Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 20 செப்டம்பர் 2023

செப்டம்பர் 20 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா.
  • 42வது இந்திய யுனெஸ்கோ பாரம்பரிய தளம்.
  • டிஜிட்டல் வாழ்க்கைத் தர குறியீடு.

செப்டம்பர் 20ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) பழைய பாராளுமன்றத்தின் மற்றொரு பெயர்

a) சன்சட் பவன்

b) சம்விதான் சதன்

c) ராஜ் பவன்

d) ராஷ்ட்ரிய பவன்

2) மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதா

a) 125

b) 126

c) 127

d) 128

3) இந்தியாவில் எத்தனை முறை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன

a) ஒன்று

b) இரண்டு

c) மூன்று

d) நான்கு

4) சர்வதேச சிகப்பு  பாண்டா  தினம் அனுசரிக்கப்படுவது

a) செப்டம்பர் 15

b) செப்டம்பர் 16

c) செப்டம்பர் 17

d) செப்டம்பர் 18

5) 50வது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி

a)யஷ்வந்த்  விஷ்ணு சந்திரசுட்

b)உதய் லலித்

c)தனஞ்சய யஸ்வந்த்  சந்திரசுட்

d)ரஞ்சன் கோகோய்

 6) 42வது இந்திய யுனெஸ்கோ பாரம்பரிய தளம்

a) சாந்திநிகேதன்

b) ஹொய்சாளர் கோவில்கள்

c) ஆக்ரா கோட்டை

d) மஹாபலிபுரம்

7) தண்ணீர் தரத்தை கண்டறிய கையடக்க கருவியை வடிவமைக்க உள்ள தொழில்நுட்பம் நிறுவனம்

a) ஐஐடி டெல்லி

b) ஐஐடி ஹைதெராபாத்

c) ஐஐடி மும்பை

d) ஐஐடி மெட்ராஸ்

8) டிஜிட்டல் வாழ்க்கை தர குறியீட்டில் இந்தியாவின் இடம்

a) 51 வது

b) 52 வது

c) 53 வது

d) 54 வது

9) இந்திய கிரிக்கெட் அணி எத்தனை முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது

a)5

b)6

c)7

d)8

10) சர்வதேச சமஊதிய நாள் அனுசரிக்கப்படுவது

a) செப்டம்பர் 15

b) செப்டம்பர் 16

c) செப்டம்பர் 17

d) செப்டம்பர் 18

விடைகள்

1) விடை b) சம்விதான் சதன்

பழைய பாராளுமன்றத்தின் மற்றொரு பெயர் சம்விதான் சதன் ஆகும் .இந்தியாவின் ஜனநாயக பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பைக் குறிக்கும் வகையில், முன்னாள் நாடாளுமன்ற கட்டடத்திற்கு ‘சம்விதான் சதன்’ அல்லது ‘அரசியலமைப்பு இல்லம் ‘ என புதிய பெயரை இந்திய பிரதமர் வெளியிட்டார் .பிரிட்டிஷ் கட்டிடக் கலைஞர்களான சர் எட்வின் லூட்டியன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டு 1927 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்ட இந்த பாராளுமன்றம்  இந்திய அரசியலமைப்பின் வரைவு மற்றும் நிறைவேற்றுதல் உள்ளிட்ட இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தருணங்களில் சிலவற்றைக் கண்டது.

2)  d) 128

மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் 128 வது அரசியலமைப்பு திருத்த சட்ட மசோதா 19 செப்டம்பர் அன்று தாக்கல் செய்யப்பட்டது .நாரி சக்தி வந்தன் அதினியம் (மகளிர்க்கு அதிகாரம் வழங்கும் சட்டம் ) என்று பெயிரிடப்பட்டுள்ளது .இந்த மசோதா சட்டமாக மாறும் போது மக்களவையில் உறுப்பினர்கள் 82ல்  இருந்து 181 ஆக அதிகரிப்பர் .மேலும் இந்த மசோதா மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் அடிப்படையில் மறுவரைக்குப் பிறகே இடஒதுக்கீடு அமலாகும் மற்றும் 2024 ம்  ஆண்டு மக்களவை தேர்தலுக்கு இது செயல்பாடுக்கு வர வாய்ப்பில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.

3)  விடை b) இரண்டு

ஆசிய விளையாட்டு போட்டிகள்  1951ஆம் ஆண்டு மற்றும் 1982 என இரண்டு முறை இந்தியாவில் உள்ள புது டெல்லியில் நடைபெற்றது முதலாவது (1951)ஆசிய  போட்டிகள் நடைபெற்ற இடம் புது டெல்லி ஆகும். 19வது  ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெறவுள்ளது . இதில் 655 இந்திய விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர் . 20வது  ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோய நகரில் 2026ஆம்  ஆண்டு நடைபெற உள்ளது .

4) விடை b) செப்டம்பர் 16

சர்வதேச சிகப்பு  பாண்டா  தினம் செப்டம்பர் 16 நாளில் அனுசரிக்கப்படுகிறது .ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று, இந்த அழகான உயிரினங்களின் அவல நிலையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சர்வதேச சிகப்பு  பாண்டாதினத்தைக் அனுசரிக்க உள்ளது. 2010 ஆம் ஆண்டில் ரெட் பாண்டா குழு அமைப்பால்  தொடங்கப்பட்ட இந்த வருடாந்திர அனுசரிப்பு பல ஆண்டுகளாக முக்கியத்துவம் பெற்று வருகிறது  குறிப்பாக புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளும் போது முக்கியத்துவம் பெறுகிறது.

 5) விடை  c)தனஞ்சய யஸ்வந்த்  சந்திரசுட்

50வது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தனஞ்சய யஸ்வந்த்  சந்திரசுட் ஆவார் .இவர் 2024 நவம்பர் 10 ம் நாள் வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆக பொறுப்பில் வகிப்பார் . இவரது தந்தை யஷ்வந்த்  விஷ்ணு சந்திரசுட் 16வது இந்திய உச்சநீதிமன்ற தலைமை  நீதிபதியாக இருந்தார்.   இதற்கு முன் 49வது இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உமேஷ் லலித் இருந்தார்.

6)விடை  b) ஹொய்சாளர் கோவில்கள்

கர்நாடகாவில் உள்ள பெலூர், ஹலேபிட் மற்றும் சோமனந்த்புரம்  ஆகிய பிரபலமான ஹொய்சாலா கோயில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவின் 42வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இந்த பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேட்டனுக்கும் 41வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக சேர்க்கப்பட்டுள்ளது.

7)விடை  d) ஐஐடி மெட்ராஸ்

தண்ணீர் தரத்தை கண்டறிய கையடக்க கருவியை ஐஐடி மெட்ராஸ் வடிவமைக்கும் திட்டத்தை ஐஐடி மெட்ராஸ்  முன்னெடுத்துள்ளது   . இந்தியாவில் உள்ள 36,000க்கும் மேலான கிராம குடியிருப்பு பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் புளோரைடு ,ஆர்சனிக் போன்ற ஆபத்தான வேதி பொருட்கள் கலந்தன்மையால் மனித  உடல் பாதிப்பு அடைவதாக ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது மேலும் மண்ணில்  நச்சு தன்மை கொண்ட வேதி பொருட்கள் சேர்ந்துள்ளதால் உப்புத்தன்மை கலந்து மண்ணின் தரம் பாதிக்கப்படுகிறது. மேலும்,வேளாண் நிலங்களில் விளைச்சல் குறைவதுடன் மனித  உடல் பாதிப்பை ஏற்படுத்துகிறது .இதை தவிர்க்கும் வகையில் மண் மற்றும் தண்ணீரின் தரத்தை கண்டறிய கையடக்க கருவியை  வடிவமைக்கும் முன் முயற்சியை ஐஐடி மெட்ராஸ்  முன்னெடுத்துள்ளது.

8)விடை  b) 52 வது

2023ம் ஆண்டுக்கான  டிஜிட்டல் வாழ்க்கை தர குறியீட்டில் இந்தியா 52வது இடத்தை பிடித்துள்ளது.பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகளை தளமாகக் கொண்ட சைபர் பாதுகாப்பு நிறுவனமான சர்ப்ஷார்க், “டிஜிட்டல் வாழ்க்கைத் தர குறியீடு 2023” ஐ வெளியிட்டது.ஐந்து அடிப்படை டிஜிட்டல் தூண்களின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்துகின்றன.

அவை :

  1. இணையம் மலிவு
  2. இணைய தரம்
  3. மின்னணு உள்கட்டமைப்பு
  4. மின்னணு பாதுகாப்பு
  5. மின்னணு அரசு.

முறையே பிரான்ஸ் ,பின்லாந்து மற்றும் டென்மார்க் முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இந்தியா 2022ம் ஆண்டுக்கான  டிஜிட்டல் வாழ்க்கை தர குறியீட்டில் 59வது இடத்தை பிடித்துள்ளது.

9)விடை  d)8

இந்திய கிரிக்கெட் அணி 8வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியது .  இலங்கையில்   நடந்த இறுதிபோட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .

10) விடை  d) செப்டம்பர் 18

செப்டம்பர் 18 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச சம ஊதிய தினம்  சம மதிப்புள்ள பணிக்கான சம ஊதியத்திற்கான தொடர்ச்சியான போராட்டத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய அனுசரிப்பாகும்.ஐக்கிய நாடுகள் சபை 2020 ஆம் ஆண்டில் செப்டம்பர் 18 அன்று முதல் சர்வதேச சம ஊதிய தினத்தை அறிவித்தது  ஊதிய சமத்துவத்திற்கான உலகளாவிய போராட்டத்தை  இந்த தினம்  குறிக்கிறது.

 

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil