Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 11 செப்டம்பர் 2023

செப்டம்பர் 11 TNPSC மற்றும மத்திய அரசு தேர்வுக்கான நடப்புநிகழ்வுகள் தொகுப்பு

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்:

  • ஜி 20 மாநாடு
  • வருணா 2023 ராணுவ பயிற்சி
  • இந்தியாவின் முதல் UPI ATM

செப்டம்பர் 11ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1)” வசுதைவ குடும்பகம் ” என்ற 2023ம் ஆண்டுக்கான ஜி20 மாநாட்டின் கருப்பொருளின் பொருள்

a) ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்

b) ஒரே பூமி ஒரே சமூகம் ஒரே குடும்பம்

c) ஒரே பூமி ஒரே நாடு ஒரே சமூகம்

d) ஒரே பூமி ஒரே சமூகம் ஒரே எதிர்காலம்

2)“G20 @ 2023: The Roadmap to Indian Presidency” என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?

a) பேட்ரிக் பாண்ட்

b) ராஜத் கதுரியா

c) V. ஸ்ரீனிவாஸ்

d) மஞ்சீத் கிருபாலானி

3) “India in the G20: Rule-taker to Rule-maker”என்ற புத்தகத்தை தொகுத்தவர்  யார்?

a) பேட்ரிக் பாண்ட்

b) ராஜத் கதுரியா

c) V. ஸ்ரீனிவாஸ்

d) மஞ்சீத் கிருபாலானி

4) “வருணா”(VARUNA-2023) இராணுவப் பயிற்சியில் பங்கேற்ற இரு நாடுகள் எவை?

a) இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா

b) இந்தியா மற்றும் அமெரிக்கா

c) இந்தியா மற்றும் ஜப்பான்

d) இந்தியா மற்றும் பிரான்ஸ்

5) “The Song of the cell, An Exploration of medicine and new human” என்ற நூலை எழுதியவர் யார்?

a) சித்தார்தா முகர்ஜி

b) ரஸ்கின் பாண்ட்

c) அருந்ததி ராய்

d) கிரண் தேசாய்

6)மகாகவி நாள் அனுசரிக்கப்படுவது

a) செப்டம்பர் 11

b) அக்டோபர் 11

c) நவம்பர் 11

d) டிசம்பர் 11

7)இந்தியாவின் முதல் UPI ATM அறிமுகப்படுத்திய நிறுவனம்

a) ஹிட்டாச்சி கட்டண சேவைகள்

b) இந்திய ஸ்டேட் வங்கி

c) பஞ்சாப் தேசிய வங்கி

d) கூகுள் பே

8) 2024-ல் ஜி20 உச்சி மாநாடு நடக்கவிருக்கும் நாடு

a) இந்தோனேசியா

b)அர்ஜென்டினா

c) பிரேசில்

d) கனடா

9) நான்காவது உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழா நடைபெற்ற இடம்

a)மும்பை

b) கொச்சி

c)லக்னோ

d) ஜெய்ப்பூர்.

10) தாக்குதல்களிலிருந்து கல்வியை பாதுகாப்பதற்கான சர்வதேச தினமாக அனுசரிக்கப்படும் நாள்

a) செப்டம்பர் 8

b) செப்டம்பர் 9

c) செப்டம்பர் 10

d) செப்டம்பர் 11

விடைகள்

1) விடை (a) ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பது “ வசுதைவ குடும்பகம் ” என்ற G20 கருப்பொருளின் அர்த்தம் ஆகும். இது  நிலையான, உள்ளடக்கிய மற்றும் மனித மையமான வளர்ச்சிக்கு உலகளாவிய வரைபடமாகும்.

2) விடை  c) V. ஸ்ரீனிவாஸ்

G20 @ 2023: The Roadmap to Indian Presidency “புத்தகத்தை எழுதியவர் V.ஸ்ரீனிவாஸ்

3) விடை d) மஞ்சீத் கிருபாலானி

India in the G20: Rule-taker to Rule-maker என்ற புத்தகத்தை தொகுத்துள்ளவர் மஞ்சீத் கிருபாலானி.

4) விடை d) இந்தியா மற்றும் பிரான்ஸ்

இருதரப்பு பயிற்சியான “வருணா ” (Varuna-23) 21வது பயிற்சி இந்திய மற்றும் பிரெஞ்சு கடற்படைகளுக்கு இடையில் அரபிக் கடலில் நடைபெற்றது.

5) விடை a) சித்தார்த முகர்ஜி

இந்திய-அமெரிக்க புற்றுநோயியல் நிபுணரும் புலிட்சர் பரிசு பெற்ற எழுத்தாளருமான டாக்டர் சித்தார்த்த முகர்ஜி எழுதியபுத்தகம் “The Song of the cell, An Exploration of medicine and new human”

6) விடை a)  செப்டம்பர்  11

மகாகவி பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 11 ஆம் மறைந்தார்  . இந்நாளை “மகாகவி நாளாக ” கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு 2022 ஆம் ஆண்டு அறிவித்தது .

7) விடை a) ஹிட்டாச்சி கட்டண சேவைகள்

ஹிட்டாச்சி கட்டண சேவைகள் நிறுவனம், இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம்(NPCI)  உடன் இணைந்து இந்தியாவின் முதல் UPI ATM, ஏடிஎம் கார்டுகள்  இல்லாமல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

8) விடை c) பிரேசில்

19வது G20 உச்சிமாநாடு பிரேசிலில் உள்ள 2024 ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது .

9) விடை a) மும்பை

உலகளாவிய நிதி தொழில்நுட்ப விழா 2023, உலகின் முன்னணி நிதி தொழில்நுட்ப மாநாடு ஆகும். இந்த மாநாடு மும்பையில் உள்ள ஜியோ உலக மையத்தில் செப்டம்பர் 5 முதல் 7 வரை 3 நாட்கள் நடைபெற்றது.

10) விடை b) செப்டம்பர்  9

தாக்குதல்களிலிருந்து கல்வியை பாதுகாப்பதற்கான சர்வதேச தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் கடைபிடிக்கப்படுகிறது .

 

**************************************************************************

 

Madras High Court Batch | Online Live Classes by Adda 247
Madras High Court Batch | Online Live Classes by Adda 247
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil