செப்டம்பர் 26 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- சோழ அருங்காட்சியகம்
- முக்கூர்த்தி தேசியப் பூங்கா
- புலிகள் சரணாலயம்
செப்டம்பர் 26ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றிய முதல் மசோதா
a)125வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
b)126வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
c)127வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
d)128வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
2) இந்திய மகளிர் கிரிக்கெட் அணி எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்று உள்ளது ?
a)ஒன்று
b)இரண்டு
c)மூன்று
d)நான்கு
3) 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை இந்தியாவில் எத்தனை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கின்றன
a)20
b)25
c)30
d)34
4) பிரம்மாண்ட சோழ அருங்காட்சியகம் தமிழகத்தில் எங்கு அமைய உள்ளது
a)திருச்சி
b)தஞ்சாவூர்
c)அரியலூர்
d)நாமக்கல்
5) மின்சார வாகனம் உற்பத்தி மையமாக எந்த மாநிலம் அதன் இலக்கை நெருங்கி கொண்டிருக்கிறது ?
a)மணிப்பூர்
b)பஞ்சாப்
c)தமிழ்நாடு
d)தெலுங்கானா
6) 2023 ஆம் ஆண்டுக்கான ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது யாருக்கு வழங்கப்பட்டது
a) பெருமாள் முருகன்
b)ஸ்வாதி நாயக்
c)தேவிகா ரெகே
d)அனிருத் கனிஷெட்டி
7) முக்கூர்த்தி தேசியப் பூங்கா அமைந்துள்ள இடம்
a)திண்டுக்கல்
b)சேலம்
c)நீலகிரி
d)கோவை
8)தற்போது வரை இந்தியாவில் புலிகள் சரணாலயம் எண்ணிக்கை
a)51
b)52
c)53
d)54
9) SIMBEX-2023 ராணுவ பயிற்சியில் ஈடுபடும் நாடுகள்
a)இந்தியா மற்றும் சிங்கப்பூர்
b)இந்தியா மற்றும் மலேசியா
c)இந்தியா மற்றும் தாய்லாந்து
d) இந்தியா மற்றும் வங்கதேசம்
10) தூய்மை இந்தியா திட்டம்(ஸ்வச் பாரத் திட்டம்) தொடங்கப்பட்ட ஆண்டு
a) 2014
b) 2015
c) 2016
d) 2017
விடைகள்
1) விடை d)128வது அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 128 வது அரசியலமைப்பு திருத்த சட்ட மசோதா செப்டம்பர் 20 மற்றும் 21 நாளில் மக்களவையில் மற்றும் மாநிலங்கவையில் நிறைவேற்றப்பட்டது .நாரி சக்தி வந்தன் அதினியம் (மகளிர்க்கு அதிகாரம் வழங்கும் சட்டம் ) என்று இம் மசோதாவிற்கு பெயிரிடப்பட்டுள்ளது .புதிய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய முதல் மசோதா இது ஆகும் .இந்த மசோதா சட்டமாக மாறும் போது மக்களவையில் உறுப்பினர்கள் 82ல் இருந்து 181 ஆக அதிகரிப்பர் .மேலும் இந்த மசோதா மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையில் மறுவரைக்குப் பிறகே இடஒதுக்கீடு அமலாகும் மற்றும் 2024 ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இது செயல்பாடுக்கு வர வாய்ப்பில்லை என தெரிவிக்கபட்டுள்ளது
2) விடை a)ஒன்று
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கபதக்கம் வென்று உள்ளது . ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டி 2010ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய மகளிர் மற்றும் ஆடவர் கிரிக்கெட் அணி முதன் முறையாக 2023ஆம் ஆண்டுக்கான 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்குபெற்று உள்ளது . இதில் மகளிர் கிரிக்கெட் அணி இறுதி போட்டியில் இலங்கை அணியை 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றியுள்ளது .
3) விடை d) 34
2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் மொத்தம் 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி கொண்டிருக்கின்றன.செப்டம்பர் 24 ஆம் நாளில் இந்திய பிரதமர் மேலும் ஒன்பது வந்தே பாரத் ரயில்களை தொடங்கி வைத்தார் . மொத்தமாக 34 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயங்கி வருகின்றன . இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் ரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு படியாகும்.ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இந்த ஒன்பது ரயில்கள் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி – மதுரை – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும் மற்றும் திருப்பதி யாத்திரை மையத்திற்கு சிறந்த இணைப்பை வழங்கும்.
4) விடை b)தஞ்சாவூர்
தஞ்சாவூரில் பிரம்மாண்ட சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று தமிழக மாநில நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தையும், தென்னிந்தியாவின் சில பகுதிகளையும் ஆண்ட சோழ வம்சத்தினருக்கு இந்த அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு அருகில் 20 ஏக்கர் நிலத்தில் இந்த அருங்காட்சியகம் கட்டப்பட உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் சோழர் காலத்து சிற்பங்கள், வெண்கலங்கள், கல்வெட்டுகள் மற்றும் நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு கலைப்பொருட்கள் வைக்கப்படும்.
5) விடை c) தமிழ்நாடு
மின்சார வாகனம் உற்பத்தி மையமாக தமிழக மாநிலம் அதன் இலக்கை நெருங்கி கொண்டிருக்கிறது.இந்தியாவில் 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆனது . விற்பனை ஆன வாகனங்களில் 4 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் தமிழகத்தில் தயாரிக்கப்பட்டவை ஆகும். 2025ம் ஆண்டுக்குள் மின்சார வாகன உற்பத்தித் துறையில் 50,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்படும் என்று தமிழக அரசு எதிர்பார்க்கிறது. 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களிலும் 30 சதவீதத்தை உற்பத்தி செய்து உலகளாவிய ஏற்றுமதிக்கு கணிசமாக பங்களிப்பதை தமிழகத்தின் இலக்காகக் கொண்டுள்ளது.
6)விடை a) பெருமாள் முருகன்
2023 ஆம் ஆண்டுக்கான ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது தமிழ் இலக்கியத்திற்கு சிறப்பு பங்களிப்பை வழங்கிய பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது.
7)விடை c)நீலகிரி
முக்கூர்த்தி தேசியப் பூங்கா தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது .நீலகிரி வரையாடு இப்பகுதிக்கே உரித்தான விலங்கு. இப்பூங்கா முன்னர் வரையாட்டின் ஆங்கிலப் பெயரான நீலகிரி தார் தேசியப்பூங்கா என்றறியப்பட்டது.இப்பகுதி கானுயிர்க் காப்பகமாக 1982 ஆகஸ்ட் 3-ஆம் நாளும் பின்னர் 1990 அக்டோபர் 15-இல் தேசியப்பூங்காவாகவும் தரமுயர்த்தப்பட்டது.முகூர்த்தி தேசியப் பூங்காவில் நடைபெறும் வேட்டையாடுதல் சம்பவங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இப்பகுதியின் விலைமதிப்பற்ற வனவிலங்குகளைப் பாதுகாக்கவும் தமிழ்நாடு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
8)விடை d)54
மத்தியப் பிரதேச அரசு வீரங்கனா துர்காவதி புலிகள் காப்பகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மாநிலத்தின் ஏழாவது புலிகள் காப்பகமாகவும், இந்தியாவில் 54வது புலிகள் காப்பகமாகவும் மாறியுள்ளது.
9)விடை a)இந்தியா மற்றும் சிங்கப்பூர்
இந்தியக் கடற்படைக் கப்பல்களான ரன்விஜய் மற்றும் கவராட்டி மற்றும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சிந்துகேசரி ஆகியவை 30வது சிங்கப்பூர் இந்தியா கடல்சார் இருதரப்புப் பயிற்சியின்(SIMBEX) பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு வந்தன. இது 1994 முதல் நடத்தப்பட்டு வரும் இந்தியக் கடற்படைக்கும் சிங்கப்பூர் கடற்படைக்கும் இடையிலான வருடாந்திர இருதரப்புப் பயிற்சியாகும்.
10) விடை a) 2014
திட்டம் | தூய்மை இந்தியா திட்டம் |
ஆண்டு | 2 அக்டோபர் 2014 |
அமைச்சகம் | குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் (கிராமப்புறம்) மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல அமைச்சகம் (நகர்ப்புறம்) |
நோக்கம் | · திறந்த வெளியில் மலம் கழிப்பதை ஒழிக்கவும் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தவும் திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத (ODF) கிராமங்களை உருவாக்கவும் |