செப்டம்பர் 16 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- உலக ஓசோன் தினம்
- தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம்
- ஜல் ஜீவன் திட்டம்
செப்டம்பர் 16ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) ஏடீஸ் கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்
a) மலேரியா
b) டெங்கு
c) நிபா
d) காலரா
2) மீண்டும் மஞ்சப்பை திட்டம் தொடங்கப்பட்ட நாள்
a)23 செப்டம்பர் 2020
b)23 அக்டோபர் 2021
c)23 நவம்பர் 2020
d)23 டிசம்பர் 2021
3) கோபல்ல கிராமத்து மக்கள் என்னும் நாவலை எழுதியவர்
a)அப்துல் ரகுமான்
b)கி. ராஜநாராயணன்
c)பிரபஞ்சன்
d)ஆதவன்
4) ஜல் தன்(Jal Dhan) பிரச்சாரத்தை துவங்கிய தொழில்நுட்ப கழகம்
a) ஐஐடி மெட்ராஸ்
b) ஐஐடி மும்பை
c) ஐஐடி ஹைதெராபாத்
d) ஐஐடி டெல்லி
5) உலக ஓசோன் தினம்
a) செப்டம்பர் 13
b) செப்டம்பர் 14
c) செப்டம்பர் 15
d) செப்டம்பர் 16
6) தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டத்தின் அமைச்சகம்
a) காடுகள் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம்
b) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்
c) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
d) மின் துறை அமைச்சகம்
7) அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டவர்
a) சஞ்சய் மிஸ்ரா
b)ராகுல் நவீன்
c)மோனிகா சர்மா
d) சுனில் குமார் யாதவ்
8) ஜல் ஜீவன் திட்டம் துவங்கப்பட்ட நாள்
a)ஆகஸ்ட் 15 2018
b)ஜனவரி 26 2019
c)ஆகஸ்ட் 15 2019
d)ஜனவரி 26 2020
9) தமிழ்நாட்டை தொடர்ந்து பள்ளிகளுக்கு இலவச காலை உணவு திட்டம் கொண்டு வரும் மாநிலம்
a) ஆந்திர பிரதேசம்
b) கர்நாடகா
c) தெலுங்கானா
d) கேரளா
10) குலசேகரப்பட்டினம் அமைந்துள்ள மாவட்டம்
a) தூத்துக்குடி
b) திருநெல்வேலி
c) விருதுநகர்
d) புதுக்கோட்டை
விடைகள்
1) விடை b) டெங்கு
ஏடிஸ் ஏஜிப்டி கொசுக்கள் மூலம் பரவக்கூடிய நோய்கள் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல் மஞ்சள் காய்ச்சல் வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் ஆகும் . தமிழ்நாடு மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க மாநில அரசு பல்வே று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் வைரஸ் மூலமாக பரவி வருகிறது . இந்த வைரஸ் ஃபிளாவி இனத்தை சேர்ந்தது .இதன் அறிகுறிகள் தலை வலி , காய்ச்சல் , உடல் சோர்வு மற்றும் வயிற்று போக்கு ஆகும்.
2) d)23 டிசம்பர் 2021
திட்டம் | மீண்டும் மஞ்சப்பை திட்டம் |
ஆண்டு | 23 டிசம்பர் 2021 |
அமைச்சகம் | சுற்றுசூழல் துறை |
நோக்கம் | பொதுமக்கள் துணிப்பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தடுக்கவும் |
3) விடை b)கி. ராஜநாராயணன்
கோபல்ல கிராமத்து மக்கள் என்னும் நாவலை எழுதியவர் கி. ராஜநாராயணன் ஆவார் . இந்த நாவல் 1991ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றது .கி. ராஜநாராயணனின் நூற்றாண்டு விழா செப்டம்பர் 17ம் நாள் நடைபெற உள்ளது .இவ்விழாவில் வி . ராஜதுரைக்கு கி. ரா விருது வழங்கப்படுகிறது .
4) விடை a) ஐஐடி மெட்ராஸ்
ஜல் தன்(Jal Dhan) பிரச்சாரம் தமிழகத்தில் அமைந்துள்ள ஐஐடி மெட்ராஸ் துவக்கி வைக்கிறது .இப்பிரச்சாரத்தின் நோக்கம் நீரை சேமிப்பது மற்றும் அதனை பாதுகாப்பது ஆகும் . இப்பிரச்சாரம் நீடித்த நிலையான இலக்கு எண் -6 “அனைவருக்கும் சுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரம்” அடைய ஒரு முன்னெடுப்பு ஆகும்.
5) விடை d) செப்டம்பர் 16
சூரியனிடம் வரும் புற -ஊதா கதிர்களில் இருந்து நம்மை காப்பது வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன் படலம் ஆகும் .பூமி வெப்பம் அதிகரிப்பதால் ஓசோன் படலம் பாதிப்பு அடைந்து வருகிறது . இதனை காக்கும் நோக்கத்துடன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாளில் மாண்ட்ரீல் உடன்படிக்கையில் (ஓசோன் படலத்தை பாதுகாப்பது ) சர்வதேச நாடுகள் கையொப்பமிட்டன .இத்தினத்தை நினைவூட்டி ஐக்கிய நாடுகள் பொது சபை 1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 16ம் நாளை உலக ஓசோன் தினமாக அறிவித்தது. 2023ம் ஆண்டுக்கான உலக ஓசோன் தினத்தின் கருப்பொருள் மாண்ட்ரீல் உடன்படிக்கை: “ஓசோன் படலத்தை சரிசெய்வது மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைப்பது ”
6)விடை c) புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ளது .பசுமை ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதற்கும், உற்பத்தி செய்வதற்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கும் இந்தியாவை உலகளாவிய மையமாக மாற்ற வேண்டும் என்பதே இத் திட்டத்தின் நோக்கம் ஆகும் .தமிழ்நாட்டில் ஹைட்ரஜன் கணவாய் புத்தாக்க திரள் (HVIC-TN) திட்டத்தின் கீழ் பல்வேறு நிறுவனங்களுடன் ஐஐடி மெட்ராஸ் கைகோர்த்து எதிர்கால எரிபொருளை உற்பத்தி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.இந்த முன் முயற்சியின் ஒரு பகுதியாக ஐஐடி-மெட்ராஸ் பசுமை ஹைட்ரஜனை மேலும் மேம்பட செய்ய பல தொழிலகங்கள் கூட இணைந்து செயல்பட உள்ளது . இந்த முன்முயற்சி தமிழகத்தை ஒரு ஆராய்ச்சி மையமாக மாற்ற உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7)விடை b)ராகுல் நவீன்
அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக ராகுல் நவீன் பொறுப்பேற்க உள்ளார்.இதற்கு முன் சஞ்சய் குமார் மிஸ்ரா இயக்குனராக இருந்தார் .அமலாக்கத்துறை 1956 ஆம் ஆண்டு மே 1 நாள் அமைக்கப்பட்டது .இத்துறை நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ளது . இத்துறையின் நோக்கம் பணமோசடி, அந்நிய செலாவணி மீறல்கள் மற்றும் பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிப்பது ஆகும்.
8)விடை c)ஆகஸ்ட் 15 2019
திட்டம் | ஜல் ஜீவன் திட்டம் |
ஆண்டு | 15 ஆகஸ்ட் 2019 |
அமைச்சகம் | ஜல் சக்தி |
நோக்கம் | 2024 ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் மூலம் தண்ணீர் வழங்குவது |
9)விடை c) தெலுங்கானா
தமிழ்நாட்டை தொடர்ந்து பள்ளிகளுக்கு இலவச காலை உணவு திட்டம் கொண்டு வர இருப்பது தெலுங்கானா மாநிலம் ஆகும் .தெலுங்கானா அரசு 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ-மாணவியருக்கு இலவச காலை உணவு வழங்க உள்ளது .இத் திட்டத்தை அக்டோபர் மாதம் 24ம் நாள் முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.தமிழ்நாட்டில் இயங்கி வரும் முதலமைச்சர் இலவச காலை உணவு திட்டத்தை பின்பற்றி இத் திட்டம் கொண்டு வர உள்ளது.
10) விடை a) தூத்துக்குடி
குலசேகரப்பட்டினம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது .ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளமாக உள்ளது .பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இஸ்ரோ அமைப்பு ராக்கெட் ஏவுதளமாக தமிழக மாநிலத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்து உள்ளது.அதற்கான பணி அடுத்த ஆண்டிற்குள் நிறைவடையும் என இஸ்ரோவின் முன்னாள் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார் .
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil