அக்டோபர் 03 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்
இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்
- மருத்துவத்திற்கான நோபல் பரிசு .
- பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற தமிழக ரயில்வே நிலையம்.
- சர்வதேச இணைய வேக தரவரிசை.
அக்டோபர் 03ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்
1) 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்கள்
a)கேத்தலின் கரிக்கோ மற்றும் ட்ரு வைஸ்மென்
b)சுவான்டே பாபோ
c)ஆர்டெம் பட்டபூத்தியன் மற்றும் தாவீது சூலியசு
d)சார்லசு ரைசு ,மைக்கேல் ஆட்டன் மற்றும் ஆர்வி ஆலதர்
2) 2023 ஆம் ஆண்டுக்கான பிளாட்டினம் சான்றிதழ் பெற்ற தமிழக ரயில்வே நிலையம்
a)கோவை ரயில்வே நிலையம்
b)மதுரை ரயில்வே நிலையம்
c)எம்.ஜி .ஆர் . சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம்
d)திருச்சி ரயில்வே நிலையம்
3) காந்தி தொடர்புடைய விடுதலை இயக்கங்களை காலவரிசை படுத்துக்க
- சம்பிரான் இயக்கம்
- கேடா இயக்கம்
- கிலாபத் இயக்கம்
- ஒத்துழையாமை இயக்கம்
- வெள்ளையனே வெளியேறு இயக்கம்
a)2,1,3,4,5
b)3,1,2,4,5
c)1,2,3,4,5
d)4,1,2,3,5
4) எல்லை சாலைகள் அமைப்பின் புதிய தலைமை இயக்குனர்
a)ராஜீவ் சவுதிரி
b)ரகு ஸ்ரீனிவாசன்
c)சுரேஷ் சர்மா
d)ரஞ்சித் சிங்
5) 2023 ஆம் ஆண்டுக்கான சாஸ்திர ராமானுஜன் பரிசு வென்றவர்
a) ருய்சியாங் ஜாங்
b)யுய்ங்க்கிங் டங்
c)வில் சவின்
d)சாய் எவ்ரா
6) சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுவது
a)செப்டம்பர் 27
b)செப்டம்பர் 28
c)செப்டம்பர் 29
d)செப்டம்பர் 30
7) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் யார்
a)இந்திரா காந்தி
b)ராஜிவ் காந்தி
c)லால் பகதூர் சாஸ்திரி
d)மொராஜி தேசாய்
8) 19வது ஆசிய போட்டிகளில் தூப்பாக்கி சுடுதல் பிரிவில் 4 பதக்கங்கள் வென்ற இந்திய வீராங்கனை
a)ஈஷா சிங்
b)பாலக் குலியா
c)மனு பாக்கர்
d) மெஹுலி கோஷ்
9) சர்வதேச இணைய வேக தரவரிசை இந்தியாவின் இடம்
a)46
b)47
c)48
d)50
10 )உலக சுகாதார மையம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
a)1946
b)1948
c)1950
d)1952
விடைகள்
1) விடை a)கேத்தலின் கரிக்கோ மற்றும் ட்ரு வைஸ்மென்
கோவிட் -19 க்கு எதிரான பயனுள்ள mRNA தடுப்பூசிகளை உருவாக்க உதவிய நியூக்ளியோசைடு அடிப்படை மாற்றங்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக கேத்தலின் கரிக்கோ மற்றும் ட்ரு வைஸ்மென் இருவருக்கும் 2023 ஆம் ஆண்டு மருத்துவத்திற்காக நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது . கேத்தலின் கரிக்கோ ஹங்கேரியின் நாட்டை சார்ந்தவர் மற்றும் ட்ரூ வைஸ்மென் அமெரிக்கா நாட்டை சார்ந்தவர் ஆவர்.
2) விடை c)எம்.ஜி .ஆர் . சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையம்
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இந்திய பசுமைக் கட்டிட மன்றம் (IGBC) 2023 ஆம் ஆண்டுக்கான பிளாட்டினம் சான்றிதழை வழங்கியுள்ளது.ரயில் நிலையத்தை நிகர பூஜ்ஜிய ஆற்றல் கட்டிடமாக மேம்படுத்தியதற்காக இச் சான்றிதழ் வழங்கி உள்ளது.
.3) விடை c)1,2,3,4,5
வரிசை எண் | வருடம் | சுகந்திர இயக்கங்கள் |
1. | 1917 | சம்பிரான் இயக்கம் |
2. | 1918 | கேடா இயக்கம் |
3. | 1919 | கிலாபத் இயக்கம் |
4. | 1920 | ஒத்துழையாமை இயக்கம் |
5. | 1942 | வெள்ளையனே வெளியேறு இயக்கம் |
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது இந்தியாவிலும் உலகெங்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். மகாத்மா காந்தி அல்லது தேசத்தின் தந்தை என பிரபலமாக அறியப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் 154வது பிறந்த தினம் அக்டோபர் 2 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தி தினத்தின் கருப்பொருள் “ஒன்றாம் தேதி, ஒரு மணி நேரம், ஒன்றாக இணைவோம்” (Ek Tareekh Ek Ghanta Ek Saath) ஆகும்.
4) விடை b)ரகு ஸ்ரீனிவாசன்
27வது தலைமை இயக்குநராக இருந்த ராஜீவ் சவுத்ரி ஓய்வு பெற்றதை அடுத்து எல்லை சாலைகள் அமைப்பின் 28வது தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் ரகு ஸ்ரீனிவாசன் பொறுப்பேற்றுள்ளார்.
5) விடை a) ருய்சியாங் ஜாங்
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரான ருய்சியாங் ஜாங் 2023 ஆம் ஆண்டுக்கான சாஸ்திர ராமானுஜன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கணிதத் துறையில் அவர் ஆற்றிய குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது 10,000 டாலர் ரொக்கப் பரிசு உடன் சேர்த்து வழங்கப்படுகிறது.
6)விடை d)செப்டம்பர் 30
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 அன்று அனுசரிக்கப்படும் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் மொழி வல்லுநர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்புக்காக உலகளாவிய மொழிபெயர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது .சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் முதன்முதலில் 1991ஆம் ஆண்டில் சர்வதேச மொழிபெயர்ப்பாளர்கள் கூட்டமைப்பால் (FIT) தோற்றுவிக்கப்பட்டது.
7)விடை c)லால் பகதூர் சாஸ்திரி
இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் 119-வது பிறந்த தினம் 2023 அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட்டது . இந்த நாள் லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தி என்று கொண்டாடப்பட்டது.லால் பகதூர் சாஸ்திரி, 1904 அக்டோபர் 2 ஆம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் முகலாசராயில் பிறந்தார். அவர் தேசத்திற்கான தன்னலமற்ற சேவை மற்றும் அர்ப்பணிப்பின் நீடித்த அடையாளமாக திகழ்கிறார். அவர் இந்திய சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார் மேலும் மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பர் ஆவார்.பிரிட்டிஷாரால் பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். அவர் 1964 முதல் 1966 மரணமடையும் வரை இந்தியாவின் இரண்டாவது பிரதமராக பணியாற்றினார். பிரதமராக அவரது பதவிக்காலம் இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உட்பட பல குறிப்பிடத்தக்க சாதனைகள் இவரது பதவிக்காலத்தில் இடம்பெற்றன. லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் நீடித்த மரபுகளில் ஒன்று “ஜெய் ஜவான் ஜெய் கிசான்” என்ற முழக்கமாகும்.
8)விடை a)ஈஷா சிங்
19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் ஈஷா சிங் 4 பதக்கங்களை வென்றார்.
வரிசை எண் | பதக்கம் | விளையாட்டு போட்டி |
1. | தங்கம் | 25 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி |
2. | வெள்ளி | 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி |
3. | வெள்ளி | 10 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் |
4. | வெள்ளி | 25 மீட்டர் ஏர் பிஸ்டல் தனிநபர் |
9)விடை b)47
இந்திய நாட்டில் 5G அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு வேக செயல்திறன் 3.59 மடங்கு அதிகரித்துள்ளது, சராசரி பதிவிறக்க வேகம் செப்டம்பர் 2022 இல் 13.87 Mbps இலிருந்து ஆகஸ்ட் 2023 இல் 50.21 Mbps ஆக உயர்ந்துள்ளது. இந்த முன்னேற்றம் இந்தியாவின் சர்வதேச இணைய வேக தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது . 119வது இடத்தில் இருந்து 72 இடங்கள் முன்னேறி 47வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.இத்தரவரிசை ஊக்ளா சர்வதேச இணையத்தள நிறுவனம் வெளியிட்டுள்ளது .ஐக்கிய அரபு நாடுகள் முதல் இடமும் கத்தார் இரண்டாம் இடமும் மற்றும் குவைத் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
10) விடை b)1948
உலக சுகாதார அமைப்பு (WHO) என்பது சர்வதேச பொது சுகாதாரத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறந்த நிறுவனமாகும். இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ளது. உலக சுகாதார அமைப்பு 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் நாள் அன்று அமைக்கப்பட்டது .
நோக்கங்கள் :
- சர்வதேச சுகாதாரப் பணியில் ஒருங்கிணைப்பு மற்றும் வழிநடத்தும் அதிகாரியாக செயல்படுவது.
- சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதில் அரசாங்கங்களுக்கு உதவுதல்
- சுகாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் விஞ்ஞான மற்றும் தொழில்முறை குழுக்களிடையே ஒத்துழைப்பை ஊக்குவித்தல்.