Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு –08 நவம்பர் 2023

நவம்பர் 08 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • முதல் ஆஸ்திரேலியா – இந்தியா கல்வி மற்றும் திறன் மன்றம்
  • உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் முதல் இடம் பிடித்த நகரம்
  • 2023 ஆம் ஆண்டின் மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை

நவம்பர் 08ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1)பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ முன்முயற்சியை ஆதரிக்க மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துடன்  இணைந்துள்ள தொலைக்காட்சி நிறுவனம்

a)ஜீ நிறுவனம்

b)டிஸ்னி ஸ்டார் நிறுவனம்

c)கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம்

d)சோனி தொலைக்காட்சி நிறுவனம்

2) IQAir  நிறுவனத்தால்   அளிக்கப்பட்ட அறிக்கையில் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் முதல் இடம் பிடித்த நகரம்

a)புது டெல்லி

b)லாகூர்

c)தோஹா

d)ஜகார்த்தா

3) டெல்லியின் காற்று மாசு நெருக்கடியை சமாளிக்க செயற்கை மழை தீர்வை கண்டுபிடித்த இந்திய தொழில்நுட்ப கழகம்

a)ஐஐடி மெட்ராஸ்

b)ஐஐடி பாம்பே

c)ஐஐடி கான்பூர்

d)ஐஐடி டெல்லி

4) முதல் ஆஸ்திரேலியா – இந்தியா கல்வி மற்றும் திறன் மன்றம் நடைபெறவுள்ள இடம்

a)புது டெல்லி

b)மெல்போர்ன்

c)காந்திநகர்

d)சிட்னி

5) ஜல்  தீபாவளி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கியுள்ள அமைச்சகம்

a)ஜல் சக்தி அமைச்சகம்

b)வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல அமைச்சகம்

c)ஊரக மேம்பாட்டு அமைச்சகம்

d)துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம்

6) Lion that dranks the moonlight என்ற புத்தகத்தை எழுதிய இஸ்ரோ தலைவர்

a)சிவன்

b)சோமநாத்

c)கிரண் குமார்

d)ராதாகிருஷ்ணன்

7) 54 வது சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற உள்ள இடம்

a)மும்பை

b)புது டெல்லி

c)கொல்கத்தா

d)கோவா

8) 2023 ஆம் ஆண்டின் மகளிர் ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி கோப்பை கைப்பற்றிய அணி

a)மலேஷியா

b)ஜப்பான்

c)இந்தியா

d)தென்கொரியா

9) புராஜெக்ட் 15 பி  திட்டத்தின் நான்காவது மாற்று கடைசி போர்க்கப்பலின் பெயர்

a)INS உதயகிரி

b)INS மும்பை

c)INS கொல்கத்தா

d)INS சூரத்

10) சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுப்பு   தினம்

a)நவம்பர் 3

b)நவம்பர் 4

c)நவம்பர் 5

d)நவம்பர் 6

விடைகள்

1)விடை c)கலர்ஸ் தொலைக்காட்சி நிறுவனம்

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்குத் தொலைக்காட்சி நிறுவனமான கலர்ஸ் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ என்ற முன்முயற்சியுடன் இணைந்து செயல்படுகிறது. பெண் குழந்தைகளைக் கைவிடும் பிரச்சினையை நிவர்த்தி செய்ய புதிய புனைக்கதை நிகழ்ச்சியான “டோரீ” என்ற இந்த நிகழ்ச்சியை கலர்ஸ் ஒளிபரப்புகிறது. பெண் குழந்தைகள் கைவிடப்படுவதன் சமூக தீமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை கலர்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது.

2) விடை a)புது டெல்லி

சுவிஸ் குழுமமான IQ AIRன் தரவுகளின்படி, உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் டெல்லி தற்போது இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரமாகவும்  காற்று தரக் குறியீட்டெண் (AQI) 483 உடன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாகவும் உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் 371 (AQI)யுடன் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தையும் கொல்கத்தா மூன்றாம் இடத்தையும்  மற்றும் மும்பை ஆறாவது இடத்தை பிடித்துள்ளது .

 

3)  விடை c)ஐஐடி கான்பூர்

இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) கான்பூரில் நச்சுக் காற்றில் அவதிப்படும்  புது டெல்லி பகுதியில் வசிக்கும் மக்கள்  மற்றும் அதன் அண்டைப் பகுதிகளுக்கு   “செயற்கை மழை” மூலம்  காற்று மாசு மற்றும் மாசுபடுத்திகள்  அகற்றும் புத்தாக்க  தீர்வை கண்டுள்ளது .உலகில் காற்று மாசுபாட்டில் முதலிடம் வகிக்கும் புது டெல்லி  இந்த தீர்வு மூலம் காற்று மாசுபாடு குறைக்க உதவும் .

 

4) விடை c)காந்திநகர்

காந்திநகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப கழகத்தில் (IIT) ஆஸ்திரேலியா இந்தியா கல்வி மற்றும் திறன் கவுன்சில் கூட்டம்  நடைபெறுகிறது.ஆஸ்திரேலிய இந்திய கல்வி கவுன்சில் (AIEC) அமைப்பு இரு நாடுகளுக்கும் இடையில் கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக 2011-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது . கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவதற்காக இந்த மன்றத்தின் நோக்கம் இரு நாடுகளின் தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டது.கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஒரே நிறுவன மன்றத்தின் கீழ் கொண்டு வரப்படுவது இதுவே முதல் முறையாகும்.இரு நாடுகளிலும் கல்வி மற்றும் திறன்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் நோக்கத்துடன் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்ட முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க கல்வி மற்றும் திறன் வல்லுநர்களுக்கு இந்தக் கூட்டம் ஒரு தளத்தை வழங்கும். எதிர்காலத்துக்கு ஏற்ற திறன் மிக்க தொழிலாளர்களை உருவாக்குதல், கல்வியில் நிறுவன கூட்டுச் செயல்பாடுகளை வலுப்படுத்துதல், சர்வதேச மயமாக்கல் மூலம் ஆராய்ச்சிகளை மேம்படுத்துதல் ஆகிய மூன்று முக்கிய கருப்பொருள்களில் விவாதங்கள் நடைபெற உள்ளன .

5) விடை b)வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நல அமைச்சகம்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும் புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் இயக்கம் எனப்படும் அம்ருத் திட்டமும் இணைந்து “நீருக்காகப் பெண்கள், பெண்களுக்காக நீர் இயக்கம்” என்ற முற்போக்கான முன்முயற்சியை அறிமுகப்படுத்துகின்றன. நீர் நிர்வாகத்தில் பெண்களை இணைப்பதற்கான தளத்தை வழங்குவதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வீட்டு நீர் மேலாண்மையில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். நீர் சுத்திகரிப்பு செயல்முறைகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களை பெண்களுக்கு வழங்குவதன் மூலம், அவர்களின் திறனை மேம்படுத்துவதை வீட்டுவசதி அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. துறைகளில் உள்ளடக்கம் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தின் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை இந்த முன்முயற்சி  நோக்கமாகக் கொண்டுள்ளது.

6)விடை b)சோமநாத்

‘நிலவு குடிச்ச சிம்மங்கள்’ (Lion that drank moonlight)  என்ற சுயசரிதை புத்தகத்தை  தற்போதைய இஸ்ரோ தலைவர் சோம்நாத் எழுதியுள்ளார் .

7)விடை d)கோவா

54-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில்  நடைபெற உள்ளது .விழாவில் மைக்கேல் டக்ளஸுக்கு சத்யஜித் ரே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது .

8)விடை  c)இந்தியா

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2023 இறுதிப் போட்டியில் ஜப்பானை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

9)விடை d)INS சூரத்

முன்னணி ‘போர்க்கப்பல் திட்டமான ‘புராஜெக்ட் 15 பி’ திட்டத்தில் நான்கு அடுத்த தலைமுறை ஏவுகணை அழிப்பான் கப்பல்களில் ‘சூரத்’ நான்காவது மற்றும் கடைசி கப்பல் ஆகும். இந்த போர்க்கப்பலின் கட்டுமானம் உள்நாட்டு அதிநவீன போர்க்கப்பல் கட்டுமான தொழில்நுட்பத்துக்கு சான்றாக உள்ளது. இது தற்போது மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தில் கட்டுமானத்தில் உள்ளது மற்ற மூன்று கப்பல்கள்

  1. INS விசாகப்பட்டினம்
  2. INS மோர்முகவோ
  3. INS இம்பால்.

10) விடை  d)நவம்பர் 6

சர்வதேச போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழல் சுரண்டல் தடுப்பு  தினம் ஒவ்வொரு வருடமும்  நவம்பர் 6 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது .போர் மற்றும் ஆயுத மோதல்களின் கடுமையான சுற்றுச்சூழல் விளைவுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கியமான உலகளாவிய முயற்சியாகும். பாதுகாப்பு மற்றும் சமாதானத்தின் ஆதாரமாக சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கும்  இராணுவ மோதல்களின் போது  சுற்றுச்சூழலை சுரண்டுவதைத் தடுப்பது இந்த நாளின் முக்கிய நோக்கம் ஆகும் . இந்த நாள் ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது .

**************************************************************************

Tamil Nadu Mega Pack
Tamil Nadu Mega Pack
இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here