Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 25 செப்டம்பர் 2023

செப்டம்பர் 25 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • 19வது “யுத் அபயாஸ்-23”
  • அந்தியோதயா தினம்
  • நீலகிரி வரையாடு

செப்டம்பர் 25ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) ஒரே நாடு ஒரே தேர்தல் சிறப்பு குழுவின் உறுப்பினர்  எண்ணிக்கை

a) 5

b) 6

c) 7

d) 8

2) இலக்கியம் ஒரு பூக்காடு என்ற நூலை எழுதியவர்

a) தமிழ் ஒளி

b) ஜெயகாந்தன்

c) சிலம்பொலி செல்லப்பன்

d) அம்பை

3) 19வது “யுத் அபயாஸ்-23” ராணுவ பயிற்சியில் ஈடுபடும் நாடுகள்

a) இந்தியா மற்றும் இங்கிலாந்து

b) இந்தியா மற்றும் அமெரிக்கா

c) இந்தியா மற்றும் ஜப்பான்

d) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

4) பொருளாதார சுகந்திர குறியீட்டில் இந்தியாவின் தரவரிசை

a) 83வது இடம்

b) 85வது இடம்

c) 87வது இடம்

d) 89வது இடம்

5) சமீபத்தில் கண்டுபிடித்த புதிய வகை உயிரினமான கடல் டார்ட்டிகிரேட்ஸ் விஞ்ஞானிகள் யார் பெயரை வைத்தனர் ?

a) எ.பி.ஜே அப்துல் கலாம்

b) சி.வி .ராமன்

c) எம்.எஸ்.சுவாமிநாதன்

d) விக்ரம் சாராபாய்

6) 2023 ஆம்  ஆண்டுக்கான உலக மசாலா நறுமண பொருட்கள் மாநாடு நடைபெற்ற இடம்

a)நவி மும்பை

b)நாக்பூர்

c)புனே

d)ஜெய்ப்பூர்

7) ஐ2யு 2 கூட்டமைப்பு உறுப்பினர்கள்

a)இந்தியா ,ஈரான் ,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா

b)இந்தியா ,ஈராக்  ,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா

c)இந்தியா இஸ்ரேல்,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா

d)இந்தியா ,இந்தோனேஷியா  ,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா

8) அந்தியோதயா தினம் கடைபிடிக்கப்படுவது

a)செப்டம்பர் 22

b)செப்டம்பர் 23

c)செப்டம்பர் 24

d)செப்டம்பர் 25

9) நீலகிரி வரையாடு IUCN பட்டியலில் எந்த  நிலையில் உள்ளது ?

a) காடுகளில் அழிந்தவை

b) கடுமையான அருகியநிலை

c) அருகியநிலை

d) பாதிப்படக்கூடியவை

10) ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு

a) 2018

b) 2019

c) 2020

d) 2021

 

விடைகள்

1) விடை d) 8

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற கொள்கையை வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற தேர்தலில்  நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது .இக்குழுவில் தலைவருடன் சேர்த்து  8  உறுப்பினர்கள் உள்ளனர் .

உறுப்பினர்களின் பட்டியல்

1.ராம்நாத் கோவிந்த் – முன்னாள் குடியரசு தலைவர்

2.அமித் ஷா – உள்துறை அமைச்சர்

3.அதிர் ரஞ்சன் சௌத்ரி-மக்களவை எதிர்க்கட்சி தலைவர்

4.என் .கே .சிங் -15வது நிதி ஆணையத்தின் தலைவர்

5.குலாப் நபி ஆசாத் – மாநிலங்கவையின் முன்னாள் தலைவர்

6.சுபாஷ் .சி .காஷ்யப் – முன்னாள் மக்களவையின் செயலாளர்

7.ஹரிஷ் சால்வே – மூத்த வழக்கறிஞர்

8.சஞ்சய் கோத்தாரி – முன்னாள் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைவர்

2) விடை c) சிலம்பொலி செல்லப்பன்

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார் . நாமக்கல் மாவட்டம் சிவியாம் பாளையம் எனும் ஊரில் 1929 ஆம் ஆண்டு டிசம்பர் 22 நாளில் பிறந்தார். இவர் உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் என பல பணிகளை புரிந்தவர். சிலம்பொலி, பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் முதலிய பல நூல்களை எழுதியிருக்கிறார். தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய “சிலம்பொலியாரின் அணிந்துரைகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சமீபத்தில் இவரது சிலையை தமிழக முதல்வர் நாமக்கல் மாவட்டத்தில்  திறந்து வைத்தார்.

3)  விடை b) இந்தியா மற்றும் அமெரிக்கா

அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள வெயின்ரைட் துறைமுகத்தில் செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 8 வரை 19வது “யுத் அபயாஸ்” பயிற்சி நடத்தப்பட உள்ளது. இது இந்திய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் இணைந்து ஆண்டுதோறும் மேற்கொள்ளும் பயிற்சியாகும்.இரு நாட்டின் ராணுவம் பங்கேற்கும் முந்தைய 18வது பயிற்சி கடந்த 2022 நவம்பரில் இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவுலியில் நடத்தப்பட்டது.

4) விடை c) 87வது இடம்

பொருளாதார சுதந்திர குறியீட்டில் 165 நாடுகளில் இந்தியா 87வது இடத்தில் உள்ளது. கனடாவின் ஃப்ரேசர் இன்ஸ்டிடியூட் மற்றும் புது தில்லியில் உள்ள சிவில் சொசைட்டி மையம் இணைந்து வெளியிட்ட “உலகப் பொருளாதார சுதந்திரம்: 2021 ஆண்டு அறிக்கை” இந்தியாவில் வெளியிடப்பட்டது. சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் சுவிட்சர்லாந்து முறையே 1வது, 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.

 5) விடை  a) எ.பி.ஜே அப்துல் கலாம்

கொச்சியில் உள்ள  அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (CUSAT) ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ள புதிய கடல் டார்டிகிரேட் இனத்திற்கு  மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும் விஞ்ஞானியுமான ஏபிஜே அப்துல் கலாமின் பெயரை வைத்துள்ளனர்.

6)விடை  a)நவி மும்பை

14வது உலக நறுமண பொருட்கள் மாநாடு  (WSC) நவி மும்பையில் உள்ள வஷியில் நடந்தது. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் துணை நிறுவனமான உலக நறுமண பொருட்கள்  வாரியம்  பல வர்த்தக அமைப்புகள் மற்றும் ஏற்றுமதி மன்றங்களுடன் இணைந்து இந்த ஏற்பாடு செய்துள்ளது.உலகின் ‘நறுமண பொருட்களின்  கிண்ணம்’ என்று அடிக்கடி குறிப்பிடப்படும் இந்தியா அதிகமான உயர்தர, அரிய மற்றும் மருத்துவ நறுமண பொருட்களை உற்பத்தி  செய்கிறது . உலக நறுமண பொருட்கள் மாநாடு (WSC) இந்திய நறுமண பொருட்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

7)விடை  c)இந்தியா இஸ்ரேல்,ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா

இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஐ2யு2 குழுமம்  புதிய விண்வெளி முன்னெடுப்பு  ஒன்றனை செயல்படுத்த உள்ளது . கொள்கை உருவாக்கம்,நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு பரந்த அளவிலான பயன்பாடுகளைக் கொண்ட ஒரு புதிய விண்வெளி அடிப்படையிலான கருவியை உருவாக்குவதை இந்த  விண்வெளி முன்னெடுப்பின் நோக்கமாகக் கொண்டுள்ளது.

8)விடை  d) செப்டம்பர் 25

பண்டிதர் தீனதயாள் உபாத்யாவின்  பிறந்த நாளான செப்டம்பர் 25ம் நாளை அந்தியோதயா தினம் என மத்திய  அரசு அறிவித்தது .அந்தியோதயா என்பது சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட மக்களை  உயர்த்துவது மற்றும் அவர்களை மேம்பட செய்வது ஆகும்.

9)விடை c) அருகியநிலை

நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.இது  நீலகிரி மலைகள் மற்றும் கேரள மாநிலங்களில் இருக்கும்  மேற்கு மற்றும் கிழக்கு பள்ளத்தாக்கின்  தென் பகுதியில்  வாழ்கிறது .இவ்விலங்கை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்  “அருகியநிலை”  உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது.

10) விடை  d)2021

திட்டம் ஆயுஷ்மான் பாரத் மின்னணு இயக்கம்
ஆண்டு 27 செப்டெம்பர்  2021
அமைச்சகம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நோக்கம்
  • ·         மின்னணு சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்குள் ஒருங்கிணைப்புத் திறனை செயல்படுத்தும் ஒரு தடையற்ற ஆன்லைன் தளத்தை உருவாக்குதல்
  • நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் மின்னணு சுகாதார தீர்வுகளை இணைக்கும். இத்திட்டம் மருத்துவமனைகளின் செயல்பாடுகளை எளிதாக்குவதோடு மட்டும் அல்லாமல், எளிதாக வாழ்வதையும் அதிகரிக்கும்.
  • ஒவ்வொரு குடிமகனும், டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டையை பெற முடியும் மற்றும் அவர்களின் சுகாதார பதிவுகள், டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்படும்.

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil