Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 28 செப்டம்பர் 2023

செப்டம்பர் 28 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம்
  • தமிழ்நாடு பல்லுயிர் வாரியம்
  • இந்தியாவின் முதல் கடற்கரை விளக்கம் திருவிழா

செப்டம்பர் 28ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) Why I Am an Atheist என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a)சுபாஷ் சந்திரா போஸ்

b)பகத் சிங்

c)சந்திரசேகர் ஆசாத்

d) ராம் பிரசாத் பிஸ்மில்

2) உலக ரேபிஸ் தினம் அனுசரிக்கப்படுவது

a)செப்டம்பர் 25

b)செப்டம்பர் 26

c)செப்டம்பர் 27

d)செப்டம்பர் 28

3) 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம்

a)பிஸ்வநாத் காட்

b)போச்சம்பள்ளி

c)லத்புரா காஸ்

d) ரெய்க்

4) தமிழகத்தில் சிறந்த சுற்றுலா கிராமம் என மத்திய அரசால் வெண்கல பதக்கம்  வென்ற கிராமம்

a)வேட்டைக்காரன்புதூர்

b)அல்லபாளையம்

c)ஓடந்துறை

d)தேக்கம்பட்டி

5) தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் அமைக்கப்பட்ட ஆண்டு

a)2006

b)2008

c)2010

d)2014

6)2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி முதியோர் மக்கள் தொகையின் சதவீதம்

a)7.5%

b)8.6%

c)9.2%

d)10.8%

7) தமிழக வீரர் விஷ்ணு சரவணன் எந்த விளையாட்டை சார்ந்தவர்

a)இறகுப்பந்தாட்டம்

b)சதுரங்கம்

c)பாய்மர படகு போட்டி

d)துப்பாக்கி சுடுதல்

8) சர்வதேச டென்னிஸ் புகழ் மன்ற  வீரராக பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய வீரர்

a)ரோஹன் போப்பானா

b)லியாண்டர் பாய்ஸ்

c)மகேஷ் பூபதி

d)சானியா மிர்சா

9) ஆஸ்கார் விருதுக்கு தேர்வான முதல் இந்திய திரைப்படம் எது?

a)லகான்

b)காந்தி

c)மதர் இந்தியா

d)சிலம்டாக் மில்லியனயர்

10)இந்தியாவின் முதல் கடற்கரை விளக்கம் விழா எங்கே கொண்டாடப்பட்டது?

a)ஒடிசா

b)கேரளா

c)கோவா

d)மேற்கு வங்கம்

விடைகள்

1) விடை b)பகத் சிங்

Why I Am an Atheist என்ற புத்தகத்தை எழுதியவர் சுகந்திர போராட்ட வீரர் பகத் சிங்க் ஆவார் .1907 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 28 ஆம் நாளில் பிறந்தார் .12 வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலையைப் பார்த்த பகத் சிங், இந்தியாவை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுவிக்க சபதம் எடுத்தார்.அவர் ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பின் உறுப்பினராக இருந்தார். லாலா லஜபதி ராய் தாக்கப்பட்டு இறந்ததைக் கண்ட பிறகு, பகத் சிங்கும் அவரது சக புரட்சியாளர்களும் பழிவாங்குவதாக உறுதியளித்தனர்.பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் லாலாவின் மரணத்திற்கு காரணமான ஜான் பி. சாண்டர்ஸை (ஜேம்ஸ் ஏ. ஸ்காட் என்று தவறாகக் எண்ணி)  போலீஸ் அதிகாரியை கொன்றனர் .மூன்று புரட்சியாளர்களும் மார்ச் 23, 1931  தூக்கிலிடப்பட்டனர்.அவர்களின் மரணம் முழு நாட்டையும் உலுக்கியது மற்றும் மக்களின் இதயங்களில் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியது.அவரது தியாகம் மற்றும் பின்னடைவு பல்வேறு வயதினரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.அவரது மரபு இளைஞர்கள் தவறுக்கு எதிராக நிற்கவும் நீதிக்காக போராடவும் நினைவூட்டுகிறது.அவரது 116 வது பிறந்த தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

2) விடை d)செப்டம்பர் 28

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 28 ஆம் நாள்  அனுசரிக்கப்படுகிறது . உலக ரேபிஸ் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை பறிக்கும் ஒரு கொடிய விலங்கு நோயான ரேபிஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் உலகளாவிய முயற்சியாக செயல்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், “அனைவருக்கும் ஒன்று, அனைவருக்கும் ஒரு ஆரோக்கியம்” (All for one, One health for all ) என்பதாகும்.

.3)  விடை a) பிஸ்வநாத் காட்

அசாமில் உள்ள பிஸ்வநாத் காட் கிராமத்தை 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமமாக சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது. பிஸ்வநாத் சாரியாளி நகரத்தின் தெற்கே அமைந்துள்ள பிஸ்வநாத் காட் என்னும் கிராமம் “குப்த காசி என்று “பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. இந்த பெயர் நகரத்தில் உள்ள பண்டைய பிஸ்வநாத் கோயிலில் இருந்து பெறப்பட்டது மற்றும் புகழ்பெற்ற குப்த பேரரசின் ஆட்சியின் போது காசிக்கு   இணையாக இக்கோவில் பார்க்கப்பட்டது.

4) விடை a)வேட்டைக்காரன்புதூர்

தமிழகத்தில் சிறந்த சுற்றுலா கிராமம் என மத்திய அரசால் வெண்கல பதக்கம் வென்ற கிராமம் கோவை மாவட்டத்தில் உள்ள வேட்டைக்காரன்புதூர் ஆகும் மேலும் நீலகிரி மாவாட்டில் அமைந்துள்ள ஹல்லடா கிராமமும் வெண்கல பதக்கம் வென்றது.

 5) விடை  b)2008

பல்லுயிர்ச் சட்டம் 2002ன் படி, தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் 2008ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்டது. மாநில அரசு சமீபத்தில் தமிழ்நாடு மாநில பல்லுயிர் வாரியத்தை மறுசீரமைத்தது மற்றும் வனத்துறை அமைச்சர் அமைப்பின்  தலைவராக நியமித்தது .தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தின் பணிகள் , மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு, மாநில அரசுக்கு ஆலோசனை வழங்குவதாகும். பல்லுயிரியலைப் பாதுகாத்தல், அதன்  நிலையான பயன்பாடு மற்றும் உயிரியல் வளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகளை சமமாகப் பகிர்ந்து கொள்ளுதல்.

6)விடை b)8.6%

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி முதியோர் மக்கள் தொகையின் சதவீதம் 8.6% ஆகும்.2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வயதான மக்கள் தொகை இரட்டிப்பாகும், 2046-ம் ஆண்டுக்குள் குழந்தைகளை விட அதிகமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியம் அறிக்கை வெளியிட்டுள்ளது .2046 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 0 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை விட வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது. தற்போது, 35 வயதுக்குட்பட்ட இந்தியர்களில் 65% பேர், உலகிலேயே அதிகமான இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இளம் மற்றும் வேலை செய்யும் வயதினரின் மக்கள்தொகை பொருளாதாரத்தை முன்னெடுக்க உதவும் என்ற நம்பிக்கையை உருவாக்குகிறது.ஆனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்காக இருப்பார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

7)விடை  c)பாய்மர படகு போட்டி

தமிழக வீரர் விஷ்ணு சரவணன் பாய்மர படகு போட்டி விளையாட்டை சார்ந்தவர். 19வது  ஆசிய விளையாட்டு போட்டிகளில் பாய்மர படகு போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்றார்.

8)விடை  b)லியாண்டர் பாய்ஸ்

லியாண்டர் பயஸ் சர்வதேச டென்னிஸ் புகழ் மன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட முதல் ஆசிய வீரர் ஆவார். 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் ஆவார் .அவர் 8 இரட்டையர் மற்றும் 10 கலப்பு இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

 9)விடை c)மதர் இந்தியா

ஆஸ்கார் விருதுக்கு  நேரடி தேர்வான முதல் இந்திய திரைப்படம்  மதர் இந்தியா ஆகும். இத்திரைப்படம் 1958 ஆம் ஆண்டு சிறந்த வெளிநாட்டு திரைப்படம்  பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.ஆனால் விருது கிடைக்கவில்லை.2024 ஆம் ஆஸ்கார் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இந்திய அரசு இந்த ஆண்டு வெளி வந்த 2018 என்ற மலையாள மொழி திரைப்படத்தை தேர்வு செய்துள்ளது .

10) விடை  c)கோவா

இந்தியாவின் கலங்கரை விளக்கங்களுக்கான முதலாவது விழா கோவாவில் தொடங்கியது.இந்தியாவின் 75 புகழ்பெற்ற கலங்கரை விளக்கங்களின் வளமான கடல்சார் வரலாற்றைப் புதுப்பிப்பதையும், புகழ்பெற்ற கதைகளை உலகிற்கு வெளிப்படுத்துவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil