Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 13 செப்டம்பர் 2023

செப்டம்பர் 13 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள் தொகுப்பு

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்:

  • தேசிய ஊட்டச்சத்து மாதம்
  • சாந்தி ஸ்வரூப் பட்நாகர்  விருது
  • 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகள்

செப்டம்பர் 13ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்த அமைச்சகம்

a) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம்

b) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம்

c) வனத்துறை அமைச்சகம்

d) சுற்றுச்சூழல் அமைச்சகம்

2) சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதை அறிவிக்கும் நிறுவனம்

a) தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம்

b) அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கூட்டமைப்பு

c) தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம்

d) மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்

3) தேசிய வன  தியாகிகள் தினம்  கடைபிடிக்கும் நாள் 

a) செப்டம்பர் 8

b) செப்டம்பர் 9

c) செப்டம்பர் 10

d) செப்டம்பர் 11

4) 2023 ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு போட்டிகள்  நடைபெற உள்ள மாநிலம்

a)சிக்கிம்

b) கோவா

c) புது தில்லி

d)ஹரியானா

5) டாலி ‘ என்ற பெயரில் முதல் குளோனிங் பாலூட்டியை கண்டுபிடித்தவர்

a) இலன் வில்முட்

b) கீத் காம்ப்பெல்

c) கொலின் டட்ஜ்

d) ரோஜர் ஹைஃபீல்டு

6) காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அமைச்சகம் எது?

a) வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்

b) ஜல்சக்தி அமைச்சகம்

c)வனத்துறை அமைச்சகம்

d) சுற்றுச்சூழல் அமைச்சகம்

7) பூமிதான இயக்கத்தை ஆரம்பித்தவர்

a) ஆச்சார்யா வினோபாவே

b) ஜெயபிரகாஷ் நாராயணன்

c) மகாத்மா காந்தி

d) ஜவஹர்லால் நேரு

8) தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர்

a) பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா

b) லோகேஷ்வர் சிங்

c) குல்திப் சிங்

d) நாகேந்திர சிங்

9) ஜி20-ல் 21வது உறுப்பினர் நாடக சேர்ந்தது

a) பனாமா

b) நேபாளம்

c) ஆப்பிரிக்க கூட்டமைப்பு

d) வங்க தேசம்

10) இமயமலை தினம் கடைபிடிக்கும் நாள்

a) செப்டம்பர் 7

b) செப்டம்பர் 8

c) செப்டம்பர் 9

d) செப்டம்பர் 10

விடைகள்

1)விடை b) பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை

பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் 2023 ஆண்டு  செப்டம்பர்  மாதம்  முழுவதும்  தேசிய ஊட்டச்சத்து மாதமாக அறிவித்தது.

2)விடை b)அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கூட்டமைப்பு

சாந்தி ஸ்வரூப் பட்நாகர்  விருதை  அறிவிப்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கூட்டமைப்பு ஆகும்  2022 ஆண்டுக்கான விருது மொத்தம் 12 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்களின் பட்டியல்

  1. அஸ்வனி குமார்
  2. மத்திகா சுப்பா ரெட்டி
  3. அக்காட்டு பிஜு
  4. தேபப்ரதா மைதி
  5. விமல் மிஸ்ரா
  6. திப்தி ரஞ்சன் சாஹூ
  7. ரஜ்னிஷ் குமார்
  8. அபூர்வா கரே
  9. நீரஜ் கயல்
  10. டிப்யமன் கங்குலி
  11. அனிந்த்யா தாஸ்
  12. பாசுதேப் தாஸ்குப்தா

 3)விடை d) செப்டம்பர் 11

இந்தியாவில் செப்டம்பர் 11 அன்று தேசிய வன தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. காடுகள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் பணியில் தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களுக்கு இந்த நாள் அஞ்சலி செலுத்துகிறது.

4)விடை b) கோவா

அக்டோபரில் 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளை கோவாவில் நடக்க  உள்ளது. கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த், 37வது தேசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய காளையை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘மோகா’ என்ற சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

 5)விடை a) இலன் வில்முட்

‘டாலி ‘ என்ற பெயரில் முதல் குளோனிங் பாலூட்டியை கண்டுபிடித்த இலன் வில்முட் மறைந்தார்.

 6)விடை b) ஜல்சக்தி அமைச்சகம்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி .அமைச்சகத்தின் கீழ் வருகிறது. 2019 ஆம் ஆண்டில் உருவான ஜல் சக்தி அமைச்சகம் சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கிடையேயான தண்ணீர் பிரச்சினைகள், கங்கை,அதன் துணை நதிகள் மற்றும் துணை நதிகளை சுத்தம் செய்தல் போன்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறது.

 7)விடை a) ஆச்சார்யா வினோபாவே

பூமிதான் இயக்கத்தை ஆரம்பித்த ஆச்சார்ய வினோபா பவேவின் 126 வது பிறந்த நாள் 2023 ஆம் ஆண்டு  செப்டம்பர் 11 அன்று    கொண்டாடப்பட்டது.

 8)விடை a) பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா

பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டபட்டார். தேசிய பசுமை தீர்ப்பாயம் 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் நாள் தொடங்கப்பட்டது

 9)விடை c) ஆப்பிரிக்க கூட்டமைப்பு

ஆப்பிரிக்க ஒன்றியம் ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்பினராகியது. 18 ஆம்  ஜி20 உச்சிமாநாட்டின் தொடக்க அமர்வின் போது இந்திய பிரதமர்  ஆப்பிரிக்க ஒன்றியத்திற்கு ஜி20 அமைப்பில் நிரந்தர உறுப்புரிமை வழங்கப்பட்டதாக அறிவித்தார்.

 10)விடை c) செப்டம்பர் 9

இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் அதன் பகுதிகளை  பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி இமயமலை தினம் கடைபிடிக்கப்படுகிறது

 

 

 

**************************************************************************

 

Madras High Court Batch | Online Live Classes by Adda 247
Madras High Court Batch | Online Live Classes by Adda 247
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil