்திருக்கின்றனர்.
 • கழுத்தணிகள், கையணிகள், வளையல்கள், மோதிரங்கள், காதணிகள் மற்றும் காலணிகள் முதலியவற்றையும் அணிந்தனர்.
 • தங்கம், வெள்ளி, தந்தம், சங்கு, செம்பு, சுடுமண் மற்றும் விலையுயர்ந்த கற்களால் அணிகலன்கள் செய்யப்பட்டிருந்தன.
 • சிந்துவெளி மக்கள் இரும்பு மற்றும் குதிரையை அறிந்திருக்கவில்லை .

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

 • சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய சிவப்பு நிற மணிக்கற்களைப் (carnelian) பயன்படுத்தினர்.

தொழில்:

 • சிந்துவெளி மக்களின் முதன்மையான தொழில் பற்றி எதுவும் தெரியவில்லை, எனினும் வேளாண்மை,கைவினைப் பொருள்கள் செய்தல், பானை வனைதல், அணிகலன்கள் செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டனர் என தெரிகிறது.
 • அங்கு வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் கைவினைஞர்களும் இருந்துள்ளனர்.
 • கால்நடை வளர்ப்பும் அவர்களது தொழிலாக இருந்தது. 
 • அவர்கள் சக்கரத்தின் பயனையும் அறிந்திருந்தனர்.

மட்பாண்டங்கள்:

 • மட்பாண்டங்களைச் சக்கரங்கள் கொண்டு உருவாக்கினர். அவை தீயிலிட்டுச் சுடப்பட்டன.
 • மட்பாண்டங்கள் சிவப்பு வண்ணத்தில் இருந்தன. அதில் கருப்பு வண்ணத்தில் அழகிய வேலைப்பாடுகளைச் செய்தனர்.
 • அங்கு கிடைத்த உடைந்த பானைத் துண்டுகள் விலங்குகளின் உருவங்களுடனும், வடிவியல் வடிவமைப்புகளுடனும் காணப்படுகின்றன.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி - 3_4.1சமய நம்பிக்கை:

 • சிந்துவெளி மக்களின் வழிபாடு மற்றும் அவர்களின் மத நடைமுறைகள் பற்றி அறிய எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கவில்லை .
 • அங்கு கிடைக்கப்பெற்ற பெண் சிலைகள் மூலம் சிந்து வெளி மக்களிடையே தாய் தெய்வ வழிபாடு இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது .

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி - 3_5.1கலைத்திறன்:

 • பொம்மை வண்டிகள், தலையையும், கால்களையும் அசைக்கக்கூடிய பசுபொம்மைகள், களிமண் பந்துகள், சிறிய பொம்மைகள், சிறிய களிமண் குரங்கு, சுடுமண் பொம்மைகள், கொட்டைகளைக் கொறிக்கும் அணில் பொம்மைகள், மண்ணால் ஆன நாய்கள், நடனமாடும் ஆண் பொம்மை போன்றவையும் கிடைத்துள்ளன.
 • சுடுமண்ணால் செய்யப்பட்ட பல்வேறு வகையான பொம்மைகள் மக்களின் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு ஆர்வத்தைக் காட்டுகின்றன.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி - 3_6.1

ஹரப்பா நாகரிகத்திற்கு நடந்தது:

கி.மு.(பொ.ஆ.மு) 1900ஆம் ஆண்டில் ஹரப்பா நாகரிகம் சரியத் தொடங்கியது. அதற்குக் கீழ்க்கண்டவை காரணங்களாக அமைந்திருக்கலாம்.

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி - 3_7.1

 • ஆற்றின் கரையில் உள்ள அதன் நகரங்களில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
 • சுற்றுச்சூழல் மாற்றம்
 • படையெடுப்பு
 • இயற்கைச் சீற்றங்கள்
 • காலநிலை மாற்றம்
 • காடுகள் அழிதல்
 • தொற்று நோய்த் தாக்குதல்

Indus Valley Civilization in Adda247 Tamil Part 3 | Adda247 தமிழில் சிந்து சமவெளி நாகரிகம் பகுதி - 3_8.1

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை:

 • முதல் எழுத்து வடிவம் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது.
 • மொகஞ்ச-தாரோவில் தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெறும் இடம் உலகப் பாரம்பரியத் தளமாக யுனெஸ்கோ அமைப்பால் தேர்ந்தெடுக்கப்- -பட்டுள்ளது.

சிந்து வெளி நாகரிகம் – பொதுவான உண்மைகள்:

 • உலகின் மிகப்பழமையான நாகரிகங்களில் ஒன்று .
 • பழமையான நான்கு நாகரிகங்களில் பெரிய பரப்பளவு கொண்டது.
 • உலகின் முதல் திட்டமிடப்பட்ட நகரங்கள்.
 • மேம்பட்ட சுகாதாரம் மற்றும் வடிகால் அமைப்பு.

கதிரியக்க கார்பன் வயதுக்கணிப்பு முறை – தொல்லியல் ஆய்வாளர்களுக்கான தரப்படுத்தப்பட்ட முறை:

கார்பனின் கதிரியக்க ஐசோடோப் ஆன கார்பன்14 ஐப் பயன்படுத்தி, ஒரு பொருளின் வயதை அறியும் முறை கதிரியக்க கார்பன் முறை அல்லது கார்பன்14 (C14) முறை என்று அழைக்கப்படுகிறது.

இது பகுதி 3 மற்றும் அடுத்த பகுதிக்கு adda247 செயலியை பதிவிறக்கம் செய்யவும். TNPSC, TNUSRB, TRB மற்றும் பிற போட்டித் தேர்வுகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற இது உதவும்.

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –TNPSC sure shot selection group

Instagram = Adda247 Tamil