Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 09 அக்டோபர் 2023

அக்டோபர் 09 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • நீலகிரி வரையாடு தினம்.
  • மின் -அமைச்சரவை.
  • உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினம்.

அக்டோபர் 09ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) நோபல் பரிசு பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை

a)8

b)9

c)10

d)11

2) 19வது  ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியர்கள் வென்ற மொத்த பதக்கங்கள்களின் எண்ணிக்கை

a)100

b)105

c)107

d)110

3) நீலகிரி வரையாடு தினம்

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

4) தமிழகத்தின் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு  புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது  இது எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது ?

a)தூத்துக்குடி

b)சேலம்

c)நாமக்கல்

d)திருச்சி

5) கொல்லேறு ஏரி அமைந்துள்ள மாநிலம்

a)கர்நாடகா

b)தமிழ்நாடு

c)தெலுங்கானா

d)ஆந்திர பிரதேசம்

6) ஆதித்யா எல் -1  விண்கலத்தை விண்ணுக்கு செலுத்தப்பட்ட ராக்கெட்

a)பிஎஸ்எல்வி சி-55

b)பிஎஸ்எல்வி சி-56

c)பிஎஸ்எல்வி சி-57

d)பிஎஸ்எல்வி சி-58

7) இந்திய விமானப்படை  தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

 

8)  மின் -அமைச்சரவை அறிமுகப்படுத்திய  நான்காவது  மாநிலம்

a)திரிபுரா

b)உத்தரகாண்ட்

c)உத்தரபிரதேசம்

d)அருணாச்சல பிரதேசம்.

9)தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட நாள்

a)26 டிசம்பர் 2004

b)26 ஜனவரி 2005

c15 ஆகஸ்ட் 2005

d)23 டிசம்பர் 2005

10)உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினம்

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

விடைகள்

1) விடை b)9

இந்தியாவில் இருந்து 1913 முதல் 2023 வரை மொத்தம் ஒன்பது பேர்  நோபல் பரிசு வென்றவர்கள் ஆவர் .இந்த மதிப்புமிக்க விருதை வென்ற முதல் இந்தியர் ரவீந்திரநாத் தாகூர் 1913 இல் இலக்கியத் துறையில் ஆவார்.

  1. இலக்கியம்: ரவீந்திரநாத் தாகூர் (1913)
  2. இயற்பியல்: சி.வி. ராமன் (1930), சுப்ரமணியன் சந்திரசேகர் (1983)
  3.  உடலியல்: அல்லது மருத்துவம்: ஹர் கோபிந்த் கொரானா (1968)
  4. அமைதி: அன்னை தெரசா (1979), கைலாஷ் சத்யார்த்தி (2014)
  5. பொருளாதாரம் : அமர்த்தியா சென் (1998) அபிஜித் பானர்ஜி (2019)
  6. வேதியியல்: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009)

2) விடை c)107

2022 ஆம் ஆண்டு சீனாவின் ஜெஜியாங்கில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா  பங்குபெற்றது . இது 23 செப்டம்பர் 2023 அன்று தொடங்கி அக்டோபர் 8, 2023 அன்று முடிவடைந்தது. 2018 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 70 பதக்கங்களைப் பெற்ற முந்தைய சிறந்த பதக்கங்கள் சாதனையை இந்தியா முறியடித்தது. இம்முறை 100 பதக்கங்களைக் கடந்து சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்குப் பிறகு நான்காவது நாடாக மாறியது.19வது  ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியர்கள் வென்ற மொத்த பதக்கங்கள்களின் எண்ணிக்கை 107 ஆகும் (தங்க பதக்கம் 28, வெள்ளி பதக்கம் 38 மற்றும் வெண்கலம் பதக்கம் 41)

3)  விடை c)அக்டோபர் 7

தமிழகத்தில் முதல் நீலகிரி வரையாடு தினம் அக்டோபர் 7ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.ERC டேவிடரின் நினைவாக அக்டோபர் 7 ஆம் தேதி ‘நீலகிரி வரையாடு  தினமாக’ கொண்டாடப்படும். 1975 இல் நீலகிரி வரையாடு   பற்றிய  ஆய்வுகளில்முன்னோடியாக இருந்தவர். நீலகிரி வரையாடு தமிழ்நாட்டின் மாநில விலங்கு ஆகும்.இது  நீலகிரி மலைகள் மற்றும் கேரள மாநிலங்களில் இருக்கும்  மேற்கு மற்றும் கிழக்கு பள்ளத்தாக்கின்  தென் பகுதியில்  வாழ்கிறது .இவ்விலங்கை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்  “அருகியநிலை”  உயிரினமாக வகைப்படுத்தியுள்ளது

4) விடை a)தூத்துக்குடி

தமிழகத்தின் உடன்குடி பனங்கருப்பட்டிக்கு  புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது  இது தூத்துக்குடி  மாவட்டத்தில் அமைந்துள்ளது. உடன்குடி பனங்கருப்பட்டியின் தனிச்சிறப்பு அதன் பாரம்பரிய தயாரிப்பு முறை ஆகும்.இதில் நவீன  தயாரிப்பு முறை அல்லது டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் பாஸ்போரிக் அமிலம் போன்ற இரசாயன சேர்க்கைகள் பயன்படுத்தப்படுவதில்லை. உடன்குடி பனங்கருப்பட்டி உள்நாட்டில் மட்டுமல்லாது  சர்வதேச அளவிலும் பிரபலமடைந்துள்ளது. இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

5) விடை  d)ஆந்திர பிரதேசம்

கொல்லேரு ஏரி ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரிகளில் ஒன்றாகும். 1999 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேச அரசு 193 வகையான பறவைகளை கொண்டிருப்பதால், இது ஒரு பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.இது பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வாழ்கிறது. ஆனால் நீர் மாசுபாட்டின் காரணமாக ஏரியின் தரம் சீர்குலைந்தது. பல சுகாதார பிரச்சினைகளை உள்ளூர் மக்கள் எதிர்கொண்டனர்.இறால் மற்றும் மீன்களும் பாதிக்கப்பட்டன. நோய்க்கிருமிகளால் பரவும் நோய்களும் அதிகரித்தன.எனவே, ஏரியை பாதுகாக்க சுற்றுச்சூழல் அமைச்சகம், ‘ கொள்ளேரு திட்டம் ‘  அமைத்தது.இந்த திட்டத்தின் நோக்கம் ஏரியை மாசு இல்லாத சூழலுக்கு மீண்டும் கொண்டு வருவதும் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதும் ஆகும். தற்போது மீண்டும் கொள்ளேரு திட்டம் 2.0 கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது .

6)விடை c)பிஎஸ்எல்வி சி-57

ஆதித்யா எல் 1 என்பது சூரியனைக் கண்காணிக்க முதல் இந்திய திட்டமாகும் . இந்த திட்டத்தின் இயக்குநர் நிகர் ஷாஜி  பிஎஸ்எல்வி சி57 என்ற ராக்கெட்டில் 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2 ஆம் நாளில் ஆதித்யா-எல்1 விண்கலம் ஏவப்பட்டது.சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் கடந்த 37 நாட்களாக எல் -1 புள்ளியை நோக்கி வேகமாக சென்று கொண்டு இருக்கிறது .திட்டமிட்டபடி எல் -1 புள்ளியை சரியாக சென்றடைய எதுவாக அக்டோபர் 6 ஆம் நாள் விண்கலத்தில் உள்ள இயந்திரங்கள் 16 வினாடிகள் இயக்கப்பட்டு அதன் பயண பாதையில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டு சரியான திசையை நோக்கி வெற்றிகரமாக ஆதித்யா எல் -1 செல்ல தொடங்கியுள்ளது .

7)விடை  d)அக்டோபர் 8

இந்திய விமானப்படை தினம் 2023 அக்டோபர் 8 ஆம் தேதி பிரயாக்ராஜில் கொண்டாடப்படுகிறது. இது 1932 அக்டோபர் 8 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டது . ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் விமானப்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு  இந்திய விமானப்படை தினத்தின் 91வது ஆண்டு நிறைவு விழா நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

8)விடை   a)திரிபுரா

திரிபுரா அரசு சமீபத்தில் மாநிலத்தின் மின்-அமைச்சரவை முறையை அறிமுகப்படுத்தியது. இச்சேவையை அமல்படுத்திய இந்தியாவின் நான்காவது மாநிலமாகவும், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசத்திற்குப் பிறகு வடகிழக்கு பிராந்தியத்தில் இரண்டாவது மாநிலமாகவும் திரிபுரா திகழ்கிறது. இந்த அமைப்பின் நோக்கம்  காகிதமில்லா அமைச்சரவைக் கூட்டங்கள், கார்பன் தடம் குறைத்தல் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரத்துவத்தினர் டிஜிட்டல் டேப்லெட்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டைக் குறிக்கிறது.

9)விடை d)23 டிசம்பர் 2005

2005 ஆம் ஆண்டில் டிசம்பர் 23 ஆம் நாள்   அன்று இந்திய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் மூலம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது . தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது, மாநில பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் (SDMA’s) ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான கொள்கைகளை உருவாக்குதல், வழிகாட்டுதல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை வகுத்தல் ஆகியவற்றுக்கு பொறுப்பாகும். சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2000 இறப்புகளுக்கு ஏற்பட்டுள்ளது.

10) விடை  d)அக்டோபர் 8

அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் உலக ஹைட்ரஜன் மற்றும் எரிபொருள் செல் தினத்தை முன்னிட்டு, பசுமை மற்றும் நிலையான எரிசக்தி ஆதாரமாக ஹைட்ரஜனின் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து பயன்படுத்த இந்திய அரசு திட்டம் ஒன்றினை வெளியிட்டுள்ளது . ரூ.400 கோடி மதிப்பிலான  இந்தத் திட்டம்  பசுமை ஹைட்ரஜனை வணிகமயமாக்கவும், இந்தியாவின் காலநிலை மற்றும் எரிசக்தி இலக்குகளுக்கு பங்களிக்கவும் உதவும்  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான வழிகாட்டலை வழங்க முயல்கிறது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil