Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு – 04 அக்டோபர் 2023

அக்டோபர் 04 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இயற்பியலுக்கான நோபல் பரிசு .
  • உத்பவ் திட்டம்
  • உலக விலங்குகள் நல தினம்

அக்டோபர் 04ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) 2023  ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு

a)பியர் அகோஸ்டினி,பிரேன்க் க்ரஸ்ஸ் மற்றும் அன்னே எல்’ஹுல்லியர்

b)அலைன் அம்சம் ,ஜான் கிளாசர்  மற்றும் அன்டன் ஜெய்லிங்கர்

c)ஜேம்ஸ் பீபிள்ஸ் ,மைக்கேல் மேயர்  மற்றும் டிடியர் குலோஸ்

d)ரெய்னர் வெயிஸ், பாரி பாரிஷ்  மற்றும் கிப் தோர்ன்

2) சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை என்ற நாவலை எழுதியவர்

a)சோ.தர்மன்

b)வண்ணதாசன்

c)சி.எஸ்.லட்சுமி

d) எஸ்.ராமகிருஷ்ணன்

3) 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய இந்தியன் என்ற விருதை பெறுபவர்

a)அனில் அகர்வால்

b)சுதா மூர்த்தி

c)சுபாஷ் சந்திரா

d)நாராயண மூர்த்தி

4) 9வது மாலத்தீவு குடியரசு தலைவராக பதவியேற்றவர்

a)முகமது வஹீத் ஹாசன்

b)அப்துல்லா யாமீன்

c)இப்ராஹிம் முகமது சோலிஹ்

d)முகமது முய்சு

5) உத்பவ் திட்டத்தின் நோக்கம் என்ன

a)பண்டைய இந்திய அரசாட்சி மற்றும் போர்க்கலை மீட்பது

b)அனாதை மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி மற்றும் ஆதரவை வழங்குதல்

c)பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளித்தல்

d)அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது

6) எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு  டெக்கத்லான் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது

a)40

b)45

c)49

d)50

7) எந்த மாநிலம் 9 இஸ்ரோ விஞ்ஞானிகள்களுக்கு 25லட்ச ரூபாய் பரிசு வழங்கியது

a)ஆந்திர பிரதேசம்

b)தெலுங்கானா

c)தமிழ்நாடு

d)கர்நாடகா

8) உலக விலங்குகள் நல தினம் கடைபிடிக்கப்படுவது

a)அக்டோபர் 1

b)அக்டோபர் 2

c)அக்டோபர் 3

d)அக்டோபர் 4

9) எந்த போராட்டத்தில் பங்குகொண்டு திருப்பூர் குமரன் தன் உயிரை இழந்தார்

a)ஒத்துழையாமை இயக்கம்

b)சட்ட மறுப்பு  இயக்கம்

c)கிலாபத் இயக்கம்

d)வெள்ளையனே வெளியேறு இயக்கம்

10 ) ஒரு கோடி பனைமர விதைகள் கடற்கரை மாவட்டங்களில்   விதைக்க திட்டம் கொண்ட வந்த மாநிலம்

a)ஆந்திர பிரதேசம்

b)தெலுங்கானா

c)தமிழ்நாடு

d)கர்நாடகா

விடைகள்

1) விடை a)பியர் அகோஸ்டினி,பிரேன்க் க்ரஸ்ஸ் மற்றும் அன்னே எல்’ஹுல்லியர்

பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியின் அட்டோசெகண்ட் துடிப்புகளை உருவாக்கும் சோதனை முறைகளுக்காக பியர் அகோஸ்டினி,பிரேன்க் க்ரஸ்ஸ் மற்றும் அன்னே எல்’ஹுல்லியர் ஆகியோருக்கு 2023 இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது .இதில் பியர் அகோஸ்டினி மற்றும் அன்னே எல்’ஹுல்லியர்  பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்
மற்றும் பிரேன்க் க்ரஸ்ஸ்  ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர் ஒரு அட்டோசெகண்ட்=10-18

2) விடை c)சி.எஸ்.லட்சுமி

“சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை” என்ற நாவலை எழுதியவர் சி.எஸ். லட்சுமி  ஆவார் .இவரின் புனைப்பெயர் “அம்பை”. ஆகும் இந்த நாவல் 2021 ஆம் ஆண்டு கான சாகித்ய அகாடெமி விருது கிடைத்தது .இவர் எழுதிய முதல் சிறுகதை “சிறகுகள் முறியும் “1976 ஆம் ஆண்டு வெளிடப்பட்டது.இவருக்கு 2023 ஆம் ஆண்டின் டாடா இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

3)  விடை b)சுதா மூர்த்தி

பிரபல எழுத்தாளரும், தொண்டு நிறுவனருமான சுதா மூர்த்தி  கனடா இந்தியா அறக்கட்டளையின் (CIF) உலகளாவிய இந்திய விருதை டொராண்டோவில் நடைபெற்ற இந்திய-கனடா மாபெரும் விழாவில் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். 50,000 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் தங்கள் துறையில் அழியாத அடையாளத்தை விட்டுச் சென்ற ஒரு சிறந்த இந்திய ஆளுமைக்கு வழங்கப்படுகிறது.

4) விடை d)முகமது முய்சு

9வது மாலத்தீவு குடியரசு தலைவராக பதவியேற்றவர்  முகமது முய்சு ஆவார் இவர் மாலத்தீவின் முற்போக்குக் கட்சி சார்ந்தவர் .இதற்கு முன் குடியரசு தலைவராக இருந்தவர் இப்ராஹிம் முகமது சோலிஹ் ஆவார்.

5) விடை  a)பண்டைய இந்திய போர்க்கலை அரசாட்சி, போர்க்கலை மீட்பது

உத்பவ் திட்டம்  என்பது பண்டைய இந்திய அரசாட்சி, போர்க்கலை, ராஜதந்திரம் மற்றும் மகத்தான மூலோபாயம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆழமான இந்தியப் பாரம்பரிய அரசு மற்றும் உத்திசார் சிந்தனைகளை மீண்டும் கண்டுபிடிக்க இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்ட ஒரு முன்முயற்சியாகும். இந்தத் திட்டம் இந்தியாவின் வளமான வரலாற்று விவரிப்புகளை அரசு மற்றும் உத்திசார்  சிந்தனைகளின் தளங்களில் ஆராய முயற்சிக்கிறது. இது சுதேச ராணுவ முறைகள், வரலாற்று நூல்கள், பிராந்திய நூல்கள் மற்றும் ராச்சியங்கள், கருப்பொருள் ஆய்வுகள் மற்றும் சிக்கலான கௌடில்யர் ஆய்வுகள் உள்ளிட்ட பரந்த அலைவரிசையில் கவனம் செலுத்துகிறது.

மற்ற திட்டத்தின் நோக்கங்கள்

  • வாத்சல்யா திட்டம் – அனாதைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி மற்றும் ஆதரவை வழங்குதல்.
  • சக்தி திட்டம் – பெண்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தல்.
  • இந்திரதனுஷ் திட்டம் — அனைத்து குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பு.

6)விடை c)49

49 ஆண்டுகளுக்கு பிறகு  டெக்கத்லான் போட்டியில் இந்தியா பதக்கம் வென்றுள்ளது .19 வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் டெக்கத்லான் போட்டியில் பங்குபெற்று தேஜஸ்வின் ஷங்கர் மொத்தம் 7666 புள்ளிகள் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றார் .1974 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவிற்கு கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும் . சீனா மற்றும் ஜப்பான் முறையை தங்கம் மற்றும் வெண்கலம் பதக்கங்களை வென்றன.

7)விடை  c)தமிழ்நாடு

இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒவ்வொருவருக்கும் 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும், முதுகலைப் பட்டதாரி பொறியியல் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தையும் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

தமிழ் இஸ்ரோ விஞ்ஞானிகளின் பட்டியல்

  1. இஸ்ரோ தலைவர் கே. சிவன், சந்திரயான்-1 மற்றும் 2
  2. திட்ட இயக்குனர், மயில்சுவாமி அண்ணதுரை
  3. திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநர் – இஸ்ரோ வி. நாராயணன்
  4. சதிஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குனர், ஏ. ராஜராஜன்
  5. இஸ்ரோ விஞ்ஞானி எம். சங்கரன்
  6. சந்திரயான்-3 திட்ட இயக்குநர் பி. வீரமுத்துவேல்
  7. இஸ்ரோ விஞ்ஞானி எம். வனிதா
  8. இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜி
  9. இஸ்ரோ- திரவ இயக்க வளாகத்தின் இயக்குநர், ஜே. அசீர் பாக்கியாஜ்

8)விடை   d)அக்டோபர் 4

அக்டோபர் 4 ஆம் தேதி ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் உலக விலங்கு நல தினம்  உலகளாவிய விலங்கு நல தரங்களை உயர்த்துவதற்கும் உலகை அனைத்து விலங்குகளுக்கும் சிறந்த இடமாக மாற்றுவதற்கும் ஆகும். உலக விலங்கு நல தினம் முதன்முதலில் 24 மார்ச் 1925 அன்று ஹெய்ன்ரிச் சிம்மர்மேன் என்ற ஜெர்மனியரால் ஆரம்பிக்கப்பட்டது . 2023 ஆம் ஆண்டுக்கான உலக விலங்குகள் தினத்தின் கருப்பொருள் “பெரியது அல்லது சிறியது, அனைவரையும் நேசிக்கவும்” (“Great or Small, Love Them All”)என்பதாகும். உலக விலங்கு தினம் என்பது விலங்குகளின் உரிமைகளை மேம்படுத்துவதன் மூலம் விலங்குகளின் பராமரிப்பு தரங்களை உலகளவில் உயர்த்துவதாகும்.

 9)விடை b)சட்ட மறுப்பு  இயக்கம்

சட்ட மறுப்பு  இயக்கம் போராட்டத்தில் பங்குகொண்டு திருப்பூர் குமரன் தன் உயிரை இழந்தார். இவர் 1907 ஆம் ஆண்டில் அக்டோபர் 4 ஆம் நாளில்  ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் பிறந்தார். 1932 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள்  சார்பில் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு 1932 ஜனவரி 10 ஆம் தேதியன்று கையில் தேசியக் கொடியினை ஏந்தி தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜனவரி 11 ஆம் நாளில் உயிர் துறந்தார். இதனால் இவர் கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.இவரது 116 வது பிறந்த நாளை இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

10) விடை  c)தமிழ்நாடு

கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்யத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவு செய்யப்படும். மாநிலத்தின் 14 கடலோர மாவட்டங்களில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்க மாநில வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

 

 

*************************************************************************

 

Tamil Nadu Mega Pack (Validity 12 Months)

 

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here

Adda247App |  Adda247 Tamil Youtube

Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group

Instagram = Adda247 Tamil