செப்டம்பர் 22 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- விக்யான் பிரதிபா விருது.
- நடமாடும் திறன் வளர்ப்பு திட்டம்.
- தமிழக சிறுதானிய திட்டம்.
செப்டம்பர் 22ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) இந்திய அரசியலமைப்பில் இதுவரை எத்தனை அரசியலமைப்பு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன
a) 102
b) 103
c) 104
d) 105
2) இந்தியாவில் எத்தனை சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன
a) 50
b) 51
c) 52
d) 53
3) 2023ம் ஆண்டுக்கான விக்யான் பிரதிபா விருதை வென்ற இஸ்ரோ திட்ட இயக்குனர்
a) மயிலசாமி அண்ணாதுரை
b) வீரமுத்துவேல்
c) சுப்பையா அருணன்
d) முத்தையா வனிதா
4) உலக காண்டமிருக தினம் அனுசரிக்கப்படுவது
a) செப்டம்பர் 20
b) செப்டம்பர் 21
c) செப்டம்பர் 22
d) செப்டம்பர் 23
5) விக்ரம் லேண்டர் நிலவில் தரையங்கிய நாள்
a) ஆகஸ்ட் 20,2023
b) ஆகஸ்ட் 21,2023
c) ஆகஸ்ட் 22,2023
d) ஆகஸ்ட் 23,2023
6) 2023 ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர்கான 53 கிலோ பிரிவில் வெண்கலம் வென்ற வீராங்கனை
a) அன்டிம் பங்கல்
b) கீதா போகத்
c) சாக்ஷி மாலிக்
d) பபிதா குமாரி
7) சரோஜா வைத்தியநாதன் பத்மபூஷன் பெற்ற ஆண்டு
a) 2011
b) 2012
c) 2013
d) 2014
8) தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுவது
a) பிப்ரவரி 25
b) பிப்ரவரி 26
c) பிப்ரவரி 27
d) பிப்ரவரி 28
9) நடமாடும் திறன் வளர்ப்பு (Skill on Wheels) என்னும் திட்டத்தை தொடங்கிய அமைச்சகம்
a) கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
b) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம்
c) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
d) பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம்
10) தமிழக சிறுதானிய திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு
a) 2014-2015
b) 2015-2016
c) 2016-2017
d) 2017-2018
விடைகள்
1) விடை d) 105
இந்திய அரசியலமைப்பில் இதுவரை 105 அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முதல் அரசியலமைப்பு திருத்த சட்டம் 1950 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது .கடைசியாக 105 வது அரசியலமைப்பு திருத்த சட்டம் 2021 ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பு சார்ந்தவர்களை (OBC)அடையாளம் காணும் மாநில அரசுகளின் திறனை மீட்டெடுப்பதே 105வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் நோக்கமாகும்.
2) விடை d) 53
இந்தியாவில் மொத்தம் 53 சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன . 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாளில் இந்திய பிரதமர் உத்தரபிரசே மாநிலத்தில் உள்ள வாரணாசியில் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் முதல் முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி பம்பாயில் உள்ள ஜிம்ஹானா மைதானம் டிசம்பர் 1933 ஆண்டில் இந்தியா-இங்கிலாந்து இடையே டெஸ்ட் போட்டியாக நடந்தது. இந்தியாவில் முதல் ஒருநாள் போட்டி 1981 ஆம் ஆண்டில் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியாவில்முதல் டி20 போட்டி 2007 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது.
3) விடை b) வீரமுத்துவேல்
2023ம் ஆண்டுக்கான விக்யான் பிரதிபா விருதை வென்ற இஸ்ரோ திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் ஆவார். இவர் சந்திரயான்- 3 திட்டத்தின் இயக்குனர் ஆவார் .மத்திய பிரதேசத்தில் அமைந்துள்ள போபாலில் 10வது அறிவியல் கண்காட்சியில் இந்த விருது கொடுக்கப்பட்டது . மேலும் வந்தே பாரத் திட்டத்தின் தலைமை கட்டிடக் கலைஞர் சுதான்சு மணி மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் டாக்டர் ராமா ஜெயசுந்தர் இருவருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது .
4) விடை c) செப்டம்பர் 22
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக காண்டாமிருக தினம் காண்டாமிருக இனங்களின் நெருக்கடியான நிலைமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றின் பாதுகாப்பிற்காக வாதிடுவதற்கும் நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியாகும்.
5) விடை d) ஆகஸ்ட் 23,2023
விக்ரம் லேண்டர் நிலவில் தரையங்கிய வரலாறு சிறப்புமிக்க நாள் ஆகஸ்ட் 23ம் நாள் ஆகும் . நிலவின் தென் துருவத்தில் தரையங்கிய முதல் நாடு இந்தியா என்ற சாதனை படைத்தது . விக்ரம் லேண்டரில் இருந்து வெளி வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வுகளை ஆகஸ்ட் 23ம் நாள் தொடங்கி செப்டம்பர் 3ம் நாள் வரை மேற்கொண்டது. நிலவின் வெப்பநிலை மாற்றத்தால் செப்டம்பர் 4 ஆம் நாள் உறக்க நிலைக்கு சென்றது . செப்டம்பர் 22 ஆம் நாள் முதல் நிலவில் சூரிய ஒளி வந்தததும் மீண்டும் செயல்படும் என இஸ்ரோ குறிப்பிடப்பட்டுள்ளது.
6)விடை a) அன்டிம் பங்கல்
செர்பியாவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர்கான 53 கிலோ பிரிவில் அன்டிம் பங்கல் வீராங்கனை வெண்கலம் வென்றார் .இதன் மூலம் பதக்கம் வென்ற 5வது வீராங்கனை ஆகியிருக்கிறார் அன்டிம் பங்கல் .முதல் நால்வர் கீதா போகத் (2012- வெண்கலம் ),பபிதா குமாரி (2012- வெண்கலம் ), பூஜா தன்டா (2018- வெண்கலம் ) மற்றும் வினேஷ் போகத் (2019,2022- வெண்கலம் ) ஆவர் .
7)விடை c) 2013
பிரபல பரதநாட்டிய கலைஞர் சரோஜா வைத்தியநாதன் 86 வயதில் மறைந்தார்.இவர் பரதநாட்டிய மற்றும் கர்நாடக இசையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றினார் .இந்திய அரசு இவருக்கு 2002 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2013ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் அளித்தது .
8)விடை d) பிப்ரவரி 28
1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி இந்திய இயற்பியலாளர் சர் சி வி ராமன், ராமன் விளைவைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதி இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.மேலும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் துறையில் ‘தேசிய அறிவியல் விருதுகள்’ என்ற பெயரில் புதிய தேசிய விருதுகளை அரசு அறிவித்துள்ளது.அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளின் பல்வேறு துறைகளில் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் தனித்தனியாக அல்லது குழுக்களாக செய்த குறிப்பிடத்தக்க மற்றும் ஊக்கமளிக்கும் பங்களிப்பை அங்கீகரிப்பதே தேசிய அறிவியல் விருதின் நோக்கமாகும்.விருதுகள் பின்வரும் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும்:-
- அறிவியல் ரத்னா விருது- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் செய்யப்பட்ட வாழ்நாள் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும்.
- அறிவியல் ஸ்ரீ விருது- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும்.
- அறிவியல் இளையோர் -சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் அசாதாரண பங்களிப்பை வழங்கிய 45 வயது வரையிலான இளம் விஞ்ஞானிகளை அங்கீகரித்து ஊக்குவிக்கும்.
- அறிவியல் குழு விருது- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் எந்தவொரு துறையிலும் ஒரு குழுவில் பணியாற்றி அசாதாரண பங்களிப்பை வழங்கிய மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் அல்லது ஆராய்ச்சியாளர்கள் அல்லது கண்டுபிடிப்பாளர்கள் அடங்கிய குழுவுக்கு வழங்கப்படும்.
9)விடை a) கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம்
நடமாடும் திறன் வளர்ப்பு (Skill on Wheels) என்னும் திட்டத்தை தொடங்கியது கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் .கிராமப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதும் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புச் சந்தையின் சவால்களை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்தத் திட்டம் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் (NSDC) மற்றும் இந்துஸ்இண்ட் வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
10) விடை a) 2014-2015
தமிழக சிறுதானிய திட்டம் துவங்கப்பட்ட ஆண்டு 2014-2015 ஆகும் . இந்த திட்டத்தின் நோக்கம் தமிழக மக்களிடையே சிறுதானிய நுகர்வை ஊக்குவித்தல், அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ,புதிய மற்றும் புத்தாக்க சிறுதானிய சார்ந்த பொருட்களை உருவாக்குதல் ஆகும் .
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil