Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 23 செப்டம்பர் 2023

செப்டம்பர் 23 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • தேசிய மருத்துவ ஆணையம்
  • உலகத் திறன் உச்சி மாநாடு
  • பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம்

செப்டம்பர் 23ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) சர்வதேச  காதுகேளாதோர் வாரம் அனுசரிக்கப்படுவது

a) செப்டம்பர் 4 முதல் 10 வரை

b) செப்டம்பர் 11 முதல் 17 வரை

c) செப்டம்பர்18 முதல் 24 வரை

d) செப்டம்பர் 25 முதல் 30வரை

2) தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு

a) 2005

b) 2010

c) 2015

d) 2020

3) “மக்கள் ஜி 20” மின் புத்தகம்  வெளியிட்ட அமைச்சகம்

a) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

b) காடுகள் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம்

c) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

d) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

4) 2023 ஆம் ஆண்டு பருவநிலை குறிக்கோள்  உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது?

a)ஜெனீவா

b)வாஷிங்டன்

c)நியூயார்க்

d)பாரிஸ்

5) 2024 ஆம் ஆண்டு  ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன?

a) பாரிஸ்

b) லாஸ் ஏஞ்சல்ஸ்

c) லண்டன்

d) மெல்போர்ன்

6) 2023 ஆண்டுக்கான  உலகத் திறன் உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது

a)புது டெல்லி

b)ஜெய்ப்பூர்

c)அகமதாபாத்

d)வாரணாசி

7) 2023 ஆம் ஆண்டுக்கான நார்மன் போர்லாக் விருது வென்றவர்

a) ஸ்வாதி நாயக்

b) சத்யா நாராயணன்

c) சுரிந்தர் சேகல்

d) ஜெயசங்கர்

8) 108 அடி கொண்ட ஆதிசங்கரர் சிலை எந்த மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது?

a) கர்நாடகா

b) கேரளா

c) உத்தரபிரதேசம்

d) மத்திய பிரதேசம்

9) சர்வதேச சைகை மொழி தினம் அனுசரிக்கப்படுவது

a) செப்டம்பர் 20

b) செப்டம்பர் 21

c) செப்டம்பர் 22

d) செப்டம்பர் 23

10) பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

a) 24 பிப்ரவரி 2019

b) 2 அக்டோபர் 2019

c) 15 ஆகஸ்ட் 2020

d) 26 ஜனவரி 2021

 

விடைகள்

1) விடை c) செப்டம்பர் 18 முதல் 24 வரை

2023 ஆம் ஆண்டில்  சர்வதேச காது கேளாதோர் வாரம்  செப்டம்பர் 18 முதல் 24 வரை அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை உலக காது கேளாதோர் தினம் அல்லது சர்வதேச காது கேளாதோர் தினமாக கொண்டாடப்படுகிறது. (செப்டம்பர் 24, 2023) சர்வதேச காது கேளாதோர்  வாரம் (IWDP) என்பது முதன்முதலில் இத்தாலியின் ரோமில் 1958ஆம் ஆண்டில்  உலக கூட்டமைப்பு  காது கேளாதோரால் (WFD) தொடங்கப்பட்டது.

2) விடை d) 2020

தேசிய மருத்துவ ஆணையம்  2020 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. மருத்துவ கல்விக்கான உலக கூட்டமைப்பிலிருந்து (WFME) 10 ஆண்டு அங்கீகாரம் பெற்றதன் மூலம் இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் இந்தியாவின் மருத்துவ கல்வித் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்த அங்கிகாரம் முலமாக ,தேசிய மருத்துவ ஆணையத்தின் கீழ் செயல்படும் நாடு முழுவதும் உள்ள 706 மருத்துவ கல்லூரிகளும் மருத்துவ கல்விக்கான உலக கூட்டமைப்பின் அங்கீகாரம் கீழ் வந்துவிடும் .அதுபோல, அடுத்த 10 ஆண்டுகளில் புதிதாக தொடங்கப்படும் மருத்துவ கல்லூரிகளும் தானாக உலக கூட்டமைப்பின்அங்கீகாரத்தின்  கீழ் வந்துவிடும் . இந்த அங்கீகாரம் மூலம் , இந்தியாவில் வழங்கப்படும் மருத்துவ கல்வியின் தரம் மேம்படும் மற்றும் இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்பை முடிக்கும் மாணவர்கள் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில்  முதுகலை படிப்பு மற்றும் மருத்துவ பயிற்சியைத் தொடர உதவும்.

3)  விடை a) தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவம் தொடர்பான “மக்கள் ஜி 20” என்ற மின்நூலை புதுதில்லியில்  வெளியிட்டார்.இந்த நூல் இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தின் முழுமையான பயணத்தை முன்வைக்கிறது. இந்த புத்தகம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதல் பகுதி,  புதுதில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடைபெற்ற மாபெரும் ஜி 20 உச்சிமாநாட்டைப் பற்றியதாகும்.இரண்டாவது பகுதி பல்வேறு பணிக்குழுக் கூட்டங்கள் தொடர்பான சுருக்கத் தகவல்களையும், இந்தியா தலைமைத்துவப் பொறுப்பேற்றதிலிருந்து கூட்டங்கள் தொடர்பான சுருக்கமான தகவல்களையும் வழங்குகிறது.இந்த மின்நூலின் கடைசிப் பகுதியில், இந்தியாவின் ஜி 20 தலைமைத்துவத்தை மக்கள் பங்களிப்பு கொண்ட இயக்கமாக மாற்றி நாடு முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்படங்களுடன் கூடிய கட்டுரைத் தொகுப்புகளை வழங்குகிறது.

4) விடை c)நியூயார்க்

செப்டம்பர் 21 அன்று நியூயோர்க்கில்  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் நடைபெற்ற பருவநிலை குறிக்கோள்  உச்சி மாநாடு (CAS) உலகளாவிய கார்பன் உமிழ்வு குறைப்பு முயற்சிகளை பற்றி முன்னெடுப்புகளை  உறுப்பினர்கள் பேசினர் உலகளாவிய பசுமை குடில்  வாயு உமிழ்வுகளில் 42 சதவீதத்திற்கும் பொறுப்பான சீனா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் இந்த முக்கியமான மாநாட்டில் பங்குகொள்ளவில்லை .பாரிஸ் உடன்படிக்கையின் 1.5°C டிகிரி இலக்கை நிலைநிறுத்துவதற்கும், காலநிலை நீதியை மேம்படுத்துவதற்கும் நம்பகமான நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகளைக் கொண்ட தலைவர்களை வெளிப்படுத்துவதை இந்த  பருவநிலை குறிக்கோள்  உச்சி மாநாடு  நோக்கமாகக் கொண்டுள்ளது.

 5) விடை  a) பாரிஸ்

2024 ஆம் ஆண்டு  ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை  நடைபெறுகிறது மேலும் 2028 ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் மற்றும் 2032  ஒலிம்பிக் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரிலும் நடைபெற உள்ளது . 2021 ஆண்டு  டோக்கியோவில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய 7(1 தங்கம்,2 வெள்ளி 3 வெண்கலம் ) பதக்கங்கள் வென்றது .

6)விடை  a)புது டெல்லி

2023 ஆண்டுக்கான  14வது உலகத் திறன் உச்சி மாநாடு புது டெல்லியில்  நடைபெற்றது.  திறன்களை வளர்ப்பது, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் நல்ல  எதிர்காலத்தை உருவாக்குவது ஆகியவை இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும் . இந்தியாவில் உயர்தரத் தொழில் சார்ந்த திறன் வளர்ச்சிக்கான இலக்கை  அடைவதில்  இந்த உச்சிமாநாட்டின்  நோக்கம் ஆகும்.

7)விடை  a) ஸ்வாதி நாயக்

2023 ஆம் ஆண்டுக்கான நார்மன் போர்லாக் விருது வென்றவர் ஒடிஷா மாநிலத்தை சார்ந்த ஸ்வாதி நாயக் ஆவார் நார்மன் போர்லாக் ‘பசுமை புரட்சியின் தந்தை’  ஆவார் . எந்த காலநிலையிலும் பயிர்கள் தாங்குதல் மற்றும் சத்தான அரிசி வகைகளை உருவாக்குதல்  மற்றும் தேவைக்கேற்ப அரிசி விதை முறைகளில் விவசாயிகளை ஈடுபடுத்துவதற்கான அவரது புதுமையான அணுகுமுறையால் இந்த விருது வழங்கப்பட்டது .

8)விடை  d) மத்திய பிரதேசம்

8ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஆதி சங்கராச்சாரியாரின் 108 அடி உயர சிலையை மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வரரில்  மத்தியப் பிரதேச முதல்வர்  திறந்து வைத்தார்.

9)விடை d) செப்டம்பர் 23

மனித உரிமைகளை நிலைநிறுத்துவதில் சைகை மொழியின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் பொதுச் சபை செப்டம்பர் 23 ஆம் நாள் -ஐ சர்வதேச சைகை மொழிகள் தினமாக அறிவித்துள்ளது .இந்த ஆண்டுக்கான கருப்பொருள் “எல்லா இடங்களிலும்  ,எங்கு வேண்டுமானாலும் காது கேளாதோர் சைகை செய்யக்கூடிய உலகம்” என்பதாகும். இந்த கருப்பொருள் சைகை மொழிகளின் ஒருங்கிணைக்கும் சக்தியை வலியுறுத்துகிறது. காது கேளாதோர் சமூகங்கள், அரசாங்கங்கள் மற்றும் பொது சமூக அமைப்புகளுக்கு அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

10) விடை  a) 24 பிப்ரவரி 2019

பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 கொண்டுவரப்பட்டது .இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு ரூபாய் 6,000 நிதி உதவி அளிக்கப்படும்.மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் AI சாட்போட் அறிமுகப்படுத்தியது இந்த சாட்போட் விவசாயிகள் திட்டத் தகவல்களை எளிதாக அணுகவும், குறைகளை நிவர்த்தி செய்வதற்கான திறமையான செயல்முறையை எளிதாக்கவும் உதவுகிறது.

 

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil