Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 11 அக்டோபர் 2023

அக்டோபர் 11 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இந்திய பெருங்கடலோரே நாடுகள் சங்கம்.
  • இந்தியாவின் தேசிய நீர் விலங்கு.
  • சர்வதேச பெண் குழந்தைகள் தினம்.

அக்டோபர் 11ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) எந்த மாநிலம் வணிகர்களுக்கான வரி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்தது

a)கேரளா

b)தமிழ்நாடு

c)ஆந்திர பிரதேசம்

d)கர்நாடகா

2) நீதித்துறையில்  பணிபுரிய பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவு (EWS) பிரிவின் கீழ் உள்ள மக்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க இருக்கும் மாநிலம்

a)பீகார்

b)ஒடிஷா

c)சட்டிஸ்கர்

d)திரிபுரா

3) இந்திய பெருங்கடலோரே நாடுகள் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்கவுள்ள நாடு

a)இலங்கை

b)சீனா

c)இந்தியா

d)இந்தோனேஷியா

4) வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பின்படி இந்தியாவின்  ஒட்டுமொத்த வேலையின்மை விகித சதவீதம்

a)4.1%

b)4.2%

c)4.3%

d)4.4%

5) உலக பருத்தி தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

6) 46வது பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் கண்காட்சி நடைபெற்ற இடம்

a)சென்னை

b)புது டெல்லி

c)ஹைதெராபாத்

d)பெங்களூரு

7) தென் பண்ணை ஆற்றுபடுகையில் யாரோடைய ஆட்சிக்கால செப்பு நாணயங்கள்  கண்டெடுக்கப்பட்டன

a)சேரர் மற்றும் சோழர்

b)சோழர் மற்றும் விஜயநகரம்

c)பாண்டியர்  மற்றும் சோழர்

d)விஜயநகரம்  மற்றும் பாண்டியர்

8) தன்சானியா நாட்டின் 6வது அதிபர் யார்

a)சாமியா சுலுகு ஹாசன்

b)ஜான் மகுஃபுலி

c)ஜகாயா கிக்வேட்

d)பெஞ்சமின் எம்காபா

9) இந்தியாவின் தேசிய நீர் விலங்காக  கங்கை நதியில் வாழும் டால்பின் அறிவிக்கப்பட்டுள்ள ஆண்டு

a)2007

b)2008

c)2009

d)2010

10) சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 8

b)அக்டோபர் 9

c)அக்டோபர் 10

d)அக்டோபர் 11

 

விடைகள்

1) விடை b)தமிழ்நாடு

தமிழக  மாநிலம் வணிகர்களுக்கான வரி மற்றும் அபராதம் தள்ளுபடி செய்தது .இத் திட்டத்திற்கு சமதான் திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது . இதன்படி வரி, வட்டி மற்றும் அபராதம் ரூ.50 ஆயிரம் குறைவாக இருந்தால் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.குறிப்பிட்ட சதவீதத்தை செலுத்தி மற்ற வர்த்தகர்களுக்கு வழக்கில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு வரி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவது இதுவே முதல்முறை. அரசின் இந்த முடிவால், 1.40 லட்சம் வழக்குகளில் சிக்கிய 95,502 வணிகர்கள் நிலுவை தள்ளுபடி மூலம் பயனடைவார்கள்.

2) விடை a)பீகார்

பீகார் அரசு, பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு (EWS) பிரிவில் உள்ளவர்களுக்கு, மாநிலத்தின் நீதித்துறை சேவைகளிலும், அரசு நடத்தும் சட்டக் கல்லூரிகளிலும் 10% இட ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது..

3)  விடை a)இலங்கை

இந்திய பெருங்கடலோரே நாடுகள் சங்கத்தின் தலைவராக இலங்கை பொறுப்பேற்கவுள்ளது. இது 1997 ஆம் ஆண்டில்  இந்தியப் பெருங்கடலின் விளிம்பில் உள்ள நாடுகளின்  அரசுகளுக்கிடையேயான அமைப்பாக தோற்றுவிக்கபட்டது.இந்திய பெருங்கடலோரே நாடுகள் சங்கம் ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை 23 உறுப்பு நாடுகள் மற்றும் 11 பேச்சுவார்த்தைக்கான பங்களிப்பாளர்களாக விரிவடைந்துள்ளது.இதன் செயலகம் மொரிஷியஸில் உள்ளது.

4) விடை b)4.2%

தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) 2020-21 வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பு(PLFS)  வெளியிட்டது. வழக்கமான நிலையின்படி ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 2019-20ல் 4.8% இல் இருந்து 4.2% ஆக குறைந்துள்ளது.

5) விடை  c)அக்டோபர் 7

உலக பருத்தி தினம் 2023 : உலக பருத்தி தினம், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 7 அன்று அனுசரிக்கப்படுகிறது , குறிப்பாக குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளில் வேலைகளை உருவாக்குவதிலும் பொருளாதாரங்களை ஆதரிப்பதிலும் பருத்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. நியாயமான வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும், வளரும் நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த பருத்தித் தொழிலின் அனைத்து அம்சங்களிலும் ஈடுபடுவதற்கும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.முதல் உலக பருத்தி தினம் அக்டோபர் 7, 2019 அன்று முன்மொழியப்பட்டது மற்றும் அதிகாரப்பூர்வமாக WTO ஆல் அங்கீகரிக்கப்பட்டது.உலக பருத்தி தினம் 2023க்கான கருப்பொருள், ‘பண்ணை முதல் நவீனம்  வரை அனைவருக்கும் பருத்தியை நியாயமானதாகவும் நிலையானதாகவும் மாற்றுதல்’, என்பது ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) ஆல் கூறப்பட்டுள்ளது . இந்தகருப்பொருள் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, பொருளாதார வளர்ச்சி, விவசாய மேம்பாடு, வர்த்தகம் மற்றும் வறுமைக் குறைப்பு ஆகியவற்றில் பருத்தித் துறையின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.  .

6)விடை b)புது டெல்லி

46வது பசிபிக் ஆசியா பயணச் சங்கத்தின் கண்காட்சி புது டெல்லியில்  நடைபெற்றது . 1951 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பசிபிக் ஆசிய பயண சங்கம் (PATA) பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்டு,ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பயணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறது.  இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற லாப நோக்கற்ற அமைப்பாகும். PATA டிராவல் மார்ட் என்பது சுற்றுலாத் துறைக்கு சேவை செய்யும் முக்கியமான சர்வதேச வர்த்தக கண்காட்சிகளில் ஒன்றாகும். மேலும் இது பெரும்பாலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த உலகளாவிய சுற்றுலா வர்த்தகம் தொடர்பான தொடர்புகளுக்கான தளமாக செயல்படுகிறது.

7)விடை  b)சோழர் மற்றும் விஜயநகரம்

கடலூர் மாவட்டம் உளுந்தாம்பட்டில்  நடத்திய கள ஆய்வில் சோழர் மற்றும் விஜயநகர கால செப்பு நாணயங்கள் கண்டு பிடிக்கப்பட்டது  .மொத்தம் 3 நாணயங்கள் கண்டுஎடுத்தனர் . அதில் 2 நாணயங்களில் சோழர் காலத்தை சேர்ந்த  தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீராஜராஜ” என பொறிக்கப்பட்டுள்ளது மற்றும் மீதம் இருந்த ஒரு நாணயத்தில்  விஜயநகர காலத்தை சேர்ந்த   தேவநாகரி எழுத்துக்களில் “ஸ்ரீநீலகண்ட “என பொறிக்கப்பட்டுள்ளது தென் பண்ணை ஆற்றுபடுகையில் தொடர்ந்து சங்க காலம் முதல் சோழர் காலம் வரை பழங் கால மக்கள் வாழ்ந்தற்கான தொல்லியல் தடயங்கள் கண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

8)விடை   a)சாமியா சுலுகு ஹாசன்

சாமியா சுலுகு ஹாசன் தான்சானியாவின் 6வது அதிபராக உள்ளார். எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு தான்சானியா அதிபர் சாமியா சுலுஹு ஹசன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார் .இந்தியாவும் தான்சானியாவும் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க உள்ளன. அவர்களின் உறவுகளை கூட்டாண்மைக்கு உயர்த்துவது மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது இந்த  வருகையின்  முக்கிய நோக்கமாகும். இரு நாடுகள் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை உள்ளடக்கிய 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பாக்கப்படுகிறது .

9)விடை c)2009

கங்கை டால்பின் 2009 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது.

  • IUCN: அருகிவரும் நிலையில் உள்ளது
  • வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம்: அட்டவணை-1

10) விடை  d)அக்டோபர் 11

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம், பாலின சமத்துவமின்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தலுக்காக வாதிடுவதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய முயற்சியாகும். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் முதன்முதலில் 2012 இல் கொண்டாடப்பட்டது. பெண்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களில் கவனம் செலுத்துவதற்கும், அவர்களின் அதிகாரமளித்தலை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் மனித உரிமைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நாள் நிறுவப்பட்டது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தின் கருப்பொருள், “பெண் குழந்தைகளின் உரிமைகளில்  முதலீடு செய்யுங்கள்” “பெண் குழந்தைகளின் உரிமைகள்: நமது தலைமை, நமது நல்வாழ்வு” என்பதாகும். இந்த கருப்பொருள், பெண்களிடம் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது, மேலும் அவர்களின் தலைமை மற்றும் நல்வாழ்வு ஒரு நியாயமான மற்றும் சமமான எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது என்பதை அங்கீகரிக்கிறது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil