Tamil govt jobs   »   Latest Post   »   General Tamil Quiz For TNUSRB SI

General Tamil Quiz For TNUSRB SI – 28 March 2023

General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams. 

TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.

 

Q1. நீ சொற்பொழிவாற்றுவாயா ? இவ்வினாவிற்குத் தொண்டை வலிக்கிறது என்று தனக்கு நேர்ந்ததைக் கூறுவது ____________________ விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. உற்றது உரைத்தல் விடை
  3. நேர் விடை
  4. இனமொழி விடை

Q2. நீ இதனைச் சாப்பிடுவாயா? என்ற வினாவிற்கு ‘வயிறு வலிக்கும்‘ என்று கூறுதல் ______________________ விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. உற்றது உரைத்தல் விடை
  3. உறுவது கூறல் விடை
  4. இனமொழி விடை

Q3. நீ பாடுவாயா என்ற கேள்விக்கு நான் ஆடுவேன் என்று கூறுதல் __________________ விடை ஆகும்?

  1. வினா எதிர் வினாதல் விடை
  2. உற்றது உரைத்தல் விடை
  3. உறுவது கூறல் விடை
  4. இனமொழி விடை

Q4. “இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டது________________ வினா. ‘அதோ அங்கே நிற்கும்’ என்று மற்றொருவர் கூறியது _________________ விடை?

  1. ஐய வினா, வினா எதிர் வினாதல்
  2. அறி வினா, மறை விடை
  3. அறியா வினா, சுட்டு விடை
  4. கொளல் வினா, இனமொழி விடை

Q5. இதோ…. இருக்கிறதே! என்று என்று கூறுதல் __________________ விடை ஆகும்?

  1. சுட்டு விடை 
  2. உற்றது உரைத்தல் விடை
  3. உறுவது கூறல் விடை
  4. இனமொழி விடை 

Q6. மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ……………………………..

  1. மறை விடை
  2. இனமொழி விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை

Q7. வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது ……………………………..

  1. உறுவது கூறல் விடை
  2. உற்றது உறைத்தல் விடை
  3. இனமொழி விடை
  4. வினா எதிர் வினாதல் விடை

Q8. உடன்பட்டுக் கூறும் விடை ……………………………..

  1. சுட்டு விடை
  2. மறை விடை
  3. நேர் விடை
  4. ஏவல் விடை

Q9. வினாவிற்கு வினாவை திரும்பக் கேட்பது ……………………………..

  1. ஏவல் விடை
  2. வினா எதிர் வினாதல் விடை
  3. மறை விடை
  4. நேர் விடை

Q10. மறுத்துக் கூறும் விடை ……………………………..

  1. சுட்டு விடை
  2. மறை விடை
  3. ஏவல் விடை
  4. நேர் விடை

Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.

DAILY General Tamil Daily Quiz SOLUTIONS

S1. ANS (b) 

Sol. உற்றது உரைத்தல் விடை

வினாவிற்கு விடையாக  ஏற்கனவே நேர்ந்ததைக்  கூறுவது  உற்றது உரைத்தல் விடை எனப்படும்.

 நீ சொற்பொழிவாற்றுவாயா? இவ்வினாவிற்குத் தொண்டை வலிக்கிறது என்று தனக்கு நேர்ந்ததைக் கூறுவது உற்றது உரைத்தல் விடை

S2. ANS (c) 

Sol. உறுவது கூறல் விடை

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதை கூறல் உறுவது கூறல் விடை எனப்படும் .

நீ இதனைச் சாப்பிடுவாயா? என்ற வினாவிற்குவயிறு வலிக்கும் என்று கூறுதல் உறுவது கூறல் விடை ஆகும்

S3. ANS (d) 

Sol. இனமொழி விடை

வினாவிற்கு விடையாக இனமான மற்றொன்றை விடையாக கூறுவது  இனமொழி விடை எனப்படும்.

நீ பாடுவாயா என்ற கேள்விக்கு நான் ஆடுவேன் என்று கூறுதல் இனமொழி விடை ஆகும்

S4. ANS (c) 

Sol. அறியா வினா, சுட்டு விடை

இங்கு நகரப் பேருந்து நிற்குமா?” என்று வழிப்போக்கர் கேட்டதுஅறியா வினா வினா. ‘அதோ அங்கே நிற்கும் என்று மற்றொருவர் கூறியதுசுட்டு விடை

S5. ANS (a) 

Sol. சுட்டு விடை

சுட்டி கூறும் விடை சுட்டு விடை எனப்படும்.

 இதோ. இருக்கிறதே! என்று என்று கூறுதல்  சுட்டு விடை ஆகும் 

S6. ANS (d) 

Sol. ஏவல் விடை

மாட்டேன் என்று மறுப்பதை ஏவுதலாகக் கூறும் விடை ஏவல் விடை ஆகும்

S7. ANS (a) 

Sol. உறுவது கூறல் விடை

வினாவிற்கு விடையாக இனிமேல் நேர்வதைக் கூறுவது உறுவது கூறல் விடை ஆகும்

S8. ANS (c) 

Sol. நேர் விடை

உடன்பட்டுக் கூறும் விடை நேர்விடை எனப்படும் .

கடைக்கு போவாயா ‘   என்ற கேள்விக்கு ‘  போவேன்என்று  கூறுவது.உடன்பட்டுக் கூறும் விடைநேர் விடை

S9. ANS (b) 

Sol. வினா எதிர் வினாதல் விடை

வினாவிற்கு வினாவை திரும்பக் கேட்பதுவினா எதிர் வினாதல் விடை

S10. ANS (b) 

Sol. மறை விடை

மறுத்துக் கூறும் விடைமறை விடை

சான்று:’ கடைக்கு போவாயா ?’ என்ற கேள்விக்கு  ‘ போகமாட்டேன்என மறுத்துக் கூறுவது .

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

Download the app now, Click here

Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Coupon code –PREP15(Flat 15% off on all Products)

General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247
General Tamil Live Classes For Tamil Eligibility Test, TNPSC Group 2 With General Tamil eBook Batch By Adda247

*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*

Check Live Classes in Tamil

*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*

Practice Now

Adda247App |  Adda247 Tamil Youtube

Tamil Engineering Classes by Adda247 Youtube link

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil