Table of Contents
அன்னிய செலாவணி
ஒரு நாட்டின் பணத்தை வேறு ஒரு நாட்டின் பண அளவில் குறிப்பிடுவது அன்னிய செலாவணியாகும். அன்னியச் செலாவணி சந்தையில், ஒரு டாலரை வாங்கும்போது ஒரு விலையும் (Bid), அதை விற்கும் போது ஒரு விலையும் (Offer) இருக்கும். ஒரு டாலரை ரூ.70-க்கு வாங்கி, ரூ 70.25 க்கு விற்கும்போது, இதற்கிடையிலான வித்தியாசம் 25 பைசா என்பது spread என்று கூறப்படும். இந்த spread தான் அன்னியச் செலாவணி சந்தையில் வியாபாரிக்கு கிடைக்கும் லாபமாகும். ஒரு நாட்டின் பணம், பெரிய அளவில், தொடர்ந்து வாங்கப்பட்டும் விற்கப்பட்டும் இருந்தால், அங்கு spread குறைவாக இருக்கும். ஒரு நாட்டின் பணம், சிறிய அளவில் எப்போதாவது வாங்கப்பட்டு விற்கப்பட்டால், அங்கு spread அதிகமாக இருக்கும்.
இந்தியாவின் நிலை
சில நாட்களாக, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நிதி பற்றாக்குறை, ரிசர்வ் வங்கி எச்சரிக்கை என முதலீட்டுச் சந்தையில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், அதனை ஈடு செய்யும் வகையில், இந்திய வரலாற்றில், முதல் முறையாக அன்னிய செலாவணி 600 பில்லியன் டாலர் அளவீட்டைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது. மே மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்ததே, இந்தியாவின் அன்னிய செலாவணி அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக திகழ்கிறது.
ஆனால் இந்த நிலைமையை கண்டு, ரிசர்வ் வாங்கி மகிழ்ச்சி அடியாதது ஏன்?
- உலகிலேயே அதிக அன்னிய செலாவணி வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் 5வது இடத்தில் இந்தியா இருந்தாலும், தற்போது இருக்கும் அன்னிய செலாவணியை வைத்து, அடுத்த 16 மாதங்களுக்கான இறக்குமதியை மட்டுமே முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும். ரிசர்வ் வங்கியின் கவர்னரான சக்திகாந்த தாஸ் கூறுகையில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில், கொள்கை ஏதேனும் மாற்றப்பட்டால், இந்திய சந்தையில் இருந்து அதிகளவிலான முதலீடுகள் வெளியேற வாய்ப்புகள்
- இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய மொத்த தொகையானது, நாட்டின் மொத்த சொத்து மதிப்பை விடவும் 12 சதவீதம் அதிகமாக உள்ளது, அதாவது -12% GDP ஆகும்.
இந்தியா தற்போது ரஷ்யாவின் அன்னிய செலாவணிக்கு இணையாக உயர்ந்துள்ளது, ரஷ்யாவின் அளவீட்டை அடைய இன்னும் 200 மில்லியன் டாலர் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
*************************************************************
Use Coupon code: JUNE77 (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube