Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 13 அக்டோபர் 2023

அக்டோபர் 13 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • உலக பட்டினி குறியீடு
  • ஜி20 பாராளுமன்ற சபாநாயகர் மாநாடு
  • இந்திரதனுஷ் 5.0 திட்டம்

அக்டோபர் 13ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) 2023 ஆம் ஆண்டுக்கான உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவின் இடம்

a)107

b)109

c)111

d)113

2) கங்கை டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்த மாநில அரசு

a)உத்தரபிரதேசம்

b)உத்தரகாண்ட்

c)மேற்கு வங்கம்

d)அசாம்

3) சக்ரவத்-2023 வருடாந்திர கூட்டு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சி(AJHE) நடைபெற்ற இடம்

a)ஒடிசா

b)கோவா

c)கேரளா

d)ஆந்திரா பிரதேசம்

4) பிரம்மஞான சபையின் முதல் இந்திய தலைவர் யார்

a)அன்னிபெசன்ட்

b)ராதா பர்னியர்

c)நீலகண்ட ஸ்ரீராம்

d)ருக்மணி லட்சுமிபதி

5) “ The Book of My Life my dance with buddha for success” என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்

a)விவேக் அக்னிஹோத்ரி

b)அருந்ததி ராய்

c)விக்ரம் சேத்

d)விக்ரம் சந்திரா

6) 2023 ஆம் ஆண்டு பாரா ஆசியா விளையாட்டு போட்டிகள் எங்கு நடைபெற உள்ளன

a)பெய்ஜிங்

b)ஹாங்சோ

c)வுஹான்

d)ஷாங்காய்

7) ஜி20 பாராளுமன்ற சபாநாயகர் மாநாடு எங்கு நடைபெற உள்ளது  ?

a)மும்பை

b)அகமதாபாத்

c)புது டெல்லி

d)லக்னோ

8) இந்திரதனுஷ் 5.0 திட்டம் எந்த நோய்களை ஒழிக்கும் நோக்கம் கொண்டுள்ளது

a)ரூபெல்லா மற்றும் தட்டம்மை

b)காசநோய்  மற்றும் போலியோ

c)மூளைக்காய்ச்சல்  மற்றும்  தட்டம்மை

d)ரூபெல்லா மற்றும்  காசநோய்

9) சூர்யவம்சம் என்னும் நூலை எழுதியவர் யார்

a)சிவசங்கரி

b)இந்திரா பார்த்தசாரதி

c)சரண்குமார் லிம்பாலே

d)கே. ஐயப்ப பணிக்கர்

10) சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்பு தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 10

b)அக்டோபர் 11

c)அக்டோபர் 12

d)அக்டோபர் 13

 

விடைகள்

1) விடை c)111

2023 ஆம் ஆண்டில் உலக பட்டினி குறியீட்டில் 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தில் உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இந்தியா 107வது இடத்தில் இருந்தது . மதிப்பெண்  பட்டியலில் இந்தியா 100 புள்ளிக்கு  28.7 வாங்கியுள்ளது . இதில் “0”  என்பது பசி இல்லை (நல்ல மதிப்பெண்) என்றும் 100 என்பது மிக மோசமானது என்றும் குறிக்கிறது. இது உலகெங்கிலும் உள்ள ஐரோப்பிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் Welthungerhilfe ஆகியவற்றால் வெளியிடப்படுகிறது . உலகளாவிய பசி குறியீட்டின் குறிகாட்டிகள் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தைகளின்  பருவ குறைபாடு, குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடு மற்றும் குழந்தைகளின்  இறப்பு ஆகும். .அண்டை நாடுகளின் புள்ளிப்பட்டியல்

  • பாகிஸ்தான் 102வது
  • இலங்கை 60வது
  • நேபாளம் 69வது
  • வங்கதேசம்  81வது

2) விடை a)உத்தரபிரதேசம்

உத்தரப்பிரதேச அரசு கங்கை டால்பினை மாநில நீர்வாழ் விலங்காக அறிவித்து.வனவிலங்கு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆறுகள் மற்றும் குளங்களின் தூய்மையைப் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்காக ‘மேரே  கங்கை மேரே டால்பின் 2023’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.கங்கைடால்பின் தேசிய  நீர்வாழ் விலங்காக 2009 ஆம் ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது .

3)  விடை b)கோவா

2023 ஆம் ஆண்டுக்கான சக்ரவத்-2023 என அழைக்கப்படும் வருடாந்திர மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பயிற்சியின் (AJHE) இந்திய கடற்படையால் 09 முதல் 11 அக்டோபர் 23 வரை கோவாவில் நடத்தப்பட்டது. சக்ரவத் பயிற்சியில் இந்தியாவின் ஆயுதப் படைகள், துணை ராணுவப் படைகள், பேரிடர் மீட்பு அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), கல்வி நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் பங்கு பெற்றன . இப்பயிற்சி ஆனது 2022 ஆம் ஆண்டு  “சமன்வே 2022” என்ற பெயரில் இந்திய விமான படையால் ஆக்ராவில் நடத்தப்பட்டது. இது நிறுவனம் சார்ந்த பேரிடர் மேலாண்மை கட்ட்டைமப்புகளின் திறன் மற்றும் அவசர கால நடவடிக்கைகள்  பற்றி மதிப்பீடு செய்வதை நோக்கமாகக் கொண்டது.

4) விடை c)நீலகண்ட ஸ்ரீராம்

பிரம்மஞான சபையின் முதல் இந்திய தலைவர்  நீலகண்ட ஸ்ரீராம் ஆவார் பிரம்மஞான சபை 1875 ஆம் ஆண்டில்   தமிழ்நாட்டின் அடையாரில் நிறுவப்பட்டது.நீலகண்ட ஸ்ரீராம் 1953 முதல் 1973 வரை தலைவராக  இருந்தார். அவரது மகள் ராதா பர்னியர் 1980 முதல் 2013 வரை தலைவராக பணியாற்றினார்.

5) விடை  a)விவேக் அக்னிஹோத்ரி

விவேக் அக்னிஹோத்ரி தனது  புத்தகமான “ The Book of My Life my dance with buddha for success என்ற புத்தகத்தை லக்னோவில் வெளியிட்டார்.

6)விடை b)ஹாங்சோ

2022 ஆம் ஆண்டுக்கான பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 22 முதல் 28 வரை ஹாங்க்சோவில் நடைபெற உள்ளன . பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 309 இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் 196 ஆண் வீரர்கள் மற்றும் 119 பெண் விளையாட்டு வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். 17 விளையாட்டு போட்டிகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. ஜகார்த்தாவில் நடைபெற்ற 2018 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா 9வது இடத்தைப் பிடித்து மற்றும்  72 பதக்கங்களை (15 தங்கம், 24 வெள்ளி மற்றும் 33 வெண்கலப் பதக்கங்கள்) வென்றது.

7)விடை  c)புது டெல்லி

புது டெல்லியில் உள்ள யசோபூமியில் 9-வது ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்கள் உச்சிமாநாடு (பி 20) அக்டோபர் 13,2023 நாளில் நடைபெற உள்ளது .இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, 9 வது பி 20 உச்சி மாநாட்டின் கருப்பொருள் “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றங்கள்” என்பதாகும். இந்த நிகழ்வில் ஜி20 உறுப்பு நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.இந்த பி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் அமர்வுகள், பொது டிஜிட்டல் தளங்கள் மூலம் மக்களின் வாழ்க்கையில் மாற்றம்; பெண்கள் தலைமையிலான வளர்ச்சி; நிலையான வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துதல்; நிலையான எரிசக்தி மாற்றம் ஆகிய நான்கு தலைப்புகளில் கவனம் செலுத்தும்.

8)விடை   a)ரூபெல்லா மற்றும் தட்டம்மை

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 25 அன்று இந்திர தனுஷ் திட்டம் தொடங்கப்பட்டது.  நோய்த்தடுப்புப் பயிற்சியில் இருந்து விலகிய அனைத்து குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக, குறைந்த நோய்த்தடுப்பு பாதுகாப்பு உள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்படும் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் இது ஒரு பிரச்சாரமாகும். இந்திர தனுஷ் திட்டம் 5.0 தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் (NIS) படி  அனைவருக்குமான நோய்த்தடுப்பு திட்டத்தின் (UIP) கீழ் வழங்கப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் நோய்த்தடுப்பு பாதுகாப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்குள் தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி செலுத்துவதை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

9)விடை a)சிவசங்கரி

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரிக்கு “சூர்ய வம்சம்” என்ற நினைவுப் புத்தகத்திற்காக 2022 சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட்டது. சரஸ்வதி சம்மான் விருது 15 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகை,பாராட்டுப் பத்திரம் மற்றும் தகடு கொண்டுள்ளது . கே.கே.பிர்லா அறக்கட்டளையால் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சிவசங்கிரி 36 நாவல்கள், 48 குறு  நாவல்கள், 150 சிறுகதைகள், 5 பயணக் கட்டுரைகள், 7 கட்டுரைத் தொகுப்புகள் மற்றும் 3 சுயசரிதைகள் எழுதியுள்ளார். சூர்ய வம்சம் என்பது அவரது சுயசரிதை புத்தகம் அகும் .

10) விடை  d)அக்டோபர் 13

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்புக்கான  தினம் அனுசரிக்கப்படுகிறது .பேரிடர்கள் மற்றும் சமத்துவமின்மையின் முக்கியமான பிரச்சினைகளுக்கு உலகளாவிய

கவனத்தை ஈர்க்கிறது. இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளை எதிர்கொள்ளும் போது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சமூகங்களுக்கு கல்வி கற்பதற்கும் இந்த நாள் ஒரு தளமாக செயல்படுகிறது.  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையால் சர்வதேச பேரிடர் அபாயக் குறைப்புக்கான தினம் 1989 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது .. பேரிடர் அபாயக் குறைப்புக்கான ஐ.நா. சர்வதேச தினம் 2023 இன் கருப்பொருள்”சமத்துவமின்மையை எதிர்த்துப் போராடுவது, எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது” என்பதாகும்.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil