Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 10 அக்டோபர் 2023

அக்டோபர் 10 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு
  • இந்திய நாட்டின் முதல் சூரிய சக்தி நகரம்
  • 16 வது  வேளாண் அறிவியல் மாநாடு

அக்டோபர் 10ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1)இரும்பு வாள்கள் நடவடிக்கை (Operation Iron Swords) செயல்படுத்திய  நாடு எது?

a)ஈரான்

b)இஸ்ரேல்

c)பாலஸ்தீனம்

d)ஈராக்

2) சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்த முதல் மாநிலம்

a)ஒடிசா

b)பீகார்

c)சட்டிஸ்கர்

d)மத்திய பிரதேசம்

3) 2023 ஆம் ஆண்டிற்கான பொருளாதார நோபல் பரிசு

a)கிளாடியா கோல்டின்

b)ரிச்சர்ட் தாலர்

c)அங்கஸ் டீடன்

d)ஜீன் டிரோல்

4) இந்திய நாட்டின் முதல் சூரிய சக்தி நகரம்

a)அயோத்தி

b)சாஞ்சி

c)வதோதரா

d)குவாலியர்

5) ஆசிய விளையாட்டு போட்டிகளில் பாட்மிண்டன் போட்டிகளில் இந்திய எத்தனை தங்க பதக்கங்கள் வென்று உள்ளது

a)1

b)2

c)3

d)4

6) உலக தபால் தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 6

b)அக்டோபர் 7

c)அக்டோபர் 8

d)அக்டோபர் 9

7) 16 வது  வேளாண் அறிவியல் மாநாடு நடைபெறும் இடம்

a)திருவனந்தபுரம்

b)கொச்சி

c)பாலக்காடு

d)கோழிக்கோடு

8)  2018-2020 ஆம் ஆண்டின் தமிழ்நாட்டின் பேறுகால இறப்பு விகிதம்

a)60

b)58

c)56

d)54

9) வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பு எடுக்கும் அமைப்பு

a)தேசிய புள்ளியில் அலுவலகம்

b)ஊழியர்களின் மாநில காப்பீட்டு நிறுவனம்

c)பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு

d)தேசிய தகவலியல் மையம்

10) தேசிய வாக்காளர் தினம்

a)22 ஜனவரி

b)23 ஜனவரி

c)24 ஜனவரி

d) 25 ஜனவரி

விடைகள்

1) விடை b)இஸ்ரேல்

இஸ்ரேல் மீது பாலஸ்தீன இஸ்லாமிய போராளி அமைப்பான ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலுக்கு இஸ்ரேலின் பதிலடிதான் இரும்பு வாள்கள் நடவடிக்கை  ஆகும் . அக்டோபர் 7 ஆம் நாள் அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது  மிகப்பெரிய தாக்குதலைத் தொடங்கியது  குறைந்தது 1000 மேற்பட்ட  வரைக்கொன்றது மற்றும் நூற்றுக்கணக்கான பணயக்கைதிகளை அது கைப்பற்றியதாகக்  அறிவித்தது ஆபரேஷன் இரும்பு வாள்கள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி பொதுமக்கள் மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல்களை நடத்தும் அமைப்பின் மீது பதிலடி தாக்குதல் ஆகும் . ஆபரேஷன் அக் அக்சா ஸ்டார்ம்(Operation Al –Aqsa Storm) என்பது 2023 அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவால் நடத்தப்பட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மற்றும் திடீர் தாக்குதல் ஆகும்.

2) விடை b)பீகார்

ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் முதல் மாநிலம் பீகார்.  பீகார் அரசு ஜனவரி 2023 இல் ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பைத் தொடங்கி சமீபத்தில் முடிவுகளை வெளியிட்டது. 36.01% மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 27.13% இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், 19.65% பட்டியல் சாதியினர், 14% யாதவர்கள் மற்றும் 3% முசாஹர்கள்.

3)  விடை a)கிளாடியா கோல்டின்

2023 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிளாடியா கோல்டினுக்கு (அமெரிக்கா) “பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்தியதற்காக” வழங்கப்பட்டது. ரிச்சர்ட் தாலர் 2017 ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார்  மற்றும் அங்கஸ் டீடன் 2015 ஆம் ஆண்டு  மற்றும்  ஜீன் டிரோல் 2014 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவர் .பொருளாதாரத்தில் முதல் நோபல் பரிசு 1969 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது .

4) விடை b)சாஞ்சி

மத்தியப் பிரதேசத்தின் ரைசன் மாவட்டத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான சாஞ்சி இந்தியாவின் முதல் சூரிய நகரமாக மாறியுள்ளது.சாஞ்சி, ஆண்டுக்கு 13,747 டன் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கும். இது 2,38,000 மரங்களுக்குச் சமம்.உத்தரப்பிரதேசத்தின் முதல் சூரிய நகரமாக அயோத்தி உருவாகும் என்றும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

5) விடை  a)1

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன் ஜோடியான சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி  பாட்மிண்டனில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாறு படைத்தது.  இறுதிப் போட்டியில் 21-18, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் கொரிய ஜோடியை வீழ்த்தி  தங்க பதக்கத்தை வென்றது .ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பாட்மிண்டனில் வென்ற  முதல் தங்க பதக்கம் இது ஆகும் .  .

6)விடை d)அக்டோபர் 9

1874 ஆம் ஆண்டில் உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் (UPU) உருவாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 ஆம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது. 2023 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் “நம்பிக்கையை ஒன்றாக உருவாக்குதல்: பாதுகாப்பான மற்றும் இணைக்கப்பட்ட எதிர்காலத்திற்காக ஒத்துழைத்தல்”( “Together for Trust: Collaborating for a safe and connected future.”)ஆகும்.

7)விடை  b)கொச்சி

16 வது வேளாண் அறிவியல் மாநாடு கொச்சியில் நடைபெற உள்ளது. இந்தியாவின் வேளாண் உணவு அமைப்புகளை நீடித்த நிறுவனங்களாக மாற்றுவது பற்றிய அறிவியல் உரையாடலை உருவாக்குவது இம்மாநாட்டின் நோக்கமாகும். இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் -மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்  இணைந்து நடத்தும் வேளாண் அறிவியல் மாநாடு கேரளாவில் முதன்முறையாக நடைபெறுகிறது.வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகள் மற்றும் நிலம், நீர் தொடர்புடைய நீடித்த பிரச்சனைகள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், தயாரிப்புகள், வேளாண் இயந்திரங்கள், பருவநிலை நடவடிக்கை, பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க அல்லது மாற்று எரிசக்தி, துல்லிய பண்ணையம், மாற்று வேளாண் முறைகள், கடலோர வேளாண்மை, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட 10 கருப்பொருள் குறித்து இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்..

8)விடை   d)54

2018-2020 ஆம் ஆண்டிற்கான பேறுகால இறப்பு தொடர்பாக இந்திய  தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கையில் தமிழகம் முந்தய கணக்கெடுப்பு விட 54 ஆக குறைந்துள்ளது . பேறுகால இறப்பு விகிதம் என்பது உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பிரசவத்திற்கு முன்னும், பிறகும் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒரு முக்கிய செயல்திறன் காட்டியாகும். பேறுகால இறப்பு விகிதம் (MMR) என்பது கர்ப்ப காலத்தை அல்லது கர்ப்பத்தின் முடிவு காரணமாக 100,000 உயிருள்ள பிறப்புகளுக்கு தாய் இறப்புகளின் எண்ணிக்கை என வரையறுக்கப்படுகிறது. பொதுவாக இது எம்.எம்.ஆர் (MMR)என்று குறிப்பிடப்படுகிறது.  மேலும் 2022-2023ல் ஒரு லட்சத்துக்கு 52 ஆகக் தமிழகத்தில் குறைந்துள்ளது. 2018-20 ஆம் ஆண்டில் இந்தியாவின் பேறுகால இறப்பு விகிதம் 97 ஆக உள்ளது.

9)விடை a)தேசிய புள்ளியில் அலுவலகம்

தேசிய புள்ளியில் அலுவலகம் (NSSO) ஏப்ரல் 2017 இல் வருடாந்தீர தொழிலாளர் மீதான கணக்கெடுப்பை (PLFS) அறிமுகப்படுத்தியது. PLFS இன் நோக்கம் முக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறிகாட்டிகளை (அதாவது. தொழிலாளர் மக்கள் தொகை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம், வேலையின்மை விகிதம்) மதிப்பிடுவதாகும். இது  ஆண்டுதோறும் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் மூன்று மாத கால இடைவெளியில்  நடத்தப்படும் .

10) விடை  d) 25 ஜனவரி

தேசிய வாக்காளர் தினம் (National Voters’ Day – NVD) ஜனவரி 25 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் கொண்டாடப்படுகிறது. தேசிய வாக்காளர் தினம் இந்திய குடிமக்களின் வாக்களிக்கும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil

 

நடப்பு நிகழ்வு – 10 அக்டோபர் 2023_4.1