Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 29 செப்டம்பர் 2023

செப்டம்பர் 29 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

 • எம் .எஸ். சுவாமிநாதன்
 • நூர் -3 செயற்கைகோள்
 • உலகளாவிய புத்தாக்க குறியீடு

செப்டம்பர் 29ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) எம் .எஸ். சுவாமிநாதன் வாங்கிய விருதுகளை காலவரிசை படுத்துக்க

 1. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது
 2. ராமன் மகசேசே விருது
 3. பத்ம விபூஷன்
 4. யுனெஸ்கோ மகாத்மா காந்தி தங்கப் பதக்கம்

a)2,3,4,1

b)1,2,3,4

c)3,2,4,1

d)4,3,2,1

2) நூர் -3 செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்திய நாடு

a)ஈரான்

b)ஈராக்

c)இஸ்ரேல்

d)தஜிகிஸ்தான்

3) உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் இந்தியாவின் இடம்

a)35

b)40

c)42

d)46

4) 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் வுஷூ போட்டியின் 60 கிலோ எடை மகளிர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

a)ரோஷிவினா தேவி நௌரெம்

b)சனதோய் யும்னம்

c)சப்னா தேவி யும்லெம்பம்

d)சனதோய் தேவி யம்னம்

5) ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட நாகநாத கோவில் அமைந்துள்ள ஊர்

a)மானம்பாடி

b)நல்லிச்சேரி

c)புதுக்குடி

d)செங்கிப்பட்டி

6) சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது உருவான ஆண்டு

a)1954

b)1958

c)1964

d)1968

7) மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி கவர்னர் யார்

a)சர் ஆர்க்கிபால்ட் எட்வர்ட்

b)ஆர்தர் ஓஸ்வால்ட் ஜேம்ஸ் ஹோப்

c)சர் ஜார்ஜ் ஃபிரடெரிக் ஸ்டான்லி

d)சர் அலெக்சாண்டர் கார்டன் கார்ட்யூ

8)அனைத்து மாவட்டங்களிலும் முதன்மை விலங்குகள் மீட்பு மையங்களை அமைக்க எந்த மாநிலம்  திட்டமிட்டுள்ளது

a)ஆந்திர பிரதேசம்

b)கர்நாடகா

c)தமிழ்நாடு

d)மத்திய பிரதேசம்

9) உணவு இழப்பு மற்றும் கழிவுகள் பற்றிய சர்வதேச விழிப்புணர்வு தினம்  அனுசரிக்கப்படுவது

a)செப்டம்பர் 26

b)செப்டம்பர் 27

c)செப்டம்பர் 28

d)செப்டம்பர் 29

10) “பொருளாதார சூழலியலின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்

a)வர்கீஸ் குரியன்

b)எம்.எஸ்.சுவாமிநாதன்

c)அப்துல்கலாம்

d)அமர்த்தியா சென்

 

விடைகள்

1) விடை b)1,2,3,4

எம்.எஸ். சுவாமிநாதன் பெற்ற விருதுகளின் பட்டியல்

 • 1961 இல் சாந்தி ஸ்வரூப் பட்நகர் விருது
 • 1989 இல் பத்ம விபூஷண்
 • 1971 இல் ராமன் மகசேசே விருது
 • 1999 இல் யுனெஸ்கோ மகாத்மா காந்தி தங்கப் பதக்கம்

2) விடை a)ஈரான்

நூர் -3 செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்திய நாடு ஈரான் ஆகும் .விண்வெளியில் படமெடுக்கும் கூடிய தொலையுணர்வு செயற்கைக்கோளான நூர் -3  வெற்றிகரமாக விண்ணுக்கு செலுத்தப்பட்டது .பூமிக்கு 450 கிலோமீட்டர் தொலைவில் இருந்தபடி அந்த செயற்கைகோள் செயல்படும் என அந்த நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார் .

3)  விடை b)40

உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்டுள்ள உலகளாவிய புத்தாக்க குறியீடு 2023 தரவரிசையில் 132 பொருளாதார நாடுகளில்  இந்தியா 40வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. உலகளாவிய புத்தாக்க குறியீட்டில் (ஜிஐஐ) கடந்த சில ஆண்டுகளாக இந்தியா உயர்ந்து வருகிறது. 2015ல் 81வது இடத்திலிருந்து 2023ல் 40வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.மேலும் சுவிட்சர்லாந்து,ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளன .

4) விடை a)ரோஷிவினா தேவி நௌரெம்

19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் வுஷூ போட்டியின் 60 கிலோ எடை மகளிர் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ரோஷிவினா தேவி நௌரெம் ஆவார் .இவர் இறுதி போட்டியில் சீனா வீராங்கனை ஆன  சியோவேயிடம்  போராடி தோற்று வெள்ளி பதக்கத்தை வென்றார்  .ரோஷிவினா தேவி மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் ஆவார் .தான் வென்ற வெள்ளி பதக்கத்தை மணிப்பூர் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கூறினார் .

5) விடை  a)மானம்பாடி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மானம்பாடியில் 1000 ஆண்டுகள் பழமையான நாகநாதசாமி கோவிலை புனரமைக்க தமிழக தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளது. முதலாம் ராஜேந்திர சோழர் கட்டிய இந்த கோயில் கும்பகோணத்தில் அமைந்துள்ளது.  இக்கோவிலில் உள்ள அழகிய கல் சிற்பங்கள் மற்றும் முக்கியமான கல்வெட்டுகளுக்கு களால்  பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது .

6)விடை d)1968

சிறந்த குழந்தை கலைஞருக்கான தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட அமைப்பான திரைப்பட விழாக்களின் இயக்குநரகத்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகளில் ஒன்றாகும்.திரைப்படங்களுக்காக வழங்கப்பட்ட பல விருதுகளில் இதுவும் ஒன்று மற்றும் வெள்ளி தாமரை விருது  உடன் வழங்கப்படுகிறது .இந்த விருது 1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. குழந்தை நட்சத்திரமான பேபி ராணி 1968 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான  “குழந்தைக்காக” திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை கலைஞருக்கான முதல் தேசிய விருதை வென்றார்.

7)விடை  a)சர் ஆர்க்கிபால்ட் எட்வர்ட்

மெட்ராஸ் மாகாணத்தின் கடைசி பிரிட்டிஷ் ஆளுநராக ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் நை இருந்தார். இந்தியா சுதந்திரம் பெறும் வரை மெட்ராஸ் . மாகாணத்தின் ஆளுநராக பதவியில் இருந்தார். .

8)விடை  c)தமிழ்நாடு

எம்.பி. மற்றும் எல்.ஏ. நிதியைப் பயன்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மை கால்நடை பராமரிப்பு மையத்தை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று மீட்பு மையங்களின் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.

 9)விடை d)செப்டம்பர் 29

உணவு இழப்பு மற்றும் கழிவுகளை குறைப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினமான செப்டம்பர் 29 அன்று உலகம் ஒன்றாகக் அனுசரிக்கிறது . உணவு இழப்பு மற்றும் வீணடிப்பு பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அதைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் இது ஒரு வாய்ப்பாகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), மனித நுகர்வுக்காக உற்பத்தி செய்யப்படும் அனைத்து உணவுகளிலும் மூன்றில் ஒரு பங்கு ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்படுகிறது அல்லது வீணடிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

10) விடை  b)எம்.எஸ்.சுவாமிநாதன்

டாக்டர். M. S. சுவாமிநாதன் ஒரு முக்கிய நபராக விளங்குகிறார், நாட்டின் விவசாயத் துறைக்கு அவர் அளித்த கணிசமான பங்களிப்புகளுக்காக “பசுமைப் புரட்சியின் தந்தை” என்று குறிப்பிடப்படுகிறார். சுவாமிநாதனின் சாதனை 1960 களில் கோதுமையின் அதிக மகசூல் வகைகளை (HYV) உருவாக்கியதில் வேரூன்றியுள்ளது. நார்மன் போர்லாக் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒத்துழைத்த அவர் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க முக்கிய பங்காற்றினார். 1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர் பணியாற்றினார். பின்னர் அவர் 1979-1980 வரை இந்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் முதன்மை செயலாளராக பொறுப்பேற்றார். 1982-1988 வரை சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் தலைமை இயக்குநராக இருந்தார். இயற்கை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியத்தின் தலைவராக 1984-1990 வரை இருந்தார் . 2007 முதல் 2013 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் அவரை “பொருளாதார சூழலியலின் தந்தை” என்று அழைத்தது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil