Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 18 செப்டம்பர் 2023

செப்டம்பர் 18  TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • பிரதம மந்திரி விஸ்வகர்மா கவுஷல் சம்மன் திட்டம்
  • சர்வதேச மாநாடு கண்காட்சி மையம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

செப்டம்பர் 18ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) சமூகநீதி நாள் கடைப்பிடிக்கும் தினம்

a) செப்டம்பர் 15

b) செப்டம்பர் 16

c) செப்டம்பர் 17

d) செப்டம்பர் 18

2) பிரதம மந்திரி விஸ்வகர்மா கவுஷல் சம்மன் திட்டத்தின் அமைச்சகம்

a) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம்

b) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

c) பழங்குடியினர் அமைச்சகம்

d) பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகம்

3) தமிழக விமான நிலையங்களின் எண்ணிக்கை

a)5

b)6

c)7

d)8

4) புதிய பாராளமன்ற கட்டிடத்தின் மறு பெயர்

a) சன்சத் பவன்

b) ராஷ்ட்ரிய பவன்

c) நிர்வச்சன் சதன்

d) ராஜ் பவன்

5) சர்வதேச மாநாடு கண்காட்சி மையம் அமைந்துள்ள இடம்

a) மும்பை

b) கான்பூர்

c) புது டெல்லி

d) கொல்கத்தா

6) TrackD என்கிற மொபைல் செயலி அறிமுகப்படுத்திய மாநிலம்

a) கர்நாடகா

b) கேரளா

c) ஆந்திரபிரதேசம்

d) தமிழ்நாடு

7) மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அறிமுகப்படுத்திய ஆண்டு

a) 2016

b) 2017

c) 2018

d) 2019

8) நிக்சய மித்ரா திட்டம் திட்டத்தின் அமைச்சகம்

a) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம்

b) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

c) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

d) பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாடு அமைச்சகம்

9) குறத்தியரை குடைவரை கோயில் அமைந்துள்ள மாவட்டம்

a) கன்னியாகுமரி

b) விருதுநகர்

c) புதுக்கோட்டை

d) தூத்துக்குடி

10) சாந்திநிகேதன் அமைந்துள்ள மாநிலம்

a) அசாம்

b) மேற்குவங்கம்

c) ஹரியானா

d) பஞ்சாப்

 

விடைகள்

1) விடை b) செப்டம்பர் 17

சமூக சீர்திருத்தவாதி மற்றும்  திராவிட இயக்கத்தை  தோற்றுவித்த பெரியார் என  மக்கள் அனைவராலும் அழைக்கப்படுகின்ற E.V ராமசாமி1879 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17 நாளில் பிறந்தார் .  இப்பிறந்த தினத்தை தமிழக அரசு 2021ம் ஆண்டு முதல் செப்டம்பர் 17 சமூக நீதி நாளாக கடைபிடிக்கிறது.

2)  a) குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம்

தச்சர்,கொல்லர்,பொற்கொல்லர்,பானை வனைவோர் ,முடி திருத்துவோர் ,பொம்மை தயாரிப்போர் உள்ளிட 18 வகையான பாரம்பரிய சார்ந்த தொழில்களை மேற்கொள்பவருக்கு பயிற்சியுடன் நிதி உதவி மற்றும் கடன்  உதவி வழங்கும் திட்டமான பிரதம மந்திரி விஸ்வகர்மா கவுஷல் சம்மன் என்னும் விஸ்வகர்மா திட்டம் 2023 ஆண்டில் 17 செப்டம்பரில் துவக்கிவைக்கப்பட்டது.

திட்டம் பிரதம மந்திரி விஸ்வகர்மா கவுஷல் சம்மன் திட்டம்
ஆண்டு 17 செப்டம்பர் 2023
அமைச்சகம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம்
நோக்கம் ·         பாரம்பரிய கைவினைகளின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் அதனை மேம்படுத்துதல்

·         கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர செய்தல்

3)  விடை b) 6

தமிழகத்தில் மொத்தம் 6 விமான நிலையங்கள் உள்ளன.

அவை :

  • சென்னை சர்வதேச விமான நிலையம்
  • கோவை சர்வதேச விமான நிலையம்
  • மதுரை சர்வதேச விமான நிலையம்
  • திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்
  • தூத்துக்குடி விமான நிலையம்
  • சேலம் விமான நிலையம்

4) விடை a) சன்சத் பவன்

புதிய பாராளமன்ற கட்டிடத்தின் மறு பெயர் சன்சத் பவன் ஆகும்.2023ம் ஆண்டு மே 23ம் நாள் புது டெல்லியில் திறக்கப்பட்டது .முதன்முறையாக முதல் சிறப்பு கூட்டத்தொடர்  இப் புதிய பாராளமன்றத்தில்   செப்டம்பர் 18 முதல் செப்டம்பர் 22 வரை நடக்கவுள்ளது .

 5) விடை  c) புது டெல்லி

புது டெல்லியில்  5400 கோடி செலவில் சர்வதேச மாநாடு கண்காட்சி மையம் கட்டப்பட்டுள்ளது .இம்மையம் 2023 ஆண்டில் 17 செப்டம்பர்  அன்று இந்திய பிரதமர்  திறந்து வைத்தார் மேலும்  இம்மையத்திற்கு இந்திய பிரதமர் யசோதாபூமி என்று பெயர் வைத்தார் .

6)விடை  d) தமிழ்நாடு

குற்றம் புரிந்தவர்கள் மேலும் சமூக விரோதிகளை கண்காணிக்கும் தொழில்நுட்பமாக ”TracKD”  என்கிற மொபைல் செயலி தமிழக போலீசார்  அறிமுகப்படுத்தியுள்ளனர் மற்றும் 30,000 குற்றவாளிகளின் தகவல்களை தரவுத்தளமாக மற்றும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களை தடுக்கவும் மற்றும் குறைக்கவும் முடியும்

7)விடை  b) 2017

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை  2017ஆம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ளது . இந்த அடையாள அட்டையில் 18 எண்கள் உள்ளன .இந்த அடையாள அட்டை மூலம் மத்திய அரசு அதன் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் துறைகள் மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் பலன்களைப் மாற்றுத்திறனாளிகள் பெற முடியும் .

 8)விடை  c) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

திட்டம் நிக்சய மித்ரா திட்டம்
ஆண்டு 2022
அமைச்சகம் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
நோக்கம் காசநோய் சிகிச்சையில் உள்ளவர்களுக்கு கூடுதல் நோயறிதல், ஊட்டச்சத்து மற்றும் தொழில்சார் ஆதரவை உறுதி செய்தல் மற்றும் 2025க்குள் நாட்டை காசநோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.

9)விடை     a) கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாண்டிய காலத்து குறத்தியரை குடைவரை  கோவிலை தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவித்துள்ளது..

 10)விடை  b) மேற்குவங்கம்

யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மேற்குவங்கத்தில் சாந்திநிகேதன் சேர்க்கப்பட்டுள்ளது .இதன்மூலம்  இந்தியாவில் உள்ள   உலகப் பாரம்பரிய சின்னங்கள் 41-ஆக அதிகரித்துள்ளது .பீர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்திநிகேதன் தேசிய கீதம் எழுதிய ரவீந்திரநாத் தாகூரால் இங்கு நிறுவப்பட்டுள்ளது மேலும் 1921ஆம் ஆண்டு விஸ்வபாரதி கல்வி நிலையமும் இங்கு ரவீந்திரநாத் தாகூரால் நிறுவப்பட்டுள்ளது.

 

 

**************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil