Tamil govt jobs   »   Study Materials   »   சுல்தானியம்

டெல்லி சுல்தானியம், காலம், ஆட்சியாளர்கள், வரலாறு

டெல்லி சுல்தானியம்

டெல்லி சுல்தானியம் என்பது பதினொன்றாம் வடஇந்தியாவைக் நூற்றாண்டில் கொள்ளையடித்த துருக்கியக் குதிரைப்படை வீரர்கள் அடுத்த நூற்றாண்டில் கங்கைச் சமவெளியைத் தங்கள் அரசியல் ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றி பெற்றனர். டெல்லி சுல்தானியம்  துணிச்சலும் மூர்க்கக்குணமுமே வெற்றிக்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், தங்களையும் தங்கள் நாட்டையும் காத்துக்கொள்ளத் தவறிய இந்திய அரசர்களின் இயலாமையே அவர்களின் வெற்றிக்கான உண்மைக் காரணங்களாகும். இந்தியர்கள் தங்களிடையே ஒருவர்மேலொருவர் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இஸ்லாமின் தொடக்கக் கால வெற்றிகளையும் அது பரவிவருவதையும் கவனத்தில் கொள்ளத் தவறினர். டெல்லி சுல்தானியம் பற்றி இக்கட்டுரையில் ஒரு சிறு தொகுப்பினை காணலாம்.

டெல்லி சுல்தானியம் – அறிமுகம்

டெல்லி சுல்தானியம்  என்பது 1206 ஆம் ஆண்டு முதல் 1526 ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட பல்வேறு அரசுகளைக் குறிக்கும். பல்வேறு துருக்கிய பஸ்தூனிய வம்சத்தினர் தில்லியில் இருந்து இந்தியாவை ஆண்டனர். இவற்றுள் மம்லுக் வம்சம். (1206-90), கில்சி வம்சம் (1290-1320), துக்ளக் வம்சம் (1320-1413), சையிது வம்சம் (1-41451) லோடி வம்சம் (1451-1526) என்பன அடங்கும். 1526 இல் முகலாயப் பேரரசு சுல்தானகத்தைத் தன்னுள் அடக்கிக்கொண்டது. இக்கட்டுரையில் 5 வகையான  வம்சங்களை பற்றி காணலாம்.

டெல்லி சுல்தானியம் – ஆட்சியாளர்கள்

தில்லி சுல்தானியம் ஒரே மரபைச் சேர்ந்த ஆட்சியாளர்களால் ஆளப்படவில்லை . அதன் ஆட்சியாளர்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள்.

டெல்லி சுல்தானியம்
வம்சங்கள் ஆட்சியாளர்கள் வருடங்கள்

மம்லுக் வம்சம் (1210 – 1290)

சம்சுதீன் இல்துமிஷ்

1210-1236

நசீர் அல் -தீன் முகமது II 1246 – 1266
கியாசுதீன் பால்பன் 1266-1287
 

கில்ஜி வம்சம் (1290-1320)

ஜலாலுதீன் கில்ஜி 1290-1296
அலாவுதீன் கில்ஜி 1296-1316
முபாரக் ஷா கில்ஜி 1316-1320
 

துக்ளக் அரசவம்சம் (1320 – 1324)

கியாசுதீன் துக்ளக் 1320-1324
முகமது -பின் துக்ளக் 1324 – 1351
ஃபெரோஸ் துக்ளக் 1351-1388

சையது அரச வம்சம் (1414- 1451)

கிசர் கான் 1414-1421
 

லோடி அரச வம்சம் (1451-1526)

பஹ்லல் லோடி 1451-1489
சிக்கந்தர் லோடி  1489 – 1517
இப்ராஹிம் லோடி 1517-1526

டெல்லி சுல்தானியம் அடிமை வம்சம் (1206-1290)

இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. அவருக்கு மகன் இல்லாத காரணத்தால் பன்டகன் (இராணுவப் பணிக்காக விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளைக் குறிக்கும் பாரசீகச் சொல்) எனும் தனிவகை அடிமைகளைப் பேணினார். அவர்கள் மாகாண அளவில் ஆளுநர்களாகப் பதவியில் அமர்த்தப்பட்டுப் பின்னர் சுல்தான் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டனர். 1206 இல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார். இவ்வரச மரபு “மம்லுக்” அரச மரபென்றும் அழைக்கப்பட்டது. மம்லுக் எனும் அராபிய வார்த்தைக்கு அடிமை என்று பொருள். குத்புதீன் ஐபக், சம்சுதீன் இல்துமிஷ், கியாசுதீன் பால்பன் ஆகிய மூவரும் இவ்வம்சத்தைச் சேர்ந்த மூன்று மாபெரும் சுல்தான்கள் ஆவர். அடிமை வம்சத்தினர் இத்துணைக்கண்டத்தை எண்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.

டெல்லி சுல்தானியம் – கில்ஜி வம்சம் (1290-1320)

கில்ஜி வம்சம் என்பது 1290 முதல் 1320 வரை தெற்காசியா முழுவதும் பரவியிருந்த ஓர் அரசு ஆகும்.இதைத் தோற்றுவித்தவர் ஜலாலுதீன் கில்ஜி ஆவார். இவர்கள் துருக்கியைச் சார்ந்தவர்கள் ஆகும். தில்லியை ஆண்ட இரண்டாவது வம்சம் கில்ஜி வம்சம் ஆகும். அலாவுதீன் கில்ஜியின் காலகட்டத்தில் இந்தியாவின் மீதான மங்கோலியர்கள் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. கில்ஜிவம்சத்தினர் மத்திய ஆசியாவைச் சார்ந்த துருக்கியர்கள். இவர்கள் தில்லியைக் கைப்பற்றுவதற்கு முன்னர் தற்போதைய ஆப்கானிஸ்தான் பகுதியில் வசித்து வந்தனர். கில்ஜி எனும் சொல் ஆப்கானியக் கிராமம் ஒன்றின் பெயர் ஆகும்.  இவர்கள் ஆப்கானியர்களின் கலாச்சாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றியதால் ஆப்கானிய இனக் குழுக்களுள் ஒன்றாகக் கருதப்பட்டனர். அதன் காரணமாய் இவர்களை துருக்கிய-ஆப்கான் வம்சம் என்று அழைத்தனர் கில்ஜி அரசர்கள் சுல்தான்கள் என அழைக்கப்பட்டனர். இவர்களுள் ஜலானுதீன் பிரோஸ் கில்ஜி, அலாவுதீன் கில்ஜி மற்றும் குத்புதீன் முபாரக் ஆகிய மூவர் மிகவும் முக்கியமான சுல்தான்களாக வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகின்றனர்.

டெல்லி சுல்தானியம் – துக்ளக் வம்சம் (1320 – 1324)

அலாவுதீன் கில்ஜியின் இறப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக டெல்லி சுல்தானியம் பல பகுதிகளை இழக்க நேரிட்டது. அவற்றை மீட்பதே கியாசுதீனுக்குப் பெரும்பணியாக அமைந்தது. கியாசுதீன் துக்ளக் தனது மகன் ஜானாகானை வாராங்கல்லுக்கு எதிராகப் போரிட ஜானாகான் வாராங்கல் அனுப்பிவைத்தார். அரசர் பிரதாப ருத்ரனை வெற்றி கொண்டு கொள்ளையடித்த பெருஞ்செல்வத்தோடு ஊர் திரும்பினார். இச்செல்வத்தைக் கொண்டே கியாசுதீன் துக்ளக் டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் எனும் புதிய நகரை நிர்மாணம் செய்ய அடிக்கல் நாட்டினார்.  இருந்தபோதிலும் அலாவுதீன் தனது மாமனாரை வஞ்சமாகக் கொன்றது போலவே ஜானாகானும் தனது தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. ஜானாகான் முகமதுபின் துக்ளக் எனும் பெயரோடு 1325இல் அரியணை ஏறினார்.

 

டெல்லி சுல்தானியம் – சையது வம்சம் (1414- 1451)

டெல்லி சுல்தானியம் அரசுகளாகச் பல சுதந்திர சிதறுண்டுபோனாலும் முகலாயர் படையெடுப்புவரை 114 ஆண்டுகள் தாக்குப்பிடித்து நின்றது. டெல்லியை விட்டுச் செல்வதற்கு முன்பாகத் தைமூர் தான் கைப்பற்றிய பகுதிகளுக்கு (டெல்லி, மீரட், பஞ்சாப்) கிசிர்கான் என்ற தனது பிரதிநிதியை ஆளுநராக நியமித்துச்சென்றார். அவர் 1414இல் ‘சையது அரச வம்சத்தைத் தோன்றுவித்தார். அவ்வரச வம்சம் 1451 வரை நீடித்தது. அவ்வம்சத்தின் கடைசி சுல்தான் அலாவுதீன் ஆலம் ஷா 1451இல் அரச பதவியைத் துறந்தார். இது சிர்ஹிந்த் (பஞ்சாப்) பகுதியின் ஆளுநராக இருந்த பகலூல் லோடிக்கு டெல்லியின் ‘சுல்தானாகும் வாய்ப்பினை வழங்கியது. அவரே லோடி வம்ச ஆட்சியைத் தோற்றுவித்தார்.

டெல்லி சுல்தானியம் – லோடி வம்சம் (1451-1526)

1489இல் பகலூல் லோடியைத் தொடர்ந்து அவரது மகன் சிக்கந்தர் லோடி சுல்தானாகப் பொறுப்பேற்றார். அவர் – கலைகளையும் கல்வியையும் ஆதரித்தார். ஆக்ரா நகரை நிர்மாணித்த அவர் அந்நகரைத் தலைநகர் ஆக்கினார். அவர் 1517இல் மரணமுற்றதைத் தொடர்ந்து அவருடைய மகன் இப்ராகிம் லோடி அரசப் பதவியேற்றார். இப்ராகிம் லோடி பாபரால் 1526இல் பானிபட் போர்க்களத்தில் தோற்கடிக்கப்பட்டார். இவ்வாறு லோடி அரச வம்சத்திற்கும் டெல்லி சுல்தானியத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்த பாபர் முகலாயப் பேரரசை நிறுவினார்.

டெல்லி சுல்தானியம் – சான்றுகள்

  • அல்-பெருனி: தாரிக்-அல்-ஹிந்த் (அரபு மொழியில் எழுதப்பட்ட இந்திய தத்துவஞானமும் மதமும்)
  • மின்ஹஜ் உஸ் சிராஜ்: தபகத்-இ-நசிரி (1260) (அரபு மொழியில் எழுதப்பட்ட உலக இஸ்லாமிய வரலாறு)
  • ஜியாவுத்தின் பாரனி: தாரிக்-இ-பெரோஸ் ஷாஹி (1357) பெரோஸ் துக்ளக் வரையிலான தில்லி சுல்தான்கள் வரலாறு
  • அமிர் குஸ்ரு: மிஃப்தா உல் ஃபுதூ (ஜலாலுதீன் கில்ஜியின் வெற்றிகள்); கஜைன்; உல் ஃபுதூ (அலாவுதீன் கில்ஜியின் வெற்றிகள் – பாரசீக மொழியில்)
  • துக்ளக் நாமா (பாரசீக மொழியில் துக்ளக் வம்ச வரலாறு)
  • சம்ஸ்-இ-சிராஜ் அஃபிஃப்: தாரிக் இ ஃபெரோஜ் ஷாஹி (தில்லி சுல்தானியம் பற்றிப் பாரசீக மொழியிலுள்ள பாரனியின் பாரனியின் குறிப்புகளை ஒட்டியது)
  • குலாம் யாஹ்யா பின் அஹ்மத்: தாரிக்- இ-முபாரக் ஷாஹி (சையது ஆட்சியாளர் முபாரக் ஷாவின் ஆட்சியில் பாரசீக மொழியில் எழுதப்பட்டது)
  • ஃபெரிஷ்டா: இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியின் வரலாறு (பாரசீக மொழி)

***************************************************************************

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை

பதிவிறக்கம் செய்யுங்கள்

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

To Attempt the Quiz on APP with Timings & All India Rank,

 Home page Adda 247 Tamil
Latest Notification TNPSC Recruitment 2023
Official Website Adda247

Adda247AppAdda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil