Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 15 செப்டம்பர் 2023

செப்டம்பர் 15 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்:

  • தேசிய பொறியாளர் தினம்
  • தேசிய மக்கள் தொகை பதிவேடு
  • புகையிலை இல்லாத கிராமம்

செப்டம்பர் 15ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) இந்திய பொறியியல் தந்தை என அழைக்கப்படுவது

a)விசுவேசுவரய்யா

b)பென்னி குயிக்

c)ஸ்ரீதரன்

d) மனோகர் பாலாஜி சர்வதே

2) ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றி அமைக்க கூறும் இந்திய அரசியலமைப்பு  சட்டப்பிரிவு

a)2

b)3

c)4

d)5

3)சர்வதேச மக்கள் ஆட்சி நாளாக அனுசரிக்கப்படுவது

a) செப்டம்பர் 13

b) செப்டம்பர் 14

c) செப்டம்பர் 15

d) செப்டம்பர் 16

4) கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகள் பெறும் மாதாந்திர தொகை

a) 500 ரூபாய்

b) 1000 ரூபாய்

c) 1500 ரூபாய்

d) 2000 ரூபாய்

5) சிறுதானியம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் நாடு

a)சீனா

b)நைஜீரியா

c)இந்தியா

d)பிரேசில்

6) தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் அமைச்சகம்

a) பெண்கள் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

b) உள்துறை அமைச்சகம்

c) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்

d) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

7) பிரதம மந்திரி மத்சய சம்பதா திட்டத்தின் அமைச்சகம்

a) பெண்கள் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

b) உள்துறை அமைச்சகம்

c) மீன்வளம் ,கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம்

d) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

8) மூன்று பெண்கள் துணை அர்ச்சகராக நியமிக்கப்படும் மாநிலம்

a) கேரளா

b) தமிழ்நாடு

c) கர்நாடகா

d) ஆந்திர பிரதேசம்

9) கண் மருத்துவத்திற்கான AM கோகலே விருதை பெற்றவர்

a) சஞ்சய் குமார் மிஸ்ரா

b) நமிதா கோகலே

c) அர்ஜுன் சாவ்லா

d) காலித் ஹுசைன்

10) திருப்பனி செட்டிகுளம் அமைந்துள்ள மாவட்டம்

a) தூத்துக்குடி

b) திருநெல்வேலி

c) விருதுநகர்

d) புதுக்கோட்டை

விடைகள்

1) விடை a) விசுவேசுவரய்யா

இந்திய பொறியியல் தந்தை என அழைக்கப்படுபவர் மோக்சகுண்டம் விசுவேசுவரய்யா ஆவார். புகழ்பெற்ற இந்திய பொறியாளர் ஆன விசுவேசுவரய்யா 1955ம்  ஆண்டில் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை பெற்றார் . இவர் பிறந்த தினத்தை தேசிய பொறியாளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது .

2)  விடை b)3

ஒரு மாநிலத்தின் பெயரை மாற்றி அமைக்க கூறும் இந்திய அரசியலமைப்பு  சட்டப்பிரிவு 3 ஆகும். இச்சட்டப்பிரிவை பயன்படுத்தி முன்னாள் தமிழக முதல்வர் அண்ணாதுரை அவர்கள் 1969ம் ஆண்டு ஜனவரி 14 ஆம் நாள் மெட்ராஸ் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றி அமைத்தார் .

3)  விடை c) செப்டம்பர் 15

மக்கள் ஆட்சி  வலுவடையும் வகையில் அரசாங்கங்களை ஊக்குவிக்கும் நோக்கமாக  ஐக்கிய நாடுகள் பொது சபை 2007ம் ஆண்டு  செப்டம்பர் 15ம் நாளை சர்வதேச மக்கள் ஆட்சி நாளாக கடைபிடிக்கிறது . 2023 ஆண்டின் இத்தினத்தின் கருப்பொருள் “அடுத்த தலைமுறைக்கு அதிகாரமளித்தல்” ஆகும்

4) விடை b) 1000 ரூபாய்

திட்டம் கலைஞர் மகளிர் உரிமை தொகை
ஆண்டு 15 செப்டம்பர் 2023
துறை சமூக நலத்துறை மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை
நோக்கம் பெண்களின் வாழ்வதாரத்தை முன்னேற்றவும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை  உயர்த்தவது ஆகும்

5) விடை c)இந்தியா

சிறுதானியம் உற்பத்தியில்  இந்திய  நாடு முதல் இடம் வகிக்கிறது . உலக உற்பத்தியில் 20 சதவீதமும், ஆசியாவின் உற்பத்தியில் 80 சதவீதமும் உற்பத்தி செய்கிறது. நைஜீரியா மற்றும் சீனா முறையே சிறுதானியம் உற்பத்தியில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள் பொது சபை மற்றும் உணவு மற்றும் வேளாண்மை  அமைப்பு சிறுதானிய மதிப்பு  மற்றும் அதன் நற்பலன்களை உலகில் உள்ள பிற நாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த 2023ம் ஆண்டை “சர்வதேச சிறுதானிய ஆண்டாக” அறிவித்தது .

6)விடை  b) உள்துறை  அமைச்சகம்

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் உள்துத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ளது .தேசிய மக்கள் தொகை பதிவேடு  என்பது நாட்டின் அனைத்து  குடியிருப்பாளர்களின் பட்டியலைக் கொண்ட தரவுத்தளமாகும்.2010ம்  ஆண்டு முதல் குடியிருப்பாளர்களின்  பட்டியலை பெற துவங்கியது மற்றும் 2015ம்  ஆண்டு இப்பதிவேடு புதுப்பிக்கப்பட்டது .தேசிய குடிமக்கள் பதிவேடு(NRC) உருவாவது முதல் படியாக இப்பதிவேடு உள்ளது . தற்போது 119 கோடி குடியிருப்பாளர் தகவல் கொண்ட தரவுத்தளமாக உள்ளது .2023 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் நாள் முதல் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு 2023 சட்டதிருத்ததின் படி நாட்டில் உள்ள அனைத்து இறப்புகளும் பிறப்புகளும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட  உள்ளது

7)விடை  c) மீன்வளம் ,கால்நடை பராமரிப்பு மற்றும்  பால்வள அமைச்சகம்

திட்டம் பிரதம மந்திரி மத்சய சம்பதா திட்டம்
ஆண்டு 10 செப்டம்பர் 2020
அமைச்சகம் மீன்வளம் ,கால்நடை பராமரிப்பு மற்றும்  பால்வள அமைச்சகம்
நோக்கம் மீன் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்

8)விடை  b) தமிழ்நாடு

தமிழ்நாடு கோவில்களில் 3 பெண் துணை அர்ச்சகர்கள் நியமிக்கப்பட உள்ளனர். பாஞ்சராத்ர ஆகமத்தை’ பின்பற்றி  ஸ்ரீ வைஷ்ணவ கோவில்களில் எஸ்.கிருஷ்ணவேணி, எஸ்.ரம்யா மற்றும்  ரஞ்சிதா ஆகியோர் துணை அர்ச்சகர்களாக பதவியேற்கவுள்ளனர்.இம்மூன்று பெண்கள்தான் முதன் முதலாக  ஸ்ரீரங்கத்தில்  இருக்கும் ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் உள்ள  அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயின்றனர் .

9)விடை  a) சஞ்சய் குமார் மிஸ்ரா

புனேவில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மருத்துவமனையின் பிரபல கண் மருத்துவ நிபுணர் சஞ்சய் குமார் மிஷ்ராவுக்கு மதிப்புமிக்க ‘டாக்டர் ஏஎம் கோகலே விருது’ வழங்கப்பட்டது.

10) விடை  a) தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஏரல் தாலுகாவில் உள்ள திருப்பணி செட்டிகுளம் கிராம பஞ்சாயத்து சிறப்பு கிராம சபை கூட்டத்தில் திருப்பணி செட்டிகுளம் கிராமத்தை  புகையிலை இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டது. 1,200  மக்கள்தொகை கொண்ட  திருப்பனி செட்டிகுளம் கிராமத்தில் புகையிலைப் பொருட்களை விற்காத கடைகள் உள்ளன. மேலும் இந்த கிராமத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளும் இல்லை. சிகரெட்டுகள், பீடிகள், புகையில்லா புகையிலை  மற்றும் மின்னணு சிகரெட்டுகள் போன்ற புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதை தடைசெய்த ஒரு சமூகமே புகையிலை இல்லாத கிராமம் ஆகும்.

 

 

**************************************************************************

 

Madras High Court Batch | Online Live Classes by Adda 247
Madras High Court Batch | Online Live Classes by Adda 247
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil