Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு –28 நவம்பர் 2023

நவம்பர் 28 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம்
  • 2022 ஆம் ஆண்டுக்கான  தேசிய உலோகவியலாளர் விருது வென்றவர்
  • 2023 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வென்றவர்

நவம்பர் 28ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) 28வது ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடு (COP 28) நடைபெற உள்ள இடம்

a)துபாய்

b)அபுதாபி

c)ரியாத்

d)சார்ஜா

2) 2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா- பாரா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ள இடம்

a)புது டெல்லி

b)கொல்கத்தா

c)குவாலியர்

d)அகமதாபாத்

3) தென்கிழக்கு ஆசியாவின் முதல்   இருண்ட விண்வெளி காப்பகம் எங்கு அமைய உள்ளது

a)லடாக்

b)ஜம்மு

c)ஸ்ரீநகர்

d)சிம்லா

4) இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் எங்கு அமைய உள்ளது

a)போபால்

b)தமோ

c)இந்தூர்

d)குவாலியர்

5) உலகளாவிய குழந்தைகள் தினம்

a)நவம்பர் 18

b)நவம்பர் 20

c)நவம்பர் 22

d)நவம்பர் 24

6) நவம்பர் 25 ஆம் நாள் அசைவ அல்லாத நாளாக அறிவித்த மாநிலம்

a)மத்திய பிரதேசம்

b)உத்தராகாண்ட்

c)உத்திர பிரதேசம்

d)குஜராத்

7) 2022 ஆம் ஆண்டுக்கான  தேசிய உலோகவியலாளர் விருது வென்றவர்

a)காமாட்சி முதலி உத்தண்டி

b)தேபாஷிஷ் பட்டாச்சார்யா

c)ராமேஷ்வர் சா

d)அகிலன் முத்துமாணிக்கம்

8) 2023 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு வென்றவர் யார்

a)சாரா பெர்ன்ஸ்டீன்

b)பால் ஹார்டிங்

c)பால் லிஞ்ச்

d)பால் முர்ரே

9 ) சர்வதேச சர்க்கரை அமைப்பின் தலைமையகம்

a)லண்டன்

b)வாஷிங்டன்

c)நியூயார்க்

d)ஜெனீவா

10) உலக நிலையான போக்குவரத்து நாள்

a)நவம்பர் 25

b)நவம்பர் 26

c)நவம்பர் 27

d)நவம்பர் 28

விடைகள்

1) விடை a) துபாய்

ஐக்கிய நாடுகள் சபையின் 28வது காலநிலை மாற்ற மாநாடு (COP 28) துபாயில் நடைபெற உள்ளது. இது 30 நவம்பர் 2023 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறுகிறது.1992 ஆம் ஆண்டில் முதல் ஐ.நா காலநிலை ஒப்பந்தத்திலிருந்து இந்த மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. உலகளாவிய வெப்பநிலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கும் காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய தாக்கங்களுக்கு ஏற்பவும் அரசாங்கங்கள் கொள்கைகளை ஒப்புக்கொள்வதை COP மாநாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை துபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் மாநாட்டில் (COP 28) விவாதிக்க தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மூன்று திட்டங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.

இந்த உலகளாவிய நிகழ்விற்காக மொத்தம் ஏழு திட்டங்களை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு அமைச்சகம் தேர்வு செய்துள்ளது.

மூன்று தமிழகத் திட்டங்கள் பின்வருமாறு:

  1. மீண்டும் மஞ்சப்பை திட்டம்
  2. தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் (TNGCC.)
  3. மகளிர் சுற்றுச்சூழல் போராளித் திட்டம்

2) விடை a)புது டெல்லி

2023 ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா- பாரா விளையாட்டு போட்டிகள் புது டெல்லியில் நடைபெற உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள் டிசம்பர் 10 முதல் 17 வரை நடைபெற உள்ளன.மொத்தம் 32 (மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்கள்) இருந்து 1,350 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இந்த விளையாட்டுகளில் பங்கேற்க உள்ளன. ‘உஜ்வாலா’ என்ற சிட்டுக்குருவி 2023 ஆம் ஆண்டின் கேலோ இந்தியா – பாரா விளையாட்டு போட்டிகளின்    அதிகாரப்பூர்வ சின்னமாக வெளியிடப்பட்டது

விளையாட்டுப் போட்டிகள் மொத்தம் 7 பிரிவுகளில் நடைபெறும் அவை :

  1. தடகளம்
  2. துப்பாக்கி சுடுதல்
  3. வில்வித்தை
  4. கால்பந்து
  5. இறகுப்பந்து
  6. டேபிள் டென்னிஸ்
  7. பளு தூக்கும் போட்டி

3)  விடை  a)லடாக்

லடாக்கில் விரைவில் தென்கிழக்கு ஆசியாவின் முதல்   இருண்ட விண்வெளி காப்பகம்  அமையவுள்ளது .இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைக்கப்பட்டுள்ள பெங்களூரு இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் உதவியுடன் இந்தச் சரணாலயம் அமைக்க பட உள்ளது. சாங்தாங் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக கிழக்கு லடாக்கில் உள்ள ஹன்லே கிராமத்தில் இருண்ட விண்வெளி காப்பகம்  அமையவுள்ளது. இது இந்தியாவில் விண்வெளி -சுற்றுலாவை ஊக்குவிக்கும் மற்றும் ஒளிக்கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள்  மற்றும் காமா-கதிர் தொலைநோக்கிகளுக்கான உலகின் மிக உயர்ந்த தளங்களில் ஒன்றாகும் .

4) விடை b)தமோ

இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் மத்தியப் பிரதேச மாநிலம் தாமோவில் அமைக்கப்பட உள்ளது. இரண்டு வனவிலங்கு சரணாலயங்களை (நௌராதேஹி வனவிலங்கு சரணாலயம் மற்றும் துர்காவதி வனவிலங்கு சரணாலயம்) ஒன்றிணைத்து தாமோவில் நாட்டின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தை உருவாக்க இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 2,300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக உள்ளது .

5) விடை b)நவம்பர் 20

உலக குழந்தைகள் தினம் முதன்முதலில் 1954 ஆம் ஆண்டில் உலகளாவிய குழந்தைகள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது . இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம்நாள்  சர்வதேச ஒற்றுமை, உலகெங்கிலும் உள்ள குழந்தைகளிடையே விழிப்புணர்வு மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. 2023 கருப்பொருள்: ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உரிமை.

6)விடை c)உத்திர பிரதேசம்

சாது டி.எல்.வாஸ்வானியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் நவம்பர் 25 ஆம் தேதியை “அசைவம் இல்லாத நாளாக” உத்தரபிரதேச அரசு அறிவித்தது. அன்றைய தினம் மாநிலத்தில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

7)விடை b)தேபாஷிஷ் பட்டாச்சார்யா

உலோகவியல் துறையில் சிறந்த பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக மத்திய அரசின் எஃகு அமைச்சகம் தேசிய உலோகவியல் விருதுகளை வழங்குகிறது.

இவ்விருதுகள் பின்வரும் நான்கு பிரிவுகளில் வழங்கப்படும்:-

  1. வாழ்நாள் சாதனையாளர் விருது
  2. தேசிய உலோகவியலாளர் விருது
  3. இளம் உலோகவியலாளர் விருது
  4. உலோக அறிவியல், இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான விருது

2022 ஆம் ஆண்டுக்கான தேசிய உலோகவியல் விருதுகள் வழங்கப்பட்டன அவை :

  1. டாக்டர் காமாட்சி முதலி உத்தண்டி – வாழ்நாள் சாதனையாளர் விருது
  2. டாக்டர் தேபாஷிஷ் பட்டாச்சார்யா – தேசிய உலோகவியலாளர் விருது
  3. டாக்டர் ராமேஷ்வர் சா – இரும்பு மற்றும் எஃகு துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு
  4. டாக்டர் நிலோய் குண்டு – இளம் உலோகவியலாளர் (சுற்றுச்சூழல்) விருது
  5. அகிலன் முத்துமாணிக்கம் – இளம் உலோகவியலாளர் (உலோக அறிவியல்) விருது

8)விடை  c)பால் லிஞ்ச்

ஐரிஷ் எழுத்தாளரான பால் லிஞ்ச் தனது ‘Prophet Song’  ‘ நாவலுக்காக 2023 ஆம் ஆண்டின் புக்கர் பரிசை வென்றார், இரண்டாவது இடம் இந்திய வம்சாவளி எழுத்தாளர் சேத்னா மாரூவின் “Western Lane ” நாவலுக்கு கிடைத்தது .

9)விடை  a)லண்டன்

2024 ஆம் ஆண்டில் லண்டனில் அமைந்துள்ள சர்வதேச சர்க்கரை அமைப்பின் (ISO) தலைவராக இந்தியா பொறுப்பேற்க உள்ளது . உலகின் மிகப்பெரிய நுகர்வோரும், சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது பெரிய உற்பத்தியாளருமான இந்தியா இந்த தலைமை பொறுப்பு மூலம்  உலகளாவிய சர்க்கரைத் துறையில்  தனது வளர்ந்து வரும் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. இது 1968 ஆம் ஆண்டில் டிசம்பர் 3 ஆம்நாள்  அமைக்கப்பட்டது .

10) விடை  b)நவம்பர் 26

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை நவம்பர் 26 ஆம் தேதியை உலக நிலையான போக்குவரத்து தினமாக அறிவித்தது. இந்த நாள் இணைப்பு, வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் போக்குவரத்தின் முக்கிய பங்கை பிரதிநிதித்துவப்படுத்துகிறது,.அதே நேரத்தில் பசுமை குடில் வாயு உமிழ்வுகளை குறைக்கும்.  அதன் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கிறது.உலக நிலையான போக்குவரத்து தினத்தின் கருப்பொருள் “நிலையான போக்குவரத்து, நிலையான வளர்ச்சி” என்பதாகும்.

 

 

**************************************************************************

நடப்பு நிகழ்வு –28 நவம்பர் 2023_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here