Tamil govt jobs   »   Latest Post   »   நடப்பு நிகழ்வு கேள்விகள் மற்றும் பதில்கள்

நடப்பு நிகழ்வு –02 நவம்பர் 2023

நவம்பர் 02 TNPSC மற்றும் மத்திய அரசு தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகள்

இன்றைய முக்கிய நடப்பு நிகழ்வுகள்

  • உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மாநாடு.
  • இந்தியாவின் முதல் இலக்கிய நகரம்.
  • பலோன் டி’ஓர் விருது

நவம்பர் 02ம் தேதி நடப்பு நிகழ்வு கேள்விகள்

1) எத்தனை இந்திய மாநிலங்கள் 1956 ஆம் ஆண்டில் நவம்பர் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்டது ?

a)5

b)6

c)7

d)8

2) பிரதம  மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா  திட்டத்தின் அமைச்சகம்

a)சமூக நீதி அமைச்சகம்

b)பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்

c)வேளாண்துறை அமைச்சகம்

d)பழங்குடியினர் நல அமைச்சகம்

3) மேரா யுவ பாரத் திட்டத்தின் தன்னாட்சி அமைப்பு துவங்கப்படும் நாள்

a)அக்டோபர் 31,2023

b)நவம்பர் 1,2023

c)நவம்பர் 19,2023

d)டிசம்பர் 25, 2023

4) கழிவுநீரில் இருந்து மாசுபாடுகளை அகற்றுவதற்கான  ஏரோஜெல் உறிஞ்சிகளை உருவாக்கிய  இந்திய தொழில்நுட்பக் கழகம்

a)ஐஐடி மெட்ராஸ்

b)ஐஐடி பம்பாய்

c)ஐஐடி கான்பூர்

d)ஐஐடி டெல்லி

5) உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு மாநாடு நடைபெறும் இடம்

a)புது டெல்லி

b)கோலாலம்பூர்

c)மான்செஸ்டர்

d)பக்கிங்ஹாம்ஷயர்

6) இந்தியாவின் முதல் இலக்கிய நகரம்

a)கொல்கத்தா

b)அகமதாபாத்

c)கோழிக்கோடு

d)பெங்களூரு

7) தமிழகத்தின் எந்த கடற்கரை நீலக்கொடி அந்தஸ்து தேர்வு செய்யப்பட்டுள்ளது ?

a)மெரினா கடற்கரை

b)எலியட்ஸ் கடற்கரை

c)கோவளம் கடற்கரை

d)மஹாபலிபுரம் கடற்கரை

8) 2023 ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்டத்தின் பலோன் டி’ஓர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

a)கிறிஸ்டியானோ ரொனால்டோ

b)நெய்மர்

c)கைலியன் எம்பாப்பே

d)லியோனல் மெஸ்ஸி

9) தடகள வீராங்கனை ஜோதி யார்ராஜி எந்த விளையாட்டை சேர்ந்தவர்

a) 100 மீ தடை ஓட்டம்

b)ஈட்டி எறிதல்

c)நீளம் தாண்டுதல்

d)குண்டு எறிதல்

10) உலக நகரங்கள் தினம்

a)அக்டோபர் 28

b)அக்டோபர் 29

c)அக்டோபர் 30

d)அக்டோபர் 31

விடைகள்

1)விடை c) 7

நவம்பர் 1  அன்று ஏழு இந்திய மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் உருவான நாளாக அங்கீகரிக்கப்படுகிறது. அவை ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா மற்றும் மத்தியப் பிரதேசம். லட்சத்தீவு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து உருவானது.

  • தமிழ்நாடு – 26 ஜனவரி 1950 அன்று மெட்ராஸ் மாநில சட்டம், 1950 மூலம் மெட்ராஸ் மாநிலமாக உருவாக்கப்பட்டது. பின்னர் இது 1969 இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.
  • 1953 ஆம் ஆண்டு ஆந்திரா, மதராஸ் மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது மற்றும் 1956 ஆம் ஆண்டு ஹைதராபாத் மாநிலம் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு, மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம் 1956 மூலம் ஆந்திரப் பிரதேச மாநிலமாக மறுபெயரிடப்பட்டது.

2) விடை b)பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம்

பிரதம  மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டம் இதற்கு முன்பு இந்திரா காந்தி மாத்ரித்வா சஹ்யோக் யோஜனா என அழைக்கப்பட்டது.இது இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட மகப்பேறு நன்மை திட்டமாகும். இந்த திட்டம்  2010 ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்டது மற்றும் 2017 இல் மறுபெயரிடப்பட்டது. இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. கர்ப்பம் மற்றும் பாலூட்டலின் முக்கியமான காலகட்டத்தில் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்காக நிதி உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. PMMVY திட்டத்தின் கீழ் தகுதியான பெண்கள் நேரடியாக ரூ.5,000 மூன்று தவணைகளில் பெறலாம் .2023 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் நாள்  அன்று இந்திய அரசாங்கத்தால்  இனையத்தளம் மற்றும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

3)  விடை a)அக்டோபர் 31,2023

தேசிய ஒற்றுமை தினத்தையொட்டி அக்டோபர் 31, 2023 அன்று ‘மேரா யுவ பாரத்’ (எனது பாரதம் )தொடங்கப்பட்டது. இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது, தலைமைத்துவத்தை வளர்ப்பது மற்றும் தேசிய வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே ‘மேரா யுவா பாரத்’யின் நோக்கமாகும். தேசிய இளைஞர் கொள்கையுடன் இணக்கமாக 15-29 வயதுக்குட்பட்டவர்களை இலக்காகக் இந்த திட்டம் கொண்டுள்ளது ..

4) விடை a)ஐஐடி மெட்ராஸ்

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம்  (ஐஐடி மெட்ராஸ்) மற்றும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து கழிவுநீரில் இருந்து மாசுபாட்டை அகற்றுவதற்கான ஏரோஜெல் உறிஞ்சியை உருவாக்கியுள்ளனர் .உலக மக்கள் தொகையில் 18 சதவீத மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியா, உலகளவிலான நீர்ஆதாரங்களில் வெறும் 4 சதவீத அளவுக்கு மட்டுமே இருப்பதால் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் உள்ளது. எனவேதான் நீர் மாசுபாட்டை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீர் சார்ந்த தொழில்களான மருந்து மற்றும் ஜவுளி உற்பத்தித் துறைகளில் இந்த முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜவுளி உற்பத்தித் துறையில் மட்டும் ஆண்டுதோறும் ஏறத்தாழ 10 லட்சம் டன் அளவுக்கு நச்சு செயற்கை சாயங்கள் வெளியேற்றப்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் இதனால் கடும் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.

5) விடை d)பக்கிங்ஹாம்ஷயர்

இங்கிலாந்தின் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் உள்ள பிளெட்ச்லி பூங்காவில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள், செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் மற்றும் தொழில் பிரதிநிதிகள் பங்கேற்று, மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் பாதுகாப்பைச் சுற்றியுள்ள வளர்ந்து வரும் பிரச்சினைகள்  மற்றும் இந்த பிரச்சினைகளை சரி செய்ய சர்வதேச ஒத்துழைப்பு தேவை குறித்து விவாதித்தனர்.

6)விடை c)கோழிக்கோடு

யுனெஸ்கோ கோழிக்கோடு நகரத்தை இலக்கிய நகரமாக அறிவித்தது. இந்த சிறப்பை பெற்ற இந்தியாவின் முதல் நகரம் இதுவாகும்.மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் ‘இசை நகரமாக’ அறிவிக்கப்பட்டது 2014 ஆம் ஆண்டில்  இலக்கிய நகரம் என்ற பட்டத்தைப் பெற்ற  உலகின் முதல் நகரம்  செக் குடியரசு நாட்டின்  ப்ராக் ஆகும்.

7)விடை  c)கோவளம் கடற்கரை

தமிழகத்தில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் கொள்கைகளின்படி  செங்கல்பட்டில் உள்ள  கோவளம் கடற்கரை   தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீலக் கொடி திட்டம் சுற்றுச்சூழல் கல்விக்கான அறக்கட்டளை (FEE) ஆகும் . இது டென்மார்க்கில் தலைமையகத்தைக் கொண்ட ஒரு அரசு சாரா அமைப்பால் நடத்தப்படுகிறது.

8)விடை  d)லியோனல் மெஸ்ஸி

2023 ஆம் ஆண்டுக்கான அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி எட்டாவது முறையாக பலோன் டி’ஓர் விருதை வென்றுள்ளார். மேலும் 2009, 2010, 2011, 2012, 2015 2019 மற்றும் 2021 இல் வென்றார். அதிக எண்ணிக்கையிலான பலோன் டி’ஓர் விருதுகளை வென்ற ஒரே வீரர் இவர்தான்.

9)விடை a)தடை ஓட்டம்

ஜோதி யர்ராஜி, 100 மீ தடை ஓட்டம் விளையாடும் தடகள வீராங்கனை ஆவார் .பனாஜியில் நடைபெற்ற 37வது தேசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய தடகள வீராங்கனை ஜோதி யர்ராஜி 100 மீட்டர் தடை ஓட்டத்தில் தனது சாதனையை முறியடித்தார்.100 மீ தடை ஓட்டத்தை வெறும் 13.22 வினாடிகளில் ஓடினார் . 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம்  வென்றார். என்பது குறிப்பிடத்தக்கது.

10) விடை  d)அக்டோபர் 31

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால்அறிவிக்கப்பட்ட  உலக நகரங்கள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 31 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது உலகளாவிய நகரமயமாக்கலில் சர்வதேச சமூகத்தின் ஆர்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவும் நகரமயமாக்கல் சவால்களை எதிர்கொள்ள நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பைத் தூண்டவும், உலகளவில் நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கு பங்களிக்கவும் இந்த நாள் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.இந்த ஆண்டின் கருப்பொருள் “நிலையான நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகும் .

 

*************************************************************************

நடப்பு நிகழ்வு –02 நவம்பர் 2023_3.1

இது போன்ற தேர்விற்கான தகவல் மற்றும் பாடக்குறிப்புகளை பெற ADDA247 தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
Adda247 TamilNadu Home page Click here
Official Website=Adda247 Click here