செப்டம்பர் 27 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- உலகின் இரண்டாம் மிக பெரிய இந்து கோவில்.
- தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023
- உலக சுற்றுலா தினம்
செப்டம்பர் 27ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) உலகின் இரண்டாம் மிக பெரிய இந்து கோவில் கட்டப்பட்டுள்ள இடம்
a)சிங்கப்பூர்
b)கம்போடியா
c)அமெரிக்கா
d)மலேஷியா
2)ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியா எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் வென்றுள்ளது ?
a)29
b)33
c)37
d)41
3) உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் அனுசரிக்கப்படுவது
a)செப்டம்பர் 25
b)செப்டம்பர் 26
c)செப்டம்பர் 27
d)செப்டம்பர் 28
4) தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ன் படி தமிழக அரசு எத்தனை வருடங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு பெற குறிக்கோளாக வைத்துள்ளது .
a)5
b)10
c)15
d)20
5) 2023 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்படுகிறது
a)வஹீதா ரஹ்மான்
b)கமல்ஹாசன்
c)அமிதாப்பச்சன்
d)ரஜினிகாந்த்
6) இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரி
a)சில்கா ஏரி
b)பழவேற்காடு ஏரி
c)வேம்பநாடு ஏரி
d)லோனர் ஏரி
7)கிராம பஞ்சாயத்தில் நுகர்வோர் தங்கள் வீட்டு வரியை கட்ட ஏதுவாக இணையதளத்தை ஏற்படுத்தி கொடுத்த மாநிலம்
a)கேரளா
b)தமிழ்நாடு
c)கர்நாடகா
d)பஞ்சாப்
8) இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து தொடங்கப்பட்ட இடம்
a)மும்பை
b)டெல்லி
c)புனே
d)பெங்களூரு
9) உலக சுற்றுலா தினம் கடைபிடிப்பது
a)செப்டம்பர் 25
b)செப்டம்பர் 26
c)செப்டம்பர் 27
d)செப்டம்பர் 28
10) 200 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பென்னு எரிகல்லில் இருந்து மாதிரியை பூமிக்கு கொண்டு வந்த நாடு
a)அமெரிக்கா
b)ரஷ்யா
c)இந்தியா
d)ஜப்பான்
விடைகள்
1) விடை c)அமெரிக்கா
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ராபின்ஸ்வில்லி இடத்தில் உள்ள சுவாமிநாராயண அக்ஷர்தாம் கோவில் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இது உலகின் இரண்டாவது பெரிய இந்து கோவிலாகும். கம்போடியாவில் உள்ள அங்கோர் வாட்டைத் தொடர்ந்து இந்தியாவுக்கு வெளியே கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்ன கோயில் உலகின் இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக மாற உள்ளது.
2) விடை d)41
ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்றம் போட்டியில் இந்தியா 41 ஆண்டுகளுக்கு பிறகு தங்க பதக்கம் வென்றுள்ளது. முன்னதாக 1982 ஆம் ஆண்டில் டெல்லியில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்றம் போட்டியில் 3 தங்க பதக்கங்களை வாங்கி குவித்தது பிறகு நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் குதிரையேற்றம் போட்டியில் எந்த தங்க பதக்கமும் இந்தியா வென்றதில்லை .தற்போது இந்திய மீண்டும் 41 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தங்கம் வென்றுள்ளது .
3) விடை b)செப்டம்பர் 26
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 26 அன்று, மனிதர்களுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான சிக்கலான உறவை முன்னிலைப்படுத்த உலக சுற்றுச்சூழல் சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் சுகாதார தினத்தின் கருப்பொருள் “உலகளாவிய சுற்றுச்சூழல் பொது சுகாதாரம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க எழுந்து நிற்பது” என்பதாகும். உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களை தொடர்ந்து எதிர்கொள்வதன் மூலம் ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதற்கான அனைவரின் பொறுப்பை வலியுறுத்துகிறது.
4) விடை a) 5
தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-ன் படி தமிழக அரசு 5 வருடங்களில் 20,000 கோடி ரூபாய் முதலீடு பெற குறிக்கோளாக வைத்துள்ளது .செப்டம்பர் 27ஆம் நாள் உலக சுற்றுலா தினத்தையொட்டி தமிழக அரசு தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 வெளியிட்டது . அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கம் கொண்ட இந்தக் கொள்கை முதலீடுகளை எளிதாக்குவதற்கும், சுற்றுலாத் துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும், அனைவரும் ஈர்க்கும் வகையில் ஊக்கத்தொகைகள் மற்றும் தேவையான ஒழுங்குமுறை சீர்திருத்தங்களை முன்மொழிகிறது.இந்தக் கொள்கையின் மூலம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கான நமது இலக்கை அடைய உதவி புரியும்.
5) விடை a)வஹீதா ரஹ்மான்
2021-ம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல நடிகை வஹீதா ரஹ்மானுக்கு வழங்கப்படுகிறது .நாரி சக்தி வந்தன் அதினியம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூத்த நடிகைக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் (1971) வென்ற இவர் 1972 ஆம் ஆண்டில் இந்திய அரசால் பத்மஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் பின்னர் 2011 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருதைப் பெற்றார்.
6)விடை b)பழவேற்காடு ஏரி
தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு பறவைகள் சரணாலயம் உள்ளது.ஒடிசாவில் உள்ள சில்கா ஏரிக்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் சுற்றுச்சூழல் அமைப்பாக பழவேற்காடு ஏரி உள்ளது.இந்த சரணாலயம் அதிக பூநாரை பறவைகளுக்கு பெயர் பெற்றது.
7)விடை b)தமிழ்நாடு
தமிழக அரசு கிராமங்களில் வசிப்பவர்கள் வரி செலுத்த இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள நுகர்வோர் தங்கள் வீட்டு வரி, தண்ணீர் கட்டணம், தொழில் வரி மற்றும் வரி அல்லாத வருவாய்களை செலுத்த முடியும். இந்த இணையதளம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
8)விடை b) டெல்லி
இந்தியாவின் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்து புது டெல்லியில் தொடங்கப்பட்டது .இந்தியாவை ஒரு உலகளாவிய தளத்திற்கு கொண்டு செல்வதிலும் தொழில்நுட்பங்களுக்கான உலகளாவிய மையமாக மாறுவதையும் எரிசக்தியில் தன்னிறைவை அடைவதை இந்த முன்னெடுப்பு உறுதி செய்யும் இந்தியாவில் பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பசுமை ஹைட்ரஜன் இயக்கம், வளர்ச்சி மற்றும் முன்னேறும் பாதையில் உள்ளது. கார்பன் இல்லாத பொருளாதாரத்திற்கு மாறுவதில் ஹைட்ரஜன் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் மேலும் காலநிலை மாற்றத்தை குறைக்க உதவும்.
9)விடை c)செப்டம்பர் 27
உலக சுற்றுலா தினம் 2023 உலகளவில் செப்டம்பர் 27 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இது ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பால் (UNWTO) தொடங்கப்பட்டது. சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வதற்கும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் ” சுற்றுலா மற்றும் பசுமை முதலீடு’ ஆகும்.
10) விடை a)அமெரிக்கா
பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் சுற்றி வரும் ‘பென்னு’ எனப்படும் எரிகல்லில் இருந்து மண் எடுத்து வந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா புதிய சாதனையை படைத்துள்ளது இதற்கான வேலைகளை நாசா கடந்த 2016இல் ஆரம்பித்தது. இதற்காக ஒசைரிஸ்- ரெக்ஸ் என்ற விண்கலனை நாசா விண்ணுக்கு அனுப்பியது. 200 கோடி கிமீ தொலைவில் இருக்கும் அந்த எரிகல்லைச் சென்றடையவே ஒசைரிஸ்- ரெக்ஸ் விண்கலனுக்கு நான்கு ஆண்டுகள் ஆனது. அதன்படி 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் நாள் எரிகல்லில் மாதிரி எடுக்கப்பட்டது.ஒசைரிஸ்- ரெக்ஸ் விண்கலம் தற்போது அந்த மாதிரிகளை பூமிக்கு அனுப்பிவைத்தது .