Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 06 அக்டோபர் 2023

அக்டோபர் 06 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இலக்கியத்திற்கான  நோபல் பரிசு
  • சாகர் பரிக்ரமா
  • உலக வாழ்விட தினம்

அக்டோபர் 06ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) 2023 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான  நோபல் பரிசு வென்றவர்

a)லூயிஸ் க்ளூக்

b)அப்துல்ரசாக் குர்னா

c)அன்னி எர்னாக்ஸ்

d)ஜான் ஃபோஸ்

2) இராமலிங்க அடிகளார் எழுதிய  “மனுமுறை கண்ட வாசகத்தில்” இடம் பெற மன்னனின் பெயர்

a)எல்லாளன்

b)மாந்தி வேலன்

c)நெடுந் ஜெம்பியன்

d) நெடுந் காத்தான்

3) ஹிட்டாச்சி எனர்ஜியின் மிகப்பெரிய உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் எங்கு அமைய உள்ளது

a)புது டெல்லி

b)சென்னை

c)சூரத்

d)பெங்களூரு

4) சாகர் பரிக்ரமா எந்த அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படுகிறது

a)மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்

b)போக்குவரத்து துறை   அமைச்சகம்

c)தகவல்தொழில்நுட்பம் துறை அமைச்சகம்

d)மின்சார துறைஅமைச்சகம்

5) யாக் சுர்பி என்ற பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கபட்டுள்ளது இது எந்த மாநிலத்தை சார்ந்தது

a)அசாம்

b)அருணாச்சல பிரதேசம்

c)சிக்கிம்

d)ஹிமாச்சல் பிரதேசம்

6) கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள மாவட்டம்

a)தூத்துக்குடி

b)திருநெல்வேலி

c)விருதுநகர்

d)கன்னியாகுமரி

7) எந்த வீராங்கனை பி. டி. உஷா வின் 39 ஆண்டுகால 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தய சாதனையை சமன் செய்தார்

a)ஹிமா தாஸ்

b)நித்யா ராமராஜ்

c)வித்யா ராமராஜ்

d)கமல்ஜீத் சந்து

8) கிராம சபா கூட்டம் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு எத்தனை முறை கூடும்

a)3

b)4

c)5

d)6

9) உலக வாழ்விட தினம் அனுசரிக்கப்படுவது

a)அக்டோபர் 1

b)அக்டோபர் 2

c)அக்டோபர் 3

d)அக்டோபர் 4

10)லோனாக் ஏரி எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது

a)அசாம்

b)அருணாச்சல பிரதேசம்

c)சிக்கிம்

d)ஹிமாச்சல் பிரதேசம்

 

விடைகள்

1) விடை d)ஜான் ஃபோஸ்

இலக்கியத்திற்கான நோபல் பரிசு 2023 நார்வே  எழுத்தாளர்  ஜான் ஓலாவ் ஃபோஸ்ஸுக்கு வழங்கப்பட்டது. இவரின் “சொல்ல முடியாதவற்றுக்கு குரல் கொடுக்கும் அவரது புதுமையான நாடகங்கள் மற்றும் உரைநடைக்காக”.இந்த ஆண்டு நோபல் பரிசு வழங்கப்படுகிறது .செப்டாலஜி I-VII, மார்னிங் அண்ட் ஈவினிங், எ ஷைனிங் மற்றும் அலிஸ் அட் தி ஃபயர் ஆகியவை இவர் எழுதிய புத்தங்கள் ஆகும்.

2) விடை a)எல்லாளன்

இராமலிங்க அடிகளார் எழுதிய  “மனுமுறை கண்ட வாசகத்தில்” இடம் பெற மன்னனின் பெயர் எல்லாளன் ஆகும். இவரின் மறுப்பெயர் மனுநீதி சோழன் ஆகும் . மனுமுறைகண்ட வாசகம் என்பது வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகள் அருளிய இயற்றமிழ் நூலாகும்.மனுநீதிச் சோழன் நீதி கேட்டு வந்த பசுவிற்காக தன் புதல்வனான வீதிவிடங்கனை தேர்க்காலில் ஏற்றி  அக்கன்று போல் மாய்த்துக் கொல்ல ஆணைபிறப்பித்தலும் சிவனருளால் சோழன் மகன் வீதிவிடங்கன் உயிர்ப்பிக்கப்பட்டதையும் கதையாகக் கூறும் நூலாகும்.வள்ளலாரின் 200 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும்  “தனிப்பெருங்கருணை நாள்” அனுசரிக்கப்படுகிறது

3)  விடை b)சென்னை

ஹிட்டாச்சி எனர்ஜியின் மிகப்பெரிய உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மையம் சென்னையில் அமைய உள்ளது .இந்த மையம் 40 நாடுகளில் ஆண்டுக்கு 1,000க்கும் மேற்பட்ட செயல்  திட்டங்களை நிறைவேற்றும் வகையில் உள்ளது. திட்ட மேலாண்மை, டெண்டரிங், , வாடிக்கையாளர் சேவைகள், சந்தைப்படுத்தல், இணைய பாதுகாப்பு, , கணினி ஆய்வுகள் மற்றும் தொலைநிலை சேவைகள் ஆகிய செயல் திட்டங்களை நிறைவேற்ற உள்ளது .

4) விடை a)மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம்

சாகர் பரிக்ரமா என்பது நாட்டின் அனைத்து கடலோரப் பகுதியிலும் உள்ள மீனவ சமூகத்தை சென்றடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு திட்டமாகும். மீனவர்களின் பிரச்சினைகள், அனுபவங்கள் மற்றும் தேவைகளைப் புரிந்து கொள்ளவும், கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.சாகர் பரிக்ரமா 9-வது கட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீன்வளத் துறை அதிகாரிகள், மாவட்ட அலுவலர்கள், மத்திய அரசின் மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், இந்திய கடலோர காவல்படை, இந்திய மீன்வள ஆய்வு மையம், தேசிய மீன்வள அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்ப மற்றும் பயிற்சி நிறுவனம், மத்திய மீன்வள கடல்சார் மற்றும் பொறியியல் பயிற்சி நிறுவனம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு 1,076 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது.  இது நாட்டிலேயே இரண்டாவது பெரிய கடற்கரை மாநிலமாகும். இம்மாநிலம் கடல், உவர்நீர் மற்றும் உள்நாட்டு மீன்வளம் ஆகியவற்றில் செழுமையானதாகவும் மீன் பிடிப்பு மற்றும் வளர்ப்புக்கு ஏற்றதாகவும் உள்ளது. சாகர் பரிக்ரமாவின் முதல் எட்டு கட்டங்கள் குஜராத், டையூ மற்றும் டாமன், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் அந்தமான் மற்றும்  நிக்கோபார் உள்ளிட்ட 8 கடலோர மாநிலங்கள்  மற்றும் யூனியன் பிரதேசங்களில் 4,115 கிலோ மீட்டர் பயணத்தைக் கொண்டதாக அமைந்தது.

5) விடை  b)அருணாச்சல பிரதேசம்

அருணாச்சலப் பிரதேசத்தில் இயற்கையாகவே புளிக்கவைக்கப்பட்ட பால் தயாரிப்பான ‘யக் சுர்பி’க்கு மதிப்புமிக்க புவிசார் குறியீடு (GI) அந்தஸ்து கிடைத்துள்ளது.யாக் (Yak) என்பது  இமயமலைப் பகுதிகளில் காணப்படும் ஒரு மாட்டினம் ஆகும் .

6)விடை b)திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் திட்டம் என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளத்தில் அமைந்துள்ள ஒரு அணுமின் நிலைய வளாகமாகும்.இது  இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மற்றும் ஆசியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம் ஆகும் .இந்த ஆலை ஒவ்வொரு  கட்டங்களாக  கட்டப்பட்டு வருகிறது தற்போது நான்கு அணு உலைகள் செயல்படுகின்றன. மேலும் ஆறு அணு உலைகள் கட்டுமானத்தில் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் ரஷ்யாவுடன் இணைந்து கட்டப்பட்டு வருகிறது.

7)விடை  c)வித்யா ராமராஜ்

வித்யா ராமராஜ் வீராங்கனை பி. டி. உஷா வின் 39 ஆண்டுகால 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் ஓட்ட பந்தய சாதனையை சமன் செய்தார் .1984 ஆம் ஆண்டில் லாஸ் ஏஞ்சலில் நடைபெற்ற 23 வது ஒலிம்பிக் போட்டியில் பி. டி. உஷா  பங்கு பெற்று நான்காம் இடம் பிடித்தார். அவர் 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் 55.42 வினாடிகளில் கடந்தார் . அவருடய சாதனையை 19வது ஆசியா விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தடைகள் தாண்டுதல் போட்டியில் வித்யா ராமராஜ் பங்கு பெற்று சமன் செய்தார் . இதன் மூலம் வெண்கல பதக்கத்தையும் வென்றார் . இவருக்கு நித்யா ராமராஜ் என்ற இரட்டை சகோதரியும்  உள்ளார் . அவரும் ஒரு தடகள வீராங்கனை ஆவார் .

8)விடை   d)6

கிராம சபா கூட்டம் தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 6 முறை நடத்தப்படுகிறது .

  1. ஜனவரி 26
  2. மார்ச் 22
  3. மே 1
  4. ஆகஸ்ட் 15
  5. அக்டோபர் 2
  6. நவம்பர் 1

 9)விடை b)அக்டோபர் 2

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை கொண்டாடப்படும் உலக வாழ்விட தினம் நமது வாழ்விடங்களின் நிலையைப் பற்றி சிந்திக்கவும், ஒவ்வொரு தனிநபருக்கும் போதுமான தங்குமிடம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமையை வலியுறுத்தவும் உலகளாவிய தளமாக செயல்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி உலக வாழ்விட தினம் அனுசரிக்கப்படுகிறது. உலக வாழ்விட தினம் – 2023 இன் கருப்பொருள் “நகர்ப்புற பொருளாதாரங்களின் வலிமை: நகரங்கள் வளர்ச்சி மற்றும் மீட்புக்கான இயக்கிகள்” என்பதாகும்.

10) விடை  c)சிக்கிம்

இது ஒரு பனிப்பாறை- மொரைன்(Moraines)அணைக்கட்டப்பட்ட ஏரியாகும். இது சிக்கிமின் வடமேற்கு பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 5200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ளத்தால்(Glacial Lake Outburst Flood (GLOFs)) பாதிக்கப்படக்கூடிய அபாயகரமான 14 ஏரிகளில் இதுவும் ஒன்றாகும்.இது லோனாக் பனிப்பாறை உருகியதால் உருவானது. தெற்கு லோனாக் ஏரி திடீரென நிரம்பியதால் டீஸ்டா ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ஏற்பட்டது. இந்த சிறிய மலைப்பகுதி மாநிலத்தில் மேக வெடிப்பால் குறைந்தது 14 பேர் உயிரிழந்து 102 பேர் காணாமல் போயுள்ளனர்.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil