Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 16 அக்டோபர் 2023

அக்டோபர் 16 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இந்தியாவின் ஆரஞ்சு நகரம்
  • 2023 ஆம் ஆண்டுக்கான சத்தியஜித் ரே விருது
  • உலக சுகாதார உச்சி மாநாடு

அக்டோபர் 16ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) “நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.” என்ற கூற்றை கூறியவர் யார் ?

a)இந்திரா காந்தி

b)சுபாஷ் சந்திர போஸ்

c)அப்துல் கலாம்

d)ஆபிரகாம் லிங்கன்

2) இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என்று அழைக்கப்படுவது

a)ஜெய்ப்பூர்

b)உதய்பூர்

c)நாக்பூர்

d)ஜோத்பூர்

3) 2023 ஆம் ஆண்டுக்கான சத்தியஜித் ரே விருதை பெறும் ஹாலிவுட் நடிகர்

a)அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்

b)மைக்கேல் டக்ளஸ்

c)சில்வெஸ்டர் ஸ்டாலோன்

d)புரூஸ் வில்லிஸ்

4) 2024 கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற  இந்தியாவின் சாதனை எண்ணிக்கை

a)20

b)30

c)50

d)60

5)வீரபாண்டியன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின்  ——— வது பாளைக்காரர் ஆவார்

a)35

b)41

c)47

d)50

6)சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 13

b)அக்டோபர் 14

c)அக்டோபர் 15

d)அக்டோபர் 16

7) “The Professional Handbook for ChatGPT” என்னும் புத்தகத்தை எழுதியவர் யார் ?

a)பட்டாபி ராம்

b)சுரேஷ் சந்திரா

c)சசி தரூர்

d)அருந்ததி ராய்

8) உலக சுகாதார உச்சி மாநாடு நடைபெற்ற நகரம்

a)புது டெல்லி

b)பெர்லின்

c)பாரிஸ்

d)ஜெனீவா

9) 2023 ஆம் ஆண்டுக்கான பெண்கள் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி போட்டி எங்கு நடைபெற உள்ளது ?

a)ராஞ்சி

b)புவனேசுவர்

c)சென்னை

d)கொல்கத்தா

10) உலக மாணவர் தினம் யார் நினைவாக கொண்டாடப்படுகிறது?

a)சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

b)அப்துல்கலாம்

c)காமராஜர்

d)மதன் மோகன் மாள்வியா

 

விடைகள்

1) விடை c)அப்துல் கலாம்

“நீங்கள் சூரியனைப் போல பிரகாசிக்க வேண்டுமானால் முதலில் சூரியனைப் போல எரிய வேண்டும்.” என்ற கூற்றை கூறியவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் ஆவார் .இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்று அழைக்கப்படும் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் கல்வியாளர் ஆவார். அவர் 2002 முதல் 2007 வரை இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக இருந்தார்  அவர் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதி தமிழ்நாட்டின் ராமேஸ்வரத்தில் பிறந்தார். அவருடைய முழுப்பெயர் அவுல் பகீர் ஜெய்னுலாப்தீன் அப்துல் கலாம் ஆகும் .ஏ. பி. ஜே.  அப்துல் கலாம் இந்தியாவின் ஏவுகணைத் திட்டத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார்.அக்னி, பிருத்வி, ஆகாஷ் ஏவுகணைகளை வடிவமைத்து உருவாக்கி, இந்தியாவை ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையச் செய்ததில் முக்கிய பங்காற்றினார்.கலாம் இந்தியாவின் அணு ஆயுத திட்டத்தின் தலைமை வடிவமைப்பாளராகவும் இருந்தார், மேலும் 1998 இல் நடத்தப்பட்ட பொக்ரான்-II அணுசக்தி சோதனைகளில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.அவர் எழுதிய புத்தகங்கள்

  • அக்னி சிறகுகள்(Wings of Fire)
  • எழுச்சி ஊட்டும் எண்ணங்கள்(Ignited Minds)
  • எனது பயணம்(My Journey)
  • இந்தியா 2020(India 2020)

2) விடை c)நாக்பூர்

நாக்பூர் இந்தியாவின் ஆரஞ்சு நகரம் என்று குறிப்பிடப்படுகிறது. இது உலகளாவிய ஆரஞ்சு உற்பத்தியில் 3% க்கும் அதிகமான பங்களிப்பை அளிக்கிறது. நாக்பூர் நகரத்தின் வரலாறு 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அப்போது  ஆட்சி செய்த போன்ஸ்லே ஆட்சியாளர்கள் இப்பகுதியில் ஆரஞ்சு விவசாயத்தை ஊக்குவித்து ஆரஞ்சு  நகரத்தை அமைக்க அடித்தளத்தை அமைத்தனர்.

3)  விடை b)மைக்கேல் டக்ளஸ்

பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கோவாவில் நடைபெறும் 54வது சர்வதேச திரைப்பட விழாவில் புகழ்பெற்ற சத்யஜித் ரே திரைப்பட வாழ்நாள் விருதை பெற உள்ளார்.

4) விடை d)60

2024 கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற  இந்தியாவின் சாதனை எண்ணிக்கை 60 ஆகும் .ஒவ்வொரு ஆண்டும்  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் புதிய சாதனைகள் பதியப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன .2024 ஆண்டில் மொத்தம் 2638 சாதனைகள் இடம் பெற்றுள்ளன . அதில் இந்தியாவின் சாதனை 60 ஆகும் .அவற்றுள் சில

  • உலகின் மிக உயரமான மற்றும் விலை உயர்ந்த தனிநபர் இல்லம் என்ற பெருமையை முகேஷ் அம்பானியின் 27 மாடி இல்லமான  “ஆண்டிலியா பெற்றுள்ளது .
  • தமிழ்நாட்டை சார்ந்த ரூபா கணேசன் மெர்மைட் வடிவிலான யோகாசனத்தை 1.15 மணிநேரம் மேல் செய்து சாதனையும்  இடம்பெற்றுள்ளது .

5) விடை c)47

வீரபாண்டியன் கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சியின்  47 வது பாளைக்காரர் ஆவார் .வீரபாண்டிய கட்டபொம்மன்  தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்காரர் ஆவார்.தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த மன்னர்களில் இவரும் ஒருவர்.அவர் ஆரம்பத்தில் ஆங்கிலேயர்கள் கோரிய வரி ஏய்ப்பு மற்றும் கலெக்டர் ஜாக்சனை சந்திக்க பலமுறை சம்மன்களை புறக்கணித்தார்  பின்னர் வரி செலுத்த மறுத்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார், அதன் விளைவாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி  மேஜர் பேனர்மேன் தலைமையில் கட்டபொம்மனை பிடிக்க இராணுவத்தை அனுப்பியது. 1799 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் நாள் பானர்மென் என்ற ஆங்கிலேயத் தளபதியால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டை முற்றுகையிடப்பட்டது. அங்கு கடும் போர் நடைபெற்றது. போரில் பல ஆங்கிலேயர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில், வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். 1 1799 ஆம் ஆண்டில் அக்டோபர் 1 ஆம் நாள் புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமானால், வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கப்பட்டார். 1799 ஆம் ஆண்டில் அக்டோபர் 16 ஆம் நாள் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.அவரின் 224 வது  நினைவு தினமான அக்டோபர் 16 ஆம் நாளை தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது .

6)விடை c)அக்டோபர் 15

அக்டோபர் 15 அன்று ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம், உலகெங்கிலும் உள்ள கிராமப்புற பெண்களின் முக்கிய பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நாளாகும். 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கிராமப்புற பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரித்தது. 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று, முதல் சர்வதேச கிராமப்புற பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள பழங்குடியினர் மற்றும் பழங்குடி பெண்கள் உட்பட அனைத்து கிராமப்புற பெண்கள் மற்றும் சிறுமிகளும் விவசாயத் தொழிலில் வகிக்கும் முக்கிய பங்கை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.

7)விடை  a)பட்டாபி ராம்

“The Professional Handbook for ChatGPT” என்னும் புத்தகத்தை எழுதியவர் பட்டாபி ராம் மற்றும் துங்கன் சந்த் யூ ஜெயின். ஆவர் . பல்வேறு துறைகளில் உள்ள தொழில் வல்லுநர்கள் பயன்படுத்துவதற்காக இந்த புத்தகத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

8)விடை   b)பெர்லின்

உலக சுகாதார உச்சி மாநாடு ஜெர்மனியின் பெர்லினில் 2023 அக்டோபர் 15 முதல் 17 வரை நடத்தப்பட்டு வருகிறது . உலக சுகாதார உச்சி மாநாடு  உலகம் முழுவதும் உள்ள அரசியல், அறிவியல், தனியார் துறை மற்றும் பொது சமூகத்தின் பங்குதாரர்களை ஒன்றிணைக்கிறது. இது அனைவருக்கும் சிறந்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான நிகழ்ச்சி நிரல் ஆகும் .உலக சுகாதார உச்சி மாநாட்டின் கருப்பொருள் 2023 “உலகளாவிய சுகாதார நடவடிக்கைக்கான வரையறுக்கும் ஆண்டு.

9)விடை a)ராஞ்சி

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை  ஜார்க்கண்டு  மாநிலத்தில் உள்ள  ராஞ்சியில்   நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா, ஜப்பான், சீனா, கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. ஆண்கள் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஆகஸ்ட் 2023 அன்று சென்னையில் நடந்தது.

10) விடை  b)அப்துல்கலாம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக மாணவர் தினம்  மறைந்த இந்திய குடியரசு தலைவர் டாக்டர். ஏ. பி. ஜே. அப்துல் கலாம். கல்வித்துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்புக்கும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்களின் நலனுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது . 2023 ஆம் ஆண்டுக்கான உலக மாணவர் தினத்தின் கருப்பொருள் “தோல்வி: கற்றலில் முதல் முயற்சி”( FAIL: stands for First Attempt in Learning.” ) என்பதாகும். மத்திய கல்வி அமைச்சகமும், இந்திய அரசும் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கருப்பொருள், மாணவர்கள் தோல்வியை ஒரு கற்றல் அனுபவமாக ஏற்றுக் கொள்ளவும், தங்கள் கல்வி பயணத்தை தொடரவும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil