Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 29 March 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. ஆடத் தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத் தெரியும் என்று கூறுவது……………………………..

  1. வினா எதிர் வினாதல்
  2. உற்றது உரைத்தல்
  3. உறுவது கூறல்
  4. இனமொழி விடை

Q2. ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா? என்று கூறுவது என்ன விடை?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. உற்றது உரைத்தல் விடை
  3. உறுவது கூறல் விடை
  4. இனமொழி விடை

Q3. வெளிப்படை விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

  1. சுட்டு விடை
  2. மறை விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை

Q4. நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள் எத்தனை?

  1. மூன்று
  2. நான்கு
  3. ஐந்து
  4. ஆறு

Q5. குறிப்பு விடைகளாக இருக்கும் குறிப்பு விடைகள் எத்தனை?

  1. மூன்று
  2. நான்கு
  3. ஐந்து
  4. ஆறு

Q6. குறிப்பு விடைகளில் பொருந்தாததைக் கண்டறிக.

  1. நேர் விடை
  2. ஏவல் விடை
  3. உறுவது கூறல்
  4. இனமொழி

Q7. ‘கடைத்தெரு எங்கு உள்ளது?’ என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது’ என்று சுட்டிக் காட்டும் விடை __________________ விடை எனப்படும்?

  1. நேர் விடை
  2. சுட்டு விடை
  3. உறுவது கூறல்
  4. இனமொழி

Q8. கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்குப் போகமாட்டேன்’ என மறுத்துக் கூறுவது______________________ விடை எனப்படும்?

  1. நேர் விடை
  2. சுட்டு விடை
  3. மறை விடை 
  4. இனமொழி

Q9. ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கிறது’ என்று ஏற்கனவே நேர்ந்ததை விடையாகக் கூறுவது ____________________ விடை எனப்படும்?

  1. நேர் விடை
  2. சுட்டு விடை
  3. உற்றது உரைத்தல் விடை 
  4. இனமொழி

Q10. ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கும்’ என்று இனிமேல் நேர்வதை விடையாகக் கூறுவது ______________ எனப்படும்.

  1. நேர் விடை
  2. சுட்டு விடை
  3. உற்றது உரைத்தல் விடை 
  4. உறுவது கூறல்

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (d) 

Sol. இனமொழி விடை

வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாக கூறுவது  இனமொழி விடை எனப்படும்.

ஆடத் தெரியுமா என்ற வினாவிற்குப் பாடத் தெரியும் என்று கூறுவது இனமொழி விடை.

S2. ANS (a) 

Sol. வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு விடையாக  இன்னொரு வினாவை கேட்பது  எதிர் வினாதல் விடை எனப்படும் .

 ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு வராமல் இருப்பேனா? என்று கூறுவது வினா எதிர் வினாதல் விடை.

S3. ANS (d) 

Sol. ஏவல் விடை

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக்  கூறும் விடை .

வெளிப்படை விடைகளில் பொருந்தாதது: ஏவல் விடை

S4. ANS (a) 

Sol. மூன்று

நேரடி விடைகளாக இருக்கும் வெளிப்படை விடைகள்மூன்று

விடைகள் நேரடியாக இருப்பின் வெளிப்படை விடைகள் எனப்படும்.

அவைசுட்டு விடை ,   மறை விடை ,நேர் விடை.

S5. ANS (c) 

Sol. ஐந்து

குறிப்பு விடைகளாக இருக்கும் குறிப்பு விடைகள்ஐந்து

விடைகள் குறிப்பாக  இருப்பதால்   குறிப்பு விடைகள் எனப்படும்.

ஏவல் விடை , வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை , உறுவது கூறல் விடை , இனமொழி விடை.

S6. ANS (a) 

Sol. நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும் .

குறிப்பு விடைகளில் பொருந்தாதது: நேர் விடை

S7. ANS (b) 

Sol. சுட்டு விடை

சுட்டி கூறும் விடை சுட்டு விடை எனப்படும்.

கடைத்தெரு எங்கு உள்ளது?’ என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது என்று சுட்டிக் காட்டும் விடை சுட்டு விடை எனப்படும்.

S8. ANS (c) 

Sol. மறை விடை

மறுத்துக் கூறும் விடைமறை விடை

 கடைக்குப் போவாயா?’ என்ற வினாவிற்குப் போகமாட்டேன் என மறுத்துக் கூறுவது மறை விடை எனப்படும்.

S9. ANS (c) 

Sol. உற்றது உரைத்தல் விடை

வினாவிற்கு விடையாக  ஏற்கனவே நேர்ந்ததைக்  கூறுவது  உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கிறது என்று ஏற்கனவே நேர்ந்ததை விடையாகக் கூறுவது உற்றது உரைத்தல் விடை எனப்படும் 

S10. ANS (d) 

Sol. உறுவது கூறல்

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் உறுவது கூறல் விடை எனப்படும் .

 ‘நீ விளையாடவில்லையா?’ என்ற வினாவிற்குக் கால் வலிக்கும் என்று இனிமேல் நேர்வதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் எனப்படும்.

 

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –MAR15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil