General Tamil is Mandatory for all the state Government Exams. We provide quality daily General Tamil quizzes within the syllabus for those who are preparing for the exams.
TNPSC, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் ADDA247தமிழில் தருகிறோம். இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும், தரமான வினாக்கள் உங்களுக்கு நிஜ தேர்வில் கை கொடுக்கும். தினசரி நடப்பு நிகழ்வுகளை தெரிந்து கொண்டு உங்களை நீங்களே மெருகேற்றலாம். இதை உங்களுக்கு மேலும் எளிதாக்க, நாங்கள் உங்களுக்கு உங்கள் தாய் மொழியில்(தமிழில்) தருகிறோம். தொடர் பயிற்சியே வெற்றிக்கான திறவுகோல்.
Q1. செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர்?
- இன்னிசை அளபெடை
- இசை நிறை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q2. செய்யுளில் ஓசை குறையாத விடத்தும் இசை இனிமைக்காக குறில் எழுத்து நெடில் எழுத்தாக மாறி அளபெடுப்பது யாது?
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q3. ஒரு பெயர்ச் சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது யாது?
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q4. “ஏரின் உழாஅர் உழவர் பயலென்னும்
வாவுரி வளங்குன்றிக் கால்” இக்குறட்பாவில் “உழாஅர்” என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q5. உள்ளதூஉம் என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q6. “கெடாஅ என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q7. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதும், எடுப்பதும் என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q8. பெறாஅ என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q9. குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு. தழிஇ என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இயற்கை அளபெடை
Q10. கடாஅ யானை என்னும் சொல்லில் ______________ அளபெடுத்து வந்துள்ளது.
- செய்யுளிசை அளபெடை
- இன்னிசை அளபெடை
- சொல்லிசை அளபெடை
- இசை நிறை அளபெடை
Increase Your Success Rate In The Exams Like TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, மற்றும் அனைத்து தமிழ்நாடு போட்டித் தேர்வுகள்.
DAILY General Tamil Daily Quiz SOLUTIONS
S1. ANS (b)
Sol. இசை நிறை அளபெடை
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
செய்யுளிசை அளபெடையின் வேறு பெயர் – இசை நிறை அளபெடை
S2. ANS (b)
Sol. இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத விடத்தும் இசை இனிமைக்காக குறில் எழுத்து நெடில் எழுத்தாக மாறி அளபெடுப்பது – இன்னிசை அளபெடை
S3. ANS (c)
Sol. சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
ஒரு பெயர்ச் சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது – சொல்லிசை அளபெடை
S4. ANS (a)
Sol. செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
“ஏரின் உழாஅர் உழவர் பயலென்னும்
வாவுரி வளங்குன்றிக் கால்” இக்குறட்பாவில் “உழாஅர்” என்னும் சொல்லில் செய்யுளிசை அளபெடை அளபெடுத்து வந்துள்ளது.
இக்குறட்பாவில் “உழாஅர்” என்னும் சொல் அளபெடுத்து வந்துள்ளது. உழார் என்பது இயல்பான சொல்.
S5. ANS (c)
Sol. சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
உள்ளதூஉம் என்னும் சொல்லில் சொல்லிசை அளபெடை அளபெடுத்து வந்துள்ளது.
S6. ANS (a)
Sol. செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
“கெடாஅ – செய்யுளிசை அளபெடை
S7. ANS (c)
Sol. சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மாற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
கெடுப்பதும், எடுப்பதும் என்னும் சொல்லில் சொல்லிசை அளபெடை அளபெடுத்து வந்துள்ளது. கெடுப்பதும், எடுப்பதும் என்று ஒசை குறையாத இடத்திலும் இனிய ஒசை தருவதற்காகக் குறில் நெடிலாக மாறி அளபெடுப்பது இன்னிசையளபெடை எனப்படும்.
S8. ANS (a)
Sol. செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
பெறாஅ என்னும் சொல்லில் செய்யுளிசை அளபெடை அளபெடுத்து வந்துள்ளது.
S9. ANS (c)
Sol. சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒசை குன்றாத பொழுதும் பெயர்ச் சொல் வினையெச்சப் பொருளைத் தருவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படும்.
குடிதழிஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழிஇ நிற்கும் உலகு.
தழிஇ என்னும் சொல்லில் சொல்லிசை அளபெடை அளபெடுத்து வந்துள்ளது. இக்குறட்பாவில் தழி என்றிருப்பினும் செய்யுளின் ஒசை குறைவதில்லை ‘தழீ’ என்பது தழுவுதல் எனப் பொருள் தரும். பெயர்ச் சொல்லாகும் அச்சொல் ‘தழ்இ’ என அளபெடுத்தால் ‘தழுவி’ என வினையெச்சச் சொல்லாயிற்று.
S10. ANS (d)
Sol. இசை நிறை அளபெடை
செய்யுளில் ஓசையை நிறைவு செய்தற்பொருட்டு சொல்லின் முதல், இடை, கடையிலுள்ள உயிர் நெட்டெழுத்துகள் அளபெடுத்து வருவதைச் செய்யுளிசையளபெடை என்பர். இதற்கு இசை நிறை அளபெடை என்ற வேறு பெயரும் உண்டு.
கடாஅ யானை என்னும் சொல்லில் இசை நிறை அளபெடைஅளபெடுத்து வந்துள்ளது.
***************************************************************************
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை
பதிவிறக்கம் செய்யுங்கள்
To Attempt the Quiz on APP with Timings & All India Rank,
Download the app now, Click here
Adda247 பயன்பாட்டில் இந்த வினாடி வினாவை முயற்சிக்க இங்கே கிளிக் செய்து அகில இந்திய தரவரிசையைப் பெறுங்கள்
Home page | Adda 247 Tamil |
Latest Notification | TNPSC Recruitment 2023 |
Official Website | Adda247 |
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil Youtube
Tamil Engineering Classes by Adda247 Youtube link
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil