Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 12 அக்டோபர் 2023

அக்டோபர் 12 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • ‘கணித்தமிழ்24’ மாநாடு
  • அக்சரா லக்சம்
  • பாதுகாப்பு வேளாண் மண்டலம்

அக்டோபர் 12ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை

a)ப்ளூஸ்டார் நடவடிக்கை(Operation Bluestar)

b)அஜய் நடவடிக்கை(Operation Ajay)

c)சக்தி நடவடிக்கை (Operation Sakthi)

d)போலோ நடவடிக்கை(Operation Polo)

2) ஷ்ரேஷ்டா(SHRESTHA) தீட்டத்தை அமல்படுத்தும் அமைச்சகம்

a)பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்

b)சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

c)கல்வி அமைச்சாகம்

d)சுகாதார துறை அமைச்சகம்

3)லோக்நாயக் என்ற சிறப்பு பெயர் கொண்டவருக்கு பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு

a)1998

b)1999

c)2000

d)2001

4) 2024 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை(GDP)   சர்வதேச நாணய நிதியம்  கணித்துள்ள சதவிதம்

a)5.5%

b)6.3%

c)6.5%

d)7.0%

5) உலக மனநல தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 8

b)அக்டோபர் 9

c)அக்டோபர் 10

d)அக்டோபர் 11

6) தமிழக பட்ஜெட்டில் மூலதனச் செலவினங்களுக்காக ஒதுக்கி உள்ள தொகை

a)40,000 கோடி ரூபாய்

b)44,366 கோடி ரூபாய்

c)45,384 கோடி ரூபாய்

d)48,520 கோடி ரூபாய்

7) 2024 ஆம் ஆண்டு ‘கணித்தமிழ்24’ மாநாடு நடைபெற உள்ள இடம்

a)கோவை

b)மதுரை

c)சென்னை

d)தஞ்சாவூர்

8) எழுத்தறிவு 100 சதவிதமாக்க  “அக்சரா லக்சம் ” என்னும் திட்டத்தை கொண்டு வந்த மாநிலம்

a)தமிழ்நாடு

b)கேரளா

c)ஆந்திர பிரதேசம்

d)தெலுங்கானா

9) பாதுகாப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க உள்ள மாவட்டம்

a)சென்னை

b)மயிலாடுதுறை

c)திருவள்ளூர்

d) காஞ்சிபுரம்

10) உலக கண்ணொளி தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 9

b)அக்டோபர் 10

c)அக்டோபர் 11

d)அக்டோபர் 12

 

விடைகள்

1) விடை b)அஜய் நடவடிக்கை(Operation Ajay)

காசாவில் ஹமாஸ் குழுவுடன் முழு அளவிலான போர் நடைபெற்று வரும் நிலையில், இஸ்ரேலில் இருந்து இந்திய குடிமக்கள்  தன்  தாய்நாடு நோக்கி திரும்புவதை  அஜய் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர்.

  • புளூஸ்டார் நடவடிக்கை-1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் நாளில்  நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
  • சக்தி நடவடிக்கை- இந்தியா பொக்ரான் சோதனை களத்தில் நடத்திய ஐந்து அணுகுண்டு சோதனை வெடிப்புகள் குறிப்பிடப்படுகின்றன 1998 ஆம் ஆண்டு மே 11 மற்றும் மே 13 ஆம் நாளில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது.
  • போலோ நடவடிக்கை -செப்டம்பர் மாதம் 1948 ம் ஆண்டு இந்திய ஆயுதப் படையினரால் ஹைதராபாத் மாநிலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையாகும்

2) விடை b)சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

SHRESHTA- Scheme for Residential Education for Students in High school in Targeted Areas.

திட்டம் ஷ்ரேஷ்டா(SHRESHTA) திட்டம்
ஆண்டு ஜூன் 3,2022
அமைச்சகம் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
நோக்கம் உயர்தரக் கல்வியை வழங்கும் மானிய உதவி நிறுவனங்கள், உறைவிட உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் முயற்சிகள் மூலம் கல்வித் துறையில் சேவைக் குறைபாடுள்ள ஆதிதிராவிடர்கள்  பெருமளவில் உள்ள பகுதிகளில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதும், ஆதிதிராவிடர்களின் சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கான சூழலை வழங்குவதும் ஷ்ரேஷ்டாவின் நோக்கமாகும்.

3)  விடை b)1999

ஜெயபிரகாஷ்  நாராயணன்   “லோக் நாயக்” (“மக்கள் தலைவர்”) என்று அழைக்கப்படுகிறார். ஜெய் பிரகாஷ்  நாராயணன்  இந்திய தேசிய இயக்கத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகவும், 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் இருந்தார். 1970-களில் ஜே.பி. நாராயணன் பிரதமர் இந்திரா காந்தியின் கொள்கைகளுக்கு எதிரான இயக்கத்தில் முன்னணி நபராக உருவெடுத்தார்.அவருக்கு 1965 இல் ராமன் மகசேசே விருதும் 1999 இல் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. ஜெயப்பிரகாஷ் நாராயணின் 120வது பிறந்தநாளை இந்திய அரசு அக்டோபர் 11ஆம் தேதி கொண்டாடியது.

4) விடை b)6.3%

2024 நிதி ஆண்டின்  உலகளாவிய வளர்ச்சி கணிப்பை 3% ஆக குறைத்தாலும் கூட சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஜூலையின் 6.1% மதிப்பீட்டில் இருந்து 0.2% ஆல் 6.3 சதவிதமாக  உயர்த்தியது.

5) விடை  c)அக்டோபர் 10

அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் என்பது மன நலத்தின் முக்கியத்துவத்தை நினைவுகூருவதற்கு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய முயற்சியாகும். உலக மனநல தினம் 1992 இல் மனநலத்திற்கான உலக கூட்டமைப்பால் (WFMH) அமைக்கப்பட்டது. உலக மனநல தினம்  2023 ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் கருப்பொருள் “மன ஆரோக்கியம் ஒரு உலகளாவிய மனித உரிமை” ஆகும் 2023 ஆம் ஆண்டின் உலக மனநல தினத்தின் கருப்பொருள் மனநல சவால்களை எதிர்கொள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களுக்கு ஊக்களிக்கும்  விதமாக செயல்படுகிறது.

6)விடை b)44,366 கோடி ரூபாய்

தமிழக அரசு 2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.44,366 கோடியை மூலதனச் செலவினங்களுக்காக வழங்கியது மற்றும் ஆகஸ்ட் வரை பட்ஜெட் தொகையில் 22.44% செலவிட்டுள்ளது. 2023-24ல் ரூ.37,540 கோடி வருவாய் பற்றாக்குறையை நிர்வகிக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது.

7)விடை  c)சென்னை

2024 ஆம் ஆண்டு பன்னாட்டு கணினி தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது .2024 பிப்ரவரி மாதத்தில் சென்னையில் உள்ள பன்னாட்டு கணினி தமிழ்  மாநாட்டை தமிழக அரசு நடத்தவுள்ளது.நவீன கணினியின் செயலாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் தமிழைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

8)விடை   b)கேரளா

யுனெஸ்கோவின் விதிமுறைகளின்படி கேரளா முழுமையாக எழுத்தறிவு பெற்ற மாநிலமாக 1991 ஏப்ரல் 18 அன்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சுமார் 18 லட்சம் பேர் கல்வியறிவில்லாதவர்களாக இருந்தனர்.எழுத்தறிவு 100 சதவிதமாக்க  “அக்சரா லக்சம் ” என்னும் திட்டத்தை  கேரளா மாநிலம் கொண்டுவந்தது .இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாளில் கொண்டுவந்தது .பழங்குடியினர், மீனவ மக்கள் மற்றும் குடிசைவாசிகள் போன்ற மக்களிடையே  எழுத்தறிவின்மையை ஒழிக்க வேண்டும் மற்றும் எழுத்தறிவில் 100 சதவிதம் பெற்று நாட்டினிலே ஏழுத்தறிவு இல்லாத மாநிலமாக உருவெடுப்பெடுப்பதை  நோக்கம் ஆகும் .

9)விடை b)மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பதன் மூலம் ஹைட்ரோகார்பன் தொடர்பான எந்த புதிய திட்டங்களுக்கும் இப்பகுதிக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே  அனுமதி வழங்கப்படும்.தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம் 2020ன் கீழ், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மேலும் புதுக்கோட்டை மற்றும் கடலூரின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவித்தது

10) விடை  d)அக்டோபர் 12

ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை உலகப் பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது, இது பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாடு குறித்து கவனத்தை ஈர்ப்பதற்கான உலகளாவிய நிகழ்வாகும். இந்த ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி வருகிறது. பணியின் போது உங்கள் கண்களை நேசியுங்கள் என்பது இந்த ஆண்டின் கருப்பொருள். இந்த உலகப் பார்வை தினத்தில், பணியிடத்தில் தங்கள் பார்வையைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள மக்களுக்கு உதவுவதிலும் எல்லா இடங்களிலும் தொழிலாளர்களின் கண் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு அழைப்பு விடுப்பதிலும்  கவனம் செலுத்தப்படவுள்ளது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil