Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 17 அக்டோபர் 2023

அக்டோபர் 17 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • 2023 ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான விருது
  • மொழி ஆய்வக திட்டம்
  • உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாடு

அக்டோபர் 17ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) ரவீந்திரநாத் தாகூர் சிலை எந்த நாட்டில் திறக்கப்பட உள்ளது?

a)சீனா

b)வியட்நாம்

c)தாய்லாந்து

d)இந்தோனேஷியா

2) 28 நாட்களிலே கட்டிய முப்பரிமாண அச்சிடப்பட்ட கட்டிடம் எங்கு திறக்கப்படவுள்ளது

a)கேரளா

b)கர்நாடகா

c)ஆந்திர பிரதேசம்

d)தெலுங்கானா

3) 2023 ஆண்டுக்கான சிறந்த சுற்றுலா கிராமத்திற்கான விருது பெரும் கிராமம்

a)ரூப்நகர்

b)பெரோஸ்பூர்

c)நவன்பிண்ட் சர்தரன்

d)ஹோஷியார்பூர்

4) 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மீன்வள மேலாண்மை மாநாடு  நடைபெறும் இடம்

a)கோவை

b)மாமல்லபுரம்

c)மதுரை

d)சென்னை

5) அமெரிக்காவில் திறக்கப்பட்ட அம்பேத்கரின் சிலையை  வடிவமைத்த சிற்பி

a)ராம் வி. சுடர்

b)அனிஷ் கபூர்

c)ஷில்பா குப்தா

d)பாரிஸ் விஸ்வநாதன்

6) மொழி ஆய்வக திட்டம் கொண்டு வந்துள்ள மாநிலம்

a)கேரளா

b)கர்நாடகா

c)தமிழ்நாடு

d)தெலுங்கானா

7) வெள்ளைக் குச்சி நாள்

a)அக்டோபர் 12

b)அக்டோபர் 13

c)அக்டோபர் 14

d)அக்டோபர் 15

8) உலகளாவிய கடல்சார் இந்திய உச்சி மாநாடு எங்கு நடைபெறவுள்ளது

a) புது டெல்லி

b)மும்பை

c)அகமதாபாத்

d)ஜெய்ப்பூர்

9) 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆண்களுக்கான தடகள வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய தடகள வீரர்

a)கிஷோர் ஜெனா

b)அவினாஷ் சேபிள்

c)நீரஜ் சோப்ரா

d)பிரவீன் சித்திரவேல்

10) சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

a)அக்டோபர் 15

b)அக்டோபர் 16

c)அக்டோபர் 17

d)அக்டோபர் 18

 

விடைகள்

1) விடை b)வியட்நாம்

வியட்நாமின் பாக் நிங் நகரில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான ரவீந்திரநாத் தாகூரின்  சிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திறந்து வைத்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளை அடையாளப்படுத்துகிறது. ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற படைப்பான “கீதஞ்சலி ” 2001 ஆம் ஆண்டில் வியட்நாமிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது, இது கலாச்சார இடைவெளியைக் குறைத்து தாகூரின் கவிதைகளை வியட்நாமிய வாசகர்களுக்கு கொண்டு வந்தது. 1982 ஆம் ஆண்டில், வியட்நாம் ரவீந்திரநாத் தாகூரை கவுரவிக்கும் வகையில்  அஞ்சல் தலையை வெளியிட்டது. இது கவிஞருக்கு நாடு வைத்திருக்கும் பாராட்டு மற்றும் மரியாதையை மேலும் வெளிப்படுத்துகிறது

2) விடை a)கேரளா

முப்பரிமாண அச்சிடப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட முதல் கட்டடமான அமேஸ்-28 என்ற கட்டிடத்தை திறந்து வைப்பதன் மூலம் கட்டுமானத் துறையில் கேரளா குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த புதுமையான கட்டடக்கலை 380 சதுர அடி, ஒரு அறை கொண்ட கோடைகால வீடு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திறக்கப்பட்டது. இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட வீடு IIT-மத்ராஸில் துவஸ்தா என்ற பெயரில் திறக்கப்பட்டது.

3)  விடை c)நவன்பிண்ட் சர்தரன்

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் அமைந்துள்ள நவன்பிண்ட் சர்தாரன் கிராமம் சமீபத்தில் மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் “இந்தியாவின் சிறந்த சுற்றுலா கிராமம் 2023” என்ற பட்டத்தை வென்றது. தேசிய நெடுஞ்சாலை-54க்கு தெற்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள நவன்பிந்த் சர்தாரன் கிராமம் மாதா வைஷ்ணோ தேவி கோயில், காங்க்ரா, தர்மசாலா, டல்ஹவுசி மற்றும் பிற பிரபலமான சுற்றுலா தலங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

4) விடை b)மாமல்லபுரம்

பருவநிலை மாற்றத்தை சர்வதேச மீன்வள நடவடிக்கைகளில் முக்கியமானதாக்குதல் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்த சர்வதேச மாநாடு  மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது .

5) விடை a)ராம் வி. சுடர்

வாஷிங்டனில் உள்ள மேரிலாந்தில் இந்திய அரசியலமைப்பின் தந்தை டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 19 அடி உயர சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சிலை இந்தியாவிற்கு வெளியே மிக உயரமான சிலையாக  கருதப்படுகிறது மற்றும் இந்திய-அமெரிக்கர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் இருவருக்கும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதுகுஜராத்தின் நர்மதா ஆற்றில் உள்ள ஒரு தீவில் அமைந்துள்ள சர்தார் படேலின் ஒற்றுமை சிலையை உருவாக்கியதற்காக அறியப்பட்ட புகழ்பெற்ற கலைஞரும் சிற்பியுமான ராம் சுதாரால் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது “சமத்துவத்தின் சிலை” என்று பெயரிடப்பட்ட இந்த சிலை இந்தியாவில் மட்டுமல்ல, உலகளாவிய சமத்துவமின்மை பிரச்சினையை தீர்க்க முயல்கிறது.

6)விடை c)தமிழ்நாடு

தமிழகத்தில்  அரசு பள்ளியில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கேட்டல் , பேசுதல் படித்தல் ,எழுதுதல் திறன்களை மேம்படுத்தவதற்காக 2023 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளில் “மொழி ஆய்வக திட்டம் ” தொடங்கப்பட்டது .இதன்மூலம்  மாணவர்கள்  தங்கள் கணினி மற்றும் செல்போன் வாயிலாக டிஜிட்டல் உள்ளடக்கத்தை பயன்படுத்தி மொழி அறிவை மேம்படுத்தி கொள்ள முடியும் . அக்டோபர் மாதம் முதல் 6,029 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில்  “மொழி ஆய்வக திட்டம் ” செயல்படுத்த உள்ளது.

7)விடை  d)அக்டோபர் 15

“மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல் மற்றும் உள்ளடக்கியத் தன்மையை ஊக்குவிக்கவும், பார்வையற்றோர் தொடர்பான நடத்தை விதிகள் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கவும் உலக வெள்ளைக் குச்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. பார்வையற்றவர்களுக்கு, வெள்ளைப் பிரம்புடன் கூடிய சுதந்திரம், அதன் மூலமான செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, மாற்றுத் திறனாளிகளின் மேம்பாடு தொடர்பான திட்டங்களை செயல்படுத்தும் துறையாக உள்ளது.

8)விடை   b)மும்பை

உலகளாவிய கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2023-ன் மூன்றாவது பகுதியைப் பிரதமர்  தொடங்கி வைக்கிறார். இந்த மாநாடு மும்பையில் அக்டோபர் 17 முதல் 19 வரை நடைபெறுகிறது.மூன்று நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், எதிர்காலத் துறைமுகங்கள் உட்பட, கடல்சார் துறையின் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கரியமிலவாயு குறைத்தல், கடலோரக் கப்பல் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர் போக்குவரத்து;, கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் மற்றும் மறுசுழற்சி, நிதி காப்பீடு மற்றும் நடுவர் மன்றம்,கடல்சார் குழுமங்கள், கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் கடல்சார் சுற்றுலா போன்றவை அடங்கும். நாட்டின் கடல்சார் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறந்த தளத்தையும் இந்த உச்சிமாநாடு அளிக்கும்.முதலாவது கடல்சார் இந்தியா உச்சிமாநாடு 2016 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்றது. இரண்டாவது கடல்சார் உச்சி மாநாடு 2021 ஆம் ஆண்டில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.

9)விடை c)நீரஜ் சோப்ரா

2023 ஆம் ஆண்டின் சிறந்த ஆண்களுக்கான தடகள வீரர் விருதுக்கு நீரஜ் சோப்ராவை உலக தடகள அமைப்பு அதிகாரப்பூர்வமாக பரிந்துரைத்துள்ளது. இந்த கௌரவம், ஈட்டி வீசுதல் துறையில் நீரஜின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் அவரது தங்கப் பதக்க வெற்றியை வலியுறுத்துகிறது.

10) விடை  c)அக்டோபர் 17

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 17 ஆம் தேதி அனுசரிக்கப்படும் வறுமை ஒழிப்புக்கான சர்வதேச தினம் வறுமை பிரச்சினை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும்  அதைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய முயற்சியாகும். 1992 ஆம் ஆண்டு   அக்டோபர் 17 ஆம் நாளை வறுமை ஒழிப்புக்கான சர்வதேச நாளாக  ஐ.நா பொதுச் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சர்வதேச வறுமை ஒழிப்பு தினத்தின் கருப்பொருள் “தகுதியான வேலை மற்றும் சமூகப் பாதுகாப்பு” என்பதாகும்.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil