Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 20 அக்டோபர் 2023

அக்டோபர் 20 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • பசுமை ஆற்றல் வழித்தடம்
  • உலக தொலைதூர வேலை குறியீடு
  • “மொபைல் முத்தம்மா”

அக்டோபர் 20ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) இரண்டாம் கட்ட பசுமை ஆற்றல் வழித்தடம் அமையவுள்ள இடம்

a)லடாக்

b)ஸ்ரீநகர்

c)சிலிகுரி

d)ஜம்மு

2) திரிபுரா மாநிலத்தின் 20வது ஆளுநராக நியமிக்கப்பட்டவர்

a)இந்திர சேனா ரெட்டி நல்லு

b)ரகுபர் தாஸ்

c)சத்யதேவ் நாராயண் ஆர்யா

dரமேஷ் பைஸ்

3) யானைகள் ரயில் மோதல் இருந்து  தடுப்பதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு வரவுள்ள மாநிலம்

a)கேரளா

b)தமிழ்நாடு

c)அசாம்

d)ஆந்திர பிரதேசம்

4) 2023 ஆம் ஆண்டிடன் உலக தொலைதூர வேலை குறியீட்டில் இந்தியாவின் இடம்

a)61

b)62

c)63

d)64

5) இடர் மேலாண்மைக்காக தங்க மயில் விருது வென்ற மகாரத்னா நிறுவனம்

a)இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

b)ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

c)கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம்

d)பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

6) “மொபைல் முத்தம்மா” திட்டத்தின் நோக்கம்

a)பெண்  குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது

b)ஆன்லைன் மூலம் மருந்துகள் வாங்குவது

c)ரேஷன் கடைகளில் மூலம் பொருட்கள் வாங்குவது

d) கடற்கரைகளில் முத்துக்களைக் கண்டுபிடிப்பது .

7) அப்னா சந்திரயான் இணையதளத்தை வெளியிட்ட அமைச்சகம்

a)அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் அமைச்சகம்

b)கல்வி அமைச்சகம்

c)தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்

d)புவி அறிவியல் அமைச்சகம்

8 ) “The Reverse Swing :Colonialism to Cooperation” என்ற புத்தகத்தை எழுதியவர் யார் ?

a)அசோக் டாண்டன்

b)விக்ரம் சேத்

c)சசி  தரூர்

d)அருந்ததி ராய்

9) 28 ஆம் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு எங்கு நடைபெற உள்ளது

a)பாரிஸ்

b)ஜெனீவா

c)துபாய்

d)கிளாஸ்கோவ்

10) உலகப் புள்ளியியல் தினம்

a)அக்டோபர் 10

b)அக்டோபர் 15

c)அக்டோபர் 20

d)அக்டோபர் 25

விடைகள்

 1)விடை a)லடாக்

பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) பசுமை ஆற்றல் வழித்தடம்  (GEC) இரண்டாம் கட்டம்  மாநிலங்களுக்கு இடையேயான பரிமாற்ற அமைப்பு (ISTS) 13-ஜிகாவாட் (GW) புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (RE) திட்டத்தை லடாக்கில் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது  இந்த  திட்டம் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலப்பரப்பாக மாற்றியமைக்க உள்ளது .சிக்கலான நிலப்பரப்பு, கடுமையான காலநிலை மற்றும் பாதுகாப்பு உணர்திறன் ஆகியவற்றால் அறியப்படும் லடாக் பகுதியில் 13 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தை நிறுவுவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டத்தின் மொத்த செலவு 20,773.70 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் (MNRE) தெரிவித்துள்ளது.

2) விடை a)இந்திர சேனா ரெட்டி நல்லு

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் ஒடிசாவின் 26வது ஆளுநராகவும், இந்திர சேனா ரெட்டி நல்லுவை 20வது திரிபுராவின் ஆளுநராகவும் நியமித்தார்.ரகுபர் தாஸ் 2014 முதல் 2019 வரை ஜார்கண்ட் முதல்வராகப் பணியாற்றினார். ஜார்க்கண்ட் முதல்வராக ஐந்தாண்டு காலத்தை முழுமையாக முடித்த ஒரே தலைவர் இவர்தான்.இந்திரசேனா ரெட்டி மூன்று முறை எம்.எல்.ஏ.வாகவும், தெலுங்கானாவை சேர்ந்த முக்கிய பாஜக தலைவராகவும் உள்ளார்.

3)  விடை b)தமிழ்நாடு

ரயில் மோதல்களில் இருந்து காட்டு யானைகளை பாதுகாக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான ஆரம்ப எச்சரிக்கை முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதுமையான திட்டம் எட்டிமடை(கோயம்புத்தூர்) – வாளையார் (பாலக்காட்) ரயில் பாதையில் செயல்படுத்தப்படும்.

4) விடை d)64

உலக தொலைதூர வேலை குறியீட்டில் (GRWI) 108 நாடுகளில் இந்தியா 64 வது இடத்தில் உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 15 இடங்கள் பின்தங்கியுள்ளதாகவும் தொலைதூர வேலைக்கான நாட்டின் தயார்நிலை குறித்து கவலைகள் எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக தொலைதூர வேலை குறியீட்டை சைபர் பாதுகாப்பு நிறுவனமான NordLayer வெளியிட்டுள்ளது. டென்மார்க், நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி முறையே 1வது, 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன. அவை பின்வரும் வரைமுறை படி தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

  1.  இணைய பாதுகாப்பு
  2. பொருளாதார பாதுகாப்பு
  3. டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உள்கட்டமைப்பு
  4. சமூகப் பாதுகாப்பு

5) விடை c)கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனம்

கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் (REC)  இடர் மேலாண்மையில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக மதிப்புமிக்க தங்க மயில் விருதைப் பெற்றுள்ளது. 1991 ஆம் ஆண்டில் இந்திய இயக்குநர்கள் நிறுவனத்தால் (IOD) நிறுவப்பட்ட தங்க மயில்விருதுகள், கார்ப்பரேட் நிறுவனங்கள்  சிறப்பிற்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரமாக உருவெடுத்துள்ளன. கிராமப்புற மின்மயமாக்கல் கழகம் ஜூலை 1969 இல்அமைக்கப்பட்டது .இந்த நிறுவனம் மகாரத்னாஅந்தஸதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

6)விடை c)ரேஷன் கடைகளில் மூலம் பொருட்கள் வாங்குவது

பொது மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகளில் UPI வசதி மூலம் பணம் செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இத்திட்டத்திற்கு “மொபைல் முத்தம்மா” என்று பெயரிட்டுள்ளனர்.தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பொருட்கள் வாங்கும் முறை விரைவில் செயல்படுத்தப்படும்.இது சென்னை புறநகர் பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

7)விடை  b)கல்வி அமைச்சகம்

சந்திரயான்-3 தொடர்பான கற்றலுக்கான அப்னா சந்திரயான் இணையதளத்தை  மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது. இந்த இணையதளம் பள்ளி மாணவர்களுக்கு  சந்திரயான்-3 திட்டம்  தொடர்பான வினாடி வினாக்கள் மற்றும் புதிர்கள் போன்ற செயல்பாட்டு அடிப்படையிலான தகவல்களை அவர்களுக்கு வழங்குகிறது. இந்த இணையதளத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கியுள்ளது.

8)விடை  a)அசோக் டாண்டன்

அசோக் டாண்டன் எழுதிய ‘The Reverse Swing: Colonialism to Cooperation’ என்ற புத்தகத்தைஇந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் வெளியிட்டார். பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு அடிமைத்தனத்தின்  வலிமிகுந்த நினைவுகளை விட்டுவிட்டு புதிய இந்தியாவின் பெருமைக்கான புத்தகமாக எழுதப்பட்டுள்ளது.சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய-இங்கிலாந்து உறவுகளில் ஏற்பட்ட வரலாற்று நிகழ்வுகள் மற்றும் மாற்றங்களை நூலாசிரியர் எழுதியுள்ளார்.

9)விடை c)துபாய்

COP28  என்று அழைக்கப்படும் 2023 ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12, 2023 வரை துபாயில் நடைபெற உள்ளது .1992  ஆம் ஆண்டில்  ஐக்கிய நாடுகள் சபையின் முதல் காலநிலை உடன்படிக்கைக்குப் பின்னர் ஆண்டுதோறும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இது உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்தவும் மற்றும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களுக்கு ஏற்ப கொள்கைகளை உருவாக்க அரசாங்கங்களால் நடத்தப்படுகிறது .

10) விடை  c)அக்டோபர் 20

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20 அன்று அனுசரிக்கப்படும் உலக புள்ளியியல் தினம், மேம்பட்ட, நம்பகமான மற்றும் உயர்தர புள்ளிவிவரங்களின் முக்கிய பங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய அனுசரிப்பாகும். உலக புள்ளியியல் தினம் 2010ஆம் ஆண்டு  பிப்ரவரியில் ஐக்கிய நாடுகள் புள்ளியியல் ஆணையத்தின் 41 வது அமர்வில் முன்மொழியப்பட்டது. 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதியை முதல் உலக புள்ளியியல் தினமாகக்  ஆணையம் பரிந்துரைத்தது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil