Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 07 அக்டோபர் 2023

அக்டோபர் 07 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • அமைதிக்கான   நோபல் பரிசு
  • முதலமைச்சர் காலை உணவு திட்டம்
  • மாற்றுத்திறனாளிகளுக்கான நாட்டிலேயே முதல் அதி நவீன விளையாட்டு பயிற்சி மையம்

அக்டோபர் 07ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) 2023 ஆம் ஆண்டு அமைதிக்கான   நோபல் பரிசு வென்றவர்

a)அபி அகமது

b)நதியா முராத்

c)அன்னி எர்னாக்ஸ்

d)நர்கீஸ் முகமதி

2) உலகப் பெருமூளை வாத தினம் கடைபிடிக்கப்படுவது

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

3) முதலமைச்சர் காலை உணவு திட்டம் கொண்டு வந்த இரண்டாவது மாநிலம் எது ?

a)தமிழ்நாடு

b)தெலுங்கானா

c)ஆந்திர பிரதேசம்

d)கேரளா

4) அரசு வேலைகளில் 35 % பெண்களுக்கு இடஒதிக்கீடு வழங்க இருக்கும்  மாநிலம் எது

a)தமிழ்நாடு

b)மத்திய பிரதேசம்

c)ஆந்திர பிரதேசம்

d)பீகார்

5) மாற்றுத்திறனாளிகளுக்கான நாட்டிலேயே முதல் அதி நவீன விளையாட்டு பயிற்சி மையம் எங்கு அமைய உள்ளது

a)வாரணாசி

b)குவாலியர்

c)அகமதாபாத்

d)வதோதரா

6) 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை  வென்ற வீராங்கனை

a)அதிதி சுவாமி

b)ஜோதி சுரேகா

c)பர்னீத் கவுர்

d)சிம்ரன்ஜீத் கவுர்

7)  ஆசிய – பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா எத்தனை தடவை பதவி ஏற்றுள்ளது

a)1

b)2

c)3

d)4

8)  உலக டிஸ்லெக்ஸியா தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 5

b)அக்டோபர் 6

c)அக்டோபர் 7

d)அக்டோபர் 8

9) வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் என்று அழைக்கப்படும் ரெப்போ ரேட்டின் தற்போதைய சதவிதம்

a)5.5%

b)5.8%

c)6.5%

d)6.8%

10) தமிழ்நாட்டில் புதிய STEM பூங்கா எந்த மாவட்டத்தில் அமைய உள்ளது

a)காஞ்சிபுரம்

b)கோவை

c)வேலூர்

d)திருவள்ளூர்

விடைகள்

 1) விடை d)நர்கீஸ் முகமதி

2023 ஆம் ஆண்டு அமைதிக்கான   நோபல் பரிசு நர்கீஸ் முகமதிக்கு  வழங்கப்படுகிறது.அமைதிக்கான   நோபல் பரிசு பெறும் 19வது பெண்மணி ஆவார் .ஈரானில் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்திற்காகவும், மனித உரிமைகள் மற்றும் அனைவருக்கும் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கான போராட்டத்திற்காகவும்  நர்கீஸ் முகமதிக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது  முதல் பெண்மணி ஹங்கேரி நாட்டை சேர்ந்த  பெர்தா வான் சட்னர் ஆவார் .அவருக்கு  1905 ஆம் ஆண்டில் அமைதிக்கான   நோபல் பரிசு வழங்கப்பட்டது . அன்னை தெரசா 6வது பெண்மணி  ஆவார் . அவருக்கு 1979 ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது.

2) விடை b)அக்டோபர் 6

உலக பெருமூளை வாதம் தினம் அக்டோபர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது. பெருமூளை வாதம் என்பது வாழ்நாள் முழுதும் குணப்படுத்த முடியாத ஒரு நோய். 100க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பெருமூளை வாதத்தால் பாதிப்பு அடைந்தவர்களின் குடும்பங்கள், ஆதரவாளர்கள் மற்றும் அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த நாள் அனுசரிக்கிறது . 2023 ஆம் ஆண்டு உலக பெருமூளை வாதம் தினத்தின் கருப்பொருள் “ஒன்றாக வலிமையாக இருப்போம் .

3)  விடை b)தெலுங்கானா

தெலுங்கானா அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை’ அக்டோபர் 6 ஆம் நாளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதுடன் பணிபுரியும் தாய்மார்களின் சுமையை குறைக்கும். இந்த திட்டம்  அரசுப் பள்ளிகளில் படிக்கும்  1 முதல் 10 ஆம் வகுப்பு வரை 23 லட்ச மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது .முதல் மாநிலமாக தமிழ்நாடு  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்  2022 ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 15 ஆம் நாள் ஆரம்பிக்கப்பட்டது .அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை உணவு வழங்கப்படுகிறது .

4) விடை b)மத்திய பிரதேசம்

மத்தியப் பிரதேச அரசு வனத் துறையைத் தவிர்த்து அனைத்து மாநில அரசுப் பணியிடங்களிலும் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு அளிக்க உள்ளது .கல்வித் துறையில் பாலின சமநிலை மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில் 50% ஆசிரியர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது .

5) விடை  b)குவாலியர்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் மாற்றுத்திறனாளிக்கான  நாட்டின் முதல் உயர் தொழில்நுட்ப விளையாட்டுப் பயிற்சி மையத்தை பிரதமர்  திறந்து வைத்தார் இந்த முன்முயற்சியானது விளையாட்டில் சம வாய்ப்புகளை வழங்குதல், திறமைகளை மேம்படுத்துதல் மற்றும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் பங்கேற்பதை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

6)விடை b)ஜோதி சுரேகா

19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தான் பங்கு பெற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் தங்க பதக்கங்களை  வென்ற வீராங்கனை ஜோதி சுரேகா ஆவார் . வில்வித்தை வீராங்கனை ஆன இவர் 19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் தனிநபர்,கலப்பு இரட்டையர் ,பெண்கள் குழு  என மூன்று பிரிவுகளிலும் பங்கு பெற்று மூன்றிலும் தங்க பதக்கங்களை வென்றார் . இதன் மூலம் ஆசிய போட்டிகளில் பங்கு பெற்று அனைத்திலும் தங்கம் வென்ற வீராங்கனை என சாதனை படைத்துள்ளார் .

7)விடை  c)3

2018 – 2021, 2021 – 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய – பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா ஏற்கனவே இரண்டு முறை பணியாற்றிய நிலையில் தற்போது இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ் 1977-ஆம் ஆண்டில்அமைக்கப்பட்ட  ஆசிய – பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனம் தனித்துவமான பிராந்திய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும்.சர்வதேச ஒலிபரப்பு நிறுவனத்தில் மதிப்புமிக்க இப்பதவியை வகிப்பது, இந்தியா மற்றும் பிரசார் பாரதி மீது சர்வதேச ஊடகங்களின் வலுவான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. ஒலிபரப்புத் துறையில் மேலும் பல மைல்கற்களை அடைய இந்தியாவுக்கு  அடித்தளம் அமைக்கிறது.

8)விடை   d)அக்டோபர் 8

உலக டிஸ்லெக்ஸியா தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. டிஸ்லெக்ஸியா என்பது  பொதுவாக கற்றலில் ஏற்படும் குறைபாடாகும். இது படிப்பு மற்றும் எழுதும் திறனைப் பாதிக்கிறது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு சரளமாக வாசிப்பதும், எழுதுவதும் சவாலான விஷயமாகும்.உலக டிஸ்லெக்ஸியா தினம், இந்தப் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பது பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை, டிஸ்லெக்ஸியா குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை நடத்துகிறது .

9)விடை c)6.5%

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதம் என்று அழைக்கப்படும் ரெப்போ ரேட்டின் தற்போதைய சதவிதம்  6.5% ஆகும் .இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் 2023-24 நிதியாண்டிற்கான இரு மாத பணவியல் கொள்கையை அறிவித்தார். வங்கி நிலையான நிலையைத் தக்க வைத்துக் கொண்டது மற்றும் ரெப்போ வட்டி விகிதம்  6.5% ஆகக் அறிவித்தது . ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருப்பது இது நான்காவது முறையாகும்.

10) விடை  b)கோவை

கோவை மாநகராட்சி 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான STEM பூங்காவிற்கு டெண்டர் எடுத்துள்ளது.கோயம்புத்தூர் நகர மாநகராட்சி (CCMC) STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பூங்காவை அமைப்பதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.இந்தியாவின் முதல் STEM பூங்கா தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில்  அமைக்கப்பட்டது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil