அக்டோபர் 14 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- இந்தியாவின் முதல் சதுப்புநில நகரம்
- பாரிவேந்தர் பைந்தமிழ் விருது
- உலக இடம் பெயரும் பறவைகள் தினம்
அக்டோபர் 14ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) தமிழ்நாட்டின் நீலகிரி வரையாடு பாதுகாக்கும் முன்னோடி திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி
a)5 கோடி
b)10 கோடி
c)20 கோடி
d)25 கோடி
2) இந்தியாவின் முதல் சதுப்புநில நகரம்
a)ஜெய்ப்பூர்
b)உதய்பூர்
c)நாக்பூர்
d)ஜோத்பூர்
3) 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்கள் எண்ணிக்கை
a)20
b)24
c)26
d)28
4) 2022-2023 ஆண்டுக்கான வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்ன
a)33
b)35
c)37
d)39
5) 2023 ஆம் ஆண்டுக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது
a)அருண்
b)சி.சரிதா
c)சிவசங்கரி
d)பாண்டியன்
6)UMMEED என்னும் வழிமுறைகளை வெளிட்ட அமைச்சகம்
a)வேளாண்துறை அமைச்சகம்
b)கல்வித்துறை அமைச்சகம்
c)பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் துறை
d)சுகாதார துறை அமைச்சகம்
7) உலகஇடம் பெயரும் பறவைகள் தினம் அனுசரிக்கப்படுவது
a)அக்டோபர் 11
b)அக்டோபர் 12
c)அக்டோபர் 13
d)அக்டோபர் 14
8) 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன
a)டோக்கியோ
b)பாரிஸ்
c)லாஸ் ஏஞ்சல்ஸ்
d)கத்தார்
9)தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
a)ராமேஸ்வரம்
b)கன்னியாகுமரி
c)நாகப்பட்டினம்
d)தூத்துக்குடி
10) உலக மூட்டு நோய் தினம் அனுசரிக்கப்படுவது
a)அக்டோபர் 11
b)அக்டோபர் 12
c)அக்டோபர் 13
d)அக்டோபர் 14
விடைகள்
1) விடை d)25 கோடி
தமிழ்நாட்டின் நீலகிரி வரையாடு பாதுகாக்கும் முன்னோடி திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி 25 கோடி ரூபாய் ஆகும் .நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.இது நீலகிரி மலைகள் மற்றும் கேரள மாநிலங்களில் இருக்கும். மேற்கு மற்றும் கிழக்கு பள்ளத்தாக்கின் தென் பகுதியில் வாழ்கிறது .இவ்விலங்கை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் “அருகியநிலை” உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் முதல் நீலகிரி வரையாடு தினம் அக்டோபர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. ERC டேவிடரின் நினைவாக அக்டோபர் 7 ஆம் தேதி ‘நீலகிரி வரையாடு தினமாக’ கொண்டாடப்பட்டது. 1975 இல் நீலகிரி வரையாடு பற்றிய ஆய்வுகளில்முன்னோடியாக இருந்தவர்.
2) விடை b)உதய்பூர்
ராஜஸ்தான் அரசாங்கமும் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையும் இந்தியாவின் முதல் சதுப்பு நில நகரமாக மாற்றும் நோக்கில், ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்படும் உதய்பூரை சர்வதேச அளவில் உயர்த்துவதற்கு ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. உதய்பூர் அற்புதமான இயற்கை அழகு மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்துடன் ராம்சார் மாநாட்டின் சதுப்பு நில தகுதி அனைத்தும் கொண்டுள்ளது .37 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் பிச்சோலா, ஃபதே சாகர், ரங் சாகர், ஸ்வரூப் சாகர் மற்றும் தூத் தலை ஆகிய ஐந்து பெரிய ஏரிகளால் சூழ்ந்துள்ளது .இந்த நீர்நிலைகள் கொண்ட நகரத்தை ‘ஏரிகளின் நகரம்’ என்று அழைக்கப்படுகின்றன.
3) விடை d)28
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களில் 28 பதக்கங்களை தமிழக வீரர்கள் வென்றுள்ளனர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று 17 பிரிவுகளில் 28 பதக்கங்களை (9 தங்கப் பதக்கங்கள், 11 வெள்ளிப் பதக்கங்கள், 8 வெண்கலப் பதக்கங்கள்) வென்றனர்.தமிழக அரசு பதக்கங்களை வென்ற 20 வீரர்களுக்கு மொத்த ஊக்கத்தொகையாக ரூ.9.40 கோடி ரொக்கப் பரிசு வழங்கியது.தங்கம் வென்றவர்களுக்கு ரூ.50 லட்சமும், வெள்ளிக்கு ரூ.30 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ.20 லட்சமும் வழங்கப்பட்டது.
4) விடை c)37
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வருடாந்தீர தொழிலாளர் கணக்கெடுப்பு அறிக்கை 2022-23-ன் படி, நாட்டில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் 2023 ஆம் ஆண்டில் 4.2 சதவீதம் அதிகரித்து 37.0 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வருடம் | பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் |
2017-18 | 23.3 |
2018-19 | 24.5 |
2019-20 | 30.0 |
2020-21 | 32.5 |
2021-22 | 32.8 |
2022-23 | 37.0 |
5) விடை c)சிவசங்கரி
2023 ஆம் ஆண்டுக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு வழங்கப்பட உள்ளது எஸ் .ஆர்.எம் தமிழ் பேராயம் இவ்விருதினை வழங்க உள்ளது .மேலும் சில விருதுகளை அறிவித்துள்ளது . அவை
.
விருது | விருது பெறுவோர் |
புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது | தமிழ்செல்வி (சிலாவம் ) |
பாரதியார் கவிதை விருது | ரவி சுப்பிரமணியன் (நினைவின் ஆழியில் அலையும் கயல்கள் ) |
அழ . வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது | அருண் (பெரிய தாத்தா ) மற்றும் சி . சரிதா (கடலுக்கு அடியில் மர்மம் ) |
ஜி .யூ .போப் மொழிபெயர்ப்பு விருது | எம் . பூபதி (பாஸ்டியன் பட்டு ) |
ஏ .பி .ஜே . அப்துல்கலாம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விருது | க. மகதமூடி (இதம் தரும் இதயம் ) |
பரிதிமாற் தமிழ் அறிஞர் தமிழ் ஆய்வு அறிஞர் | தமிழ்மல்லன் (தனித்தமிழ் இயக்கம் -ஒரு நூற்றாண்டு வரலாறு ) |
முத்தமிழறிஞர் கலைஞர் சமூக நீதி விருது | சிவ. இளங்கோ (நிலத்தியில்பின் அரசியல் ) |
சுதேசமித்ரா தமிழ் இதழ் விருது | மானுடம் இதழ் நிறுவனம் |
தொல்காப்பியர் தமிழ் சங்க விருது | மயிலை திருவள்ளுவர் தமிழ் சங்கம் |
அருணாச்சல கவிராயர் விருது | மறத்தமிழன் கலைக்குழு |
6)விடை b)கல்வித்துறை அமைச்சகம்
UMMEED-(Understand,Motivate, Manage, Empathise, Empower and Develop) (புரிந்துகொள்ளுதல், ஊக்குவித்தல், நிர்வகித்தல், அனுதாபப்படுத்துதல், அதிகாரம் அளித்தல் , மேம்படுத்துதல்) எனப்படும் பள்ளிகளுக்கான வழிகாட்டுதல்களை கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களின் நோக்கம் மாணவர்களிடையே அதிகரித்து வரும் தங்களுக்கு தாங்களே தீங்கு விளைவிப்பது மற்றும் தற்கொலை பற்றிய கவலையை நிவர்த்தி செய்வதாகும்.இந்த வழிகாட்டுதல்கள், “ஒவ்வொரு குழந்தையும் முக்கியம்” என்ற கொள்கையின் அடிப்படையில், தற்போது பொதுமக்களின் கருத்துக்காக திறக்கப்பட்டுள்ளன, மேலும் பள்ளிகள் சுய-தீங்கு வழக்குகளை கையாள்வதை மேம்படுத்துவதற்கான தெளிவான வழிமுறைகளை வழங்குகின்றன.முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளில், எச்சரிக்கை அறிகுறிகளைக் காண்பிக்கும் மாணவர்களையும், சுய-தீங்கு விளைவிக்கும் அபாயத்தில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களின் தேவைகளுக்கு உடனடியாகப் பதிலளிப்பதற்கும், ஆதரவை வழங்குவதற்கும் பொறுப்பான பள்ளி ஆரோக்கியக் குழுவை (SWT) நிறுவுதல் ஆகியவை அடங்கும்.
7)விடை d)அக்டோபர் 14
உலக இடம் பெயரும் பறவைகள் தினம் 2023 என்பது ஒரு வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும்.இந்த ஆண்டுஅக்டோபர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது மற்றும் இதன் கருப்பொருள் “தண்ணீர்: பறவை வாழ்வை நிலைநிறுத்துதல்” ஆகும் .இந்த தினம் புலம் பெயர்ந்த பறவைகளின் முக்கியத்துவத்தையும் அவற்றின் பாதுகாப்பு முயற்சிகளையும் எடுத்துரைக்கும் நாள் ஆகும் . .உலக இடம் பெயரும் பறவைகள் தினம் ஆண்டுக்கு இரண்டு முறை கொண்டாடப்படுகிறது இந்த ஆண்டு மே 13 மற்றும் அக்டோபர் 14 உலக இடம் பெயரும் பறவைகள் தினமாக கொண்டாடப்படுகிறது
8)விடை c)லாஸ் ஏஞ்சல்ஸ்
2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்லில் நடைபெறுகிறது .சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 141வது கூட்டத்தொடரில் கிரிக்கெட் போட்டி 2028 ஆம் ஆண்டு ஒலிம்பி போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவித்தது .
9)விடை c)நாகப்பட்டினம்
இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் இலங்கையின் காங்கேசன்துறை இடையே படகு சேவையை அக்டோபர் 14 நாளில் மத்திய அரசு துவங்கி வைத்துள்ளது . இரு நாட்டு இளைஞர்களுக்கும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அதே வேளையில், வர்த்தகம், சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகளை இணைப்பு மேம்பட இச் சேவையின் நோக்கம் ஆகும் .
10) விடை b)அக்டோபர் 12
அக்டோபர் 12 உலக மூட்டுவலி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலக மூட்டுவலி தினம் உலகெங்கிலும் உள்ள மக்கள், மருத்துவ நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களை விழிப்புணர்வைப் பரப்புவதற்கான பிரச்சாரத்தில் பங்கேற்க ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.இந்த ஆண்டு 2023 ஆம் ஆண்டு உலக மூட்டுவலி தினத்தின் கருப்பொருள் “வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மூட்டுவலி நோயுடன் வாழ்வது” என்பதாகும்.உலக மூட்டுவலி தினத்தை கீல்வாதம் மற்றும் ருமாடிசம் இன்டர்நேஷனல் (ARI) மூலம் நிறுவப்பட்டது.உலக மூட்டுவலி தினம் 1996 ஆம் ஆண்டு அக்டோபர் 12 முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது
*************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil