செப்டம்பர் 19 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- ஆதித்யா -L1
- சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினம்
- தூய்மை இருவார விழா -2023
செப்டம்பர் 19ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) இலங்கைத் தமிழர்களுக்கு தமிழக அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தை தொடங்கிய இடம்
a) மேல்மொணவூர், வேலூர் மாவட்டம்
b) கீழக்கரை ,இராமநாதபுரம் மாவட்டம்
c) அமரபுரம்,தூத்துக்குடி மாவட்டம்
d )குமாரபுரம் ,கன்னியாகுமரி மாவட்டம்
2) ஆதித்யா எல் -1விண்ணுக்கு செலுத்தப்பட்ட நாள்
a) செப்டம்பர் 1,2023
b) செப்டம்பர் 2,2023
c) செப்டம்பர் 3,2023
d) செப்டம்பர் 4,2023
3) இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் எந்த விளையாட்டை சார்ந்தவர் ?
a) வில்வித்தை
b) சதுரங்கம்
c) துப்பாக்கி சுடுதல்
d) டென்னிஸ்
4) உலக மூங்கில் தினம் அனுசரிக்கப்படுவது
a) செப்டம்பர் 15
b) செப்டம்பர் 16
c) செப்டம்பர் 17
d) செப்டம்பர் 18
5) இறால் பயிர் காப்பீடு திட்டத்தின் அமைச்சகம்
a) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம்
b) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
c) மீன்வளம் ,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்
d) காடுகள் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம்
6) சமீபத்தில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள அட்ரெயபுரம் பூதர்க்குழு என்னும் இனிப்பின் மாநிலம்
a) தெலுங்கானா
b) கேரளா
c) கர்நாடகா
d) ஆந்திர பிரதேசம்
7) உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிதம் இட ஒதுக்கீடு வழங்கிய அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
a) 72 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
b) 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
c) 74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
d) 75 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
8) தி எடர்னல் கணேசா என்னும் நூலை எழுதியவர்
a) கீதா மேத்தா
b) விக்ரம் சேத்
c) ரஸ்கின் பாண்ட்
d) அருந்ததி ராய்
9) சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினம் அனுசரிக்கப்படுவது
a) செப்டம்பர் 15
b) செப்டம்பர் 16
c) செப்டம்பர் 17
d) செப்டம்பர் 18
10) ‘தூய்மை இருவார விழா -2023′ திட்டத்தை தொடங்கிய அமைச்சகம்
a) ரயில்வே துறை அமைச்சகம்
b) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
c) மீன்வள துறை ,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்
d) காடுகள் மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சகம்
விடைகள்
1) விடை a)மேல்மொணவூர், வேலூர் மாவட்டம்
1591 இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு இலவச வீடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் காணொலி காட்சி முறையில் தொடங்கி வைத்தார்.முதல் கட்டமாக வேலூர் மாவட்டம் உள்ள மேல்மொணவூரில் இந்த இலவச வீட்டுமனை திட்டம் ஆரம்பிக்க உள்ளது
2) b) செப்டம்பர் 2,2023
2023ம் ஆண்டில் செப்டம்பர் 2ம் நாளன்று இஸ்ரோ அமைப்பு ஆதித்யா எல் -1 விண்கலத்தை விண்ணுக்கு செலுத்தியது . தற்போது ஆதித்யா எல் -1 விண்கலம் புவிவட்டப்பாதையில் விடுவிக்கப்பட்டு சூரியனின் எல் -1 பகுதியை நோக்கி பயணத்தை ஆரம்பித்து உள்ளது .110 நாள் பயணத்திற்கு பின்னர் சூரியனின் எல் -1 பகுதியை அடைந்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் .
3) விடை c) துப்பாக்கி சுடுதல்
இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன் துப்பாக்கி சுடுதல் போட்டியில் விளையாடுபவர் ஆவார் .பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டீ ஜெனிரோவில் நடந்த 2023 துப்பாக்கி சுடுதல் உலக கோப்பை மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்க பதக்கத்தை வென்றார்.இவரின் பூர்விகம் தமிழகம் ஆகும்
4) விடை d) செப்டம்பர் 18
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 18 அன்று உலக மூங்கில் நாளாக கொண்டாடப்படுகிறது. மூங்கில் மரம் நிலையான வளர்ச்சி, வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கலாச்சார பாதுகாப்பில் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. உலக மூங்கில் தினம் என்பது மூங்கில் பயன்கள் மற்றும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் அதனின் பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு தளமாக செயல்படுகிறது. 2009ம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று 8 வது உலக மூங்கில் மாநாட்டின் தலைவர்கள் அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 18 நாளை உலக மூங்கில் தினமாக அறிவித்தனர்
5) விடை c) மீன்வளம் ,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்
திட்டம் | இறால் பயிர் காப்பீடு திட்டம் |
ஆண்டு | 2023 |
அமைச்சகம் | மீன்வளம் ,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் |
நோக்கம் | இறால் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல். இறால் பண்ணை வைத்திருக்கும் விவசாயிகளுக்கு கடனுதவி மற்றும் நிதி உதவி வழங்குதல் |
6)விடை d) ஆந்திர பிரதேசம்
ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அட்ரெயபுரம் பூதர்க்குழு என்கிற இனிப்பு பண்டதிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது .
7)விடை b) 73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்
73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் மசோதா 1991 ஆண்டு நரசிம்மராவ் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது . 1992ம் ஆண்டு இம்மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறின .73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 11-வது அட்டவணை இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது . சட்டப்பிரிவுகள் 243 முதல் 243O வரை பஞ்சாயத் ராஜ் அமைப்புகள் .தொடர்பான விதிகள் சேர்க்கப்பட்டது . இந்த திருத்த சட்டம் 1993ம் ஆண்டு ஏப்ரல் 24ம் நாள் நடைமுறைக்கு வந்தது .இத் திருத்தச் சட்டத்தில் 243-D சட்டப்பிரிவு உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிதம் இட ஒதுக்கீடு பற்றி குறிப்பிடுகிறது. புதிய பாராளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவிதம் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
8)விடை a) கீதா மேத்தா
தி எடர்னல் கணேசா என்னும் நூலை எழுதியவர் கீதா மேத்தா ஆவார் . கீதா மேத்தா 2023ம் ஆண்டு செப்டம்பர் 16 நாளில் மறைந்தார் . இவர் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் சகோதரி ஆவர். இவர் எழுதிய பிற நூல்கள் கர்மா கோலா ,ரிவேர் சூத்ரா அடங்கும் .
9)விடை b) செப்டம்பர் 16
சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினமாக2023ம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாள் அனுசரிக்கப்படுகிறது. சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினம் பாரம்பரியமாக செப்டம்பர் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையன்று நடைபெறுகிறது. முதல் சர்வதேச கடலோர சுத்திகரிப்பு தினம் 1986 இல் அனுசரிக்கப்பட்டது. கடல்களில், கடலோரப் பகுதிகளில் மற்றும் கடற்கரைகளில் குவிந்துள்ள குப்பைகள் பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தல் தினத்தின் கருப்பொருள் கடலின் மாற்றமாகும் .
10) விடை a) ரயில்வே துறை அமைச்சகம்
‘தூய்மை இருவார விழா -2023’ திட்டத்தை தொடங்கிய அமைச்சகம் ரயில்வே அமைச்சகம் ஆகும். தூய்மை இருவார விழா செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 2, 2023 வரை அனுசரிக்கப்படுகிறது. பயோ-டாய்லெட் பயன்பாடு, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது மற்றும் தூய்மைப் பழக்கங்களைக் கடைப்பிடிப்பது குறித்து மக்களுக்குக் கற்பிக்க டிஜிட்டல் ஊடகங்கள் / பொது அறிவிப்புகள் மூலம் விரிவான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது .ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுத்தமான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்காக, சுத்தமான தண்டவாளங்களுக்கு வழிவகுக்கும் ரயில் பெட்டிகளில் பயோ டாய்லெட்டுகள், மக்கும் / மக்காத குப்பைகளை பிரித்தல், திடக்கழிவு மேலாண்மை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்தல் போன்ற பல முன்முயற்சிகளை இதுவும் ஒரு முன்னெடுப்பு ஆகும் .
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil