Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 19 அக்டோபர் 2023

அக்டோபர் 19 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இந்திய நாட்டின் முதல் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தடம்
  • உலக ஓய்வூதிய குறியீடு
  • காசிரங்கா தேசிய பூங்கா

அக்டோபர் 20ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1)இந்திய நாட்டின் முதல் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து வழித்தடம் எது

a)டெல்லி – மீரட்

b)மும்பை – புனே

c)கொல்கத்தா – விஜயவாடா

d)காசியாபாத் –குருகிராம்

2) இந்திய திறன்கள் 2023-24 என்ற திட்டத்தை திறன் மேம்பாட்டு அமைச்சகம் எங்கு தொடங்கியது

a)முசோரி

b)வடோதரா

c)புது டெல்லி

d)அகமதாபாத்

3) சுயப்பட முனையங்கள் உருவாக்கல்  வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைச்சகம்

a)பாதுகாப்பு துறை அமைச்சகம்

b)வெளியுறவு துறை அமைச்சகம்

c)உள்துறை அமைச்சகம்

d)தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை  அமைச்சகம்

4) 2023 ஆம் ஆண்டிடன் உலக ஓய்வூதிய குறியீட்டில் இந்தியாவின் இடம்

a)42

b)43

c)44

d)45

5)69வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் விருதை வென்றவர் யார்

a)ஆர்.மாதவன்

b)நிகில் மகாஜன்

c)விஷ்ணு மோகன்

d)டிவிவி தனய்யா

6) உலகின் சரியான நேரத்தில் செயல்படும்  விமான நிலையம் எது

a)கெம்பெகவுடா  சர்வதேசவிமான  நிலையம்

b)இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

c)சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்

d)ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

7) ஐ.நா.வுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர்

a)அரிந்தம் பாக்சி

b)ருசிரா கம்போஜ்

c)டி.எஸ்.திருமூர்த்தி

d)அஜய் பிசாரியா

8 ) காசிரங்கா தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம்

a)உத்தரகாண்ட்

b)அசாம்

c)சிக்கிம்

d)கர்நாடகா

9) 2023 ஆம் ஆண்டுக்கான  உலகப் பிரதான குடியிருப்பு குறியீட்டில் புதுடெல்லியின் இடம்

a)10

b)15

c)20

d)25

10) தேசிய ஒற்றுமை தினம்

a)அக்டோபர் 10

b)அக்டோபர் 15

c)அக்டோபர் 20

d)அக்டோபர் 25

விடைகள்

1)விடை a)டெல்லி – மீரட்

இந்தியாவில் பிராந்திய அதிவிரைவுப் போக்குவரத்து முறை தொடங்குவதைக் குறிக்கும் வகையில் அக்டோபர் 20 ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத் ரேபிட்எக்ஸ் நிலையத்தில் டெல்லி – காசியாபாத் – மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  வழித்தட முன்னுரிமைப் பிரிவை இந்திய பிரதமர் தொடங்கி வைக்கிறார். டெல்லியில் மொத்தம் எட்டு பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையங்களை உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் டெல்லி – காசியாபாத் – மீரட் முனையங்கள் உட்பட மூன்று வழித்தடங்கள் முதல் கட்டத்தில் செயல்படுத்த முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளன; தில்லி – குருகிராம் -எஸ்.என்.பி – ஆல்வார் முனையம், மற்றும் தில்லி – பானிபட் முனையம். தில்லி-காசியாபாத்-மீரட் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்து  முறை  முனையம்  ரூ.30,000 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்படுகிறது. RRTS ஐ அறிமுகப்படுத்துவதன் நோக்கம் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பது  வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சுகாதார வாய்ப்புகளுக்கு மேம்பட்ட அணுகுமுறையை வழங்குதல்  வாகன நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கணிசமாகக் குறைக்க உதவும் .

2) விடை c)புது டெல்லி

மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர், புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா திறன்கள் 2023-24 மற்றும் உலக திறன்கள் 2022 வெற்றியாளர்களை கௌரவித்தார். கடந்த ஆண்டு உலகப் போட்டியில் 11வது இடத்தைப் பிடித்த இந்தியா, தற்போது திறன் மேம்பாட்டில் மிகப்பெரிய முன்னேற்றங்களைக் காண தயாராக உள்ளது.

3)  விடை a)பாதுகாப்பு துறை அமைச்சகம்

பாதுகாப்பு அமைச்சகம் தனது அனைத்து துறைகளுக்கும் செயற்படுத்தப்பட்ட/செய்யப்படும் நல்ல பணிகளை வெளிப்படுத்தும் வகையில் சுயப்பட முனையங்களை  உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில் மொத்தம் 822 சுயப்பட முனையங்கள் உள்ளன சுயப்பட முனையங்களை  அதிக பட்ச நடமாட்டம் மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் திறன் கொண்ட முக்கிய இடங்களில் அமைக்கப்பட வேண்டும்.சுயப்பட முனையங்களுக்கான பல பரந்த கருப்பொருள்களை அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது. அவற்றில்

  • தற்சார்பு இந்தியா
  • சசக்திகரன்
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு
  • நரி சக்தி
  • எல்லை உள்கட்டமைப்பு மேம்பாடு
  • முன்னாள் படைவீரர்களின் நலன் ஆகியவை அடங்கும்.

4) விடை d)45

15 வது வருடாந்திர மெர்சர் சி. எஃப். ஏ இன்ஸ்டிடியூட் வெளிட்ட அறிக்கையில்  உலக ஓய்வூதியக் குறியீடு 2023 இல் 47 நாடுகளில் இந்தியா 45 வது இடத்திற்குச் சரிந்தது 45.9 புள்ளிகள் பெற்றுள்ளது. 2022ல் 44 நாடுகளில் 41வது இடத்திலும், 2021ல் 43 நாடுகளில் 40வது இடத்திலும் இருந்தது. நெதர்லாந்து 85.0  பெற்று முதல் இடத்திலும் , ஐஸ்லாந்து 83.5 பெற்று இரண்டாம் இடத்திலும் மற்றும் டென்மார்க் 81.3 பெற்று மூன்றாம்  இடத்திலும் உள்ளது .அர்ஜென்டினா மிகக் குறைந்த  42.3 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது .

5) விடை b)நிகில் மகாஜன்

குடியரசு தலைவர்  திரௌபதி முர்மு 69வது தேசிய திரைப்பட விருதுகளை 2023 புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் வழங்கினார்.

விருது                 திரைப்படம்
சிறந்த திரைப்படம்  ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்(தமிழ் ,ஹிந்தி மற்றும் ஆங்கிலம்)
சிறந்த இயக்குனர் கோதாவரி (மராத்தி மொழி) நிகில் மகாஜன்
சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் RRR (தமிழ் மற்றும் தெலுங்கு)
சிறந்த குழந்தைகள் திரைப்படம் காந்தி & கோ(குஜராத்தி)

 

இயக்குனர்  சிறந்த அறிமுகப் திரைப்படம் மேப்பாடியான்(மலையாளம் )

6)விடை a)கெம்பெகவுடா  சர்வதேசவிமான  நிலையம்

சிரியம் என்ற நிறுவனத்தின்  இன் அறிக்கையின்படி பெங்களூரு சர்வதேச விமான நிலையம் என்றும் அழைக்கப்படும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் (KIA) கடந்த மூன்று மாதங்களாக “உலகின் மிகவும் சரியான நேரத்தில் செயல்படும் விமான நிலையம் ”  என்ற சாதனை படைத்துள்ளது .

7)விடை  a)அரிந்தம் பாக்சி

தற்போது வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வரும் அரிந்தம் பாக்ச்சி, ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் தூதர் அல்லது நிரந்தர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான தற்போதைய இந்திய தூதர் இந்திரா மணி பாண்டேவுக்குப் பிறகு அரிந்தம் பாக்ச்சி பதவியேற்க உள்ளார்.

8)விடை   b)அசாம்

இது அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது மற்றும் 42,996 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது.இது பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வெள்ள சமவெளியில் உள்ள மிகப்பெரிய மற்றும் பிரதிநிதித்துவ பகுதியாகும்.இது 1974 இல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.இது 2007 ஆம் ஆண்டு முதல் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 1985 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது. காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் புலிகள் காப்பகத்தில்  வேட்டையாடுதலை   நீக்கிய பிரிட்டிஷ் காலத்தை சேர்ந்த  வன அதிகாரிக்கு ஒரு இலக்கிய அஞ்சலி செலுத்துவதன் மூலம் மீண்டும் திறக்கப்பட்டது.

9)விடை d)25

லண்டனைச் சேர்ந்த சொத்து ஆலோசகர் நைட் ஃபிராங்க் வெளியிட்ட  உலக பிரதான குடியிருப்பு குறியீட்டில்  புது டெல்லி 25வது இடத்திலும், மும்பை 19வது இடத்திலும், பெங்களூரு 22வது இடத்திலும் உள்ளது முதல் இடத்தில் துருக்கி நாட்டை சேர்ந்த அங்காரவும் இரண்டாம் இடத்தில் இஸ்தான்புல் இடம் பெற்றுள்ளது .

10) விடை  c)அக்டோபர் 20

தேசிய ஒற்றுமை தினம் 1962 ஆம் ஆண்டு சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நடந்த போரை நினைவுபடுத்துகிறது.இந்தப் போரில் இந்தியாவை சீனா தோற்கடித்தது.இந்த போரில் நாட்டின் பல வீரர்களும் வீரமரணம் அடைந்தனர், 1966ல், இந்திரா காந்தி பிரதமராக  இருந்தார் அவர் தலைமையில்  ஒரு குழு அமைக்கப்பட்டது. போரில் போரிட்ட வீரர்கள் மற்றும் கடமையின் போது உயிரை தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களை கவுரவிக்கும் வகையில், அக்டோபர் 20 ஆம் தேதி ‘தேசிய ஒற்றுமை தினம்’ என்று பிரதமர் இந்திரா காந்தியை உள்ளடக்கிய இந்தக் குழு அறிவித்தது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil