TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB மற்றும் TNFUSRC போன்ற தேர்வுகளுக்கான தினசரி விண்ணப்பங்களின் தொகுப்பை Current Affairs Daily Quiz adda247 வழங்குகிறது. தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பாடத்திட்டத்தில் தரமான தினசரி வினாடி வினாக்களை தமிழில் வழங்குகிறோம்.
Current Affairs Daily Quiz (நடப்பு நிகழ்வுகள் வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது. தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புகளுக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.
1.43வது ஆசியான் மாநாடு எங்கே நடக்கிறது ?
a) மணிலா
b) சகார்த்தா
c) பீஜிங்
d) பாங்காக்
2) G20 மொபைல் செயலியை உருவாக்கிய அமைச்சகம் எது?
a) கல்வி அமைச்சகம்
b)தொழில்துறை அமைச்சகம்
c) வெளியுறவு அமைச்சகம்
d) வேளாண்மை அமைச்சகம்
3)SLIM மூன் லேண்டரை எந்த நாடு விண்ணுக்கு அனுப்பியது?
a) சீனா
b) ஜப்பான்
c) தென் கொரியா
d) ரஷ்யா
4)500 kVA நிலத்தடி மின்மாற்றி நிலையத்தை அமைத்த நகரம் எது?
a) சென்னை
b)பெங்களூரு
c) ஹைதராபாத்
d) கொச்சி
5.டியூரான்டு கோப்பையுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
a) கிரிக்கெட்
b) டென்னிஸ்
c) கால்பந்து
d) பூப்பந்து
6.சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை கிரிக்கெட் வீரரை எந்த நாடு அறிமுகப்படுத்துகிறது?
a)கனடா
b) அமெரிக்கா
c) ஆஸ்திரேலியா
d) இந்தியா
7.வருடாந்திர காற்று தர வாழ்நாள் இழப்புக் குறியீட்டை வெளியிட்டவர் யார்?
a) எரிசக்தி கொள்கை நிறுவனம், சிகாகோ பல்கலைக்கழகம்
b) உலக வங்கி
c)சர்வதேச நாணய நிதியம்
d)உலகப் பொருளாதார மன்றம்
8.இந்தியாவின் தற்போது நம்பர் ஒன் ஸ்குவாஷ் வீராங்கனை யார்?
a)தன்வி கண்ணா
b) ஜோஷ்னா சின்னப்பா
c) தீபிகா பல்லிகல்
d) ஜேனட் விதி
9.எந்த அமைச்சகம் தொலைபேசி வாயிலான சட்ட சேவை திட்டம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது?
a) பாராளுமன்ற விவகார அமைச்சகம்
b) தொழில்துறை அமைச்சகம்
c) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
d) வேளாண்மை அமைச்சகம்
10.
திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க எந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது?
a) சத்தீஸ்கர்
b)ஒடிசா
c) மேற்கு வங்காளம்
d) ஜார்கண்ட்
விடைகள்
1.விடை: b) சகார்த்தா
43வது ஆசியான் உச்சி மாநாடு இந்தோனேசியாவின் சகார்த்தாவில் அதிபர் ஜோகோ விடோடோ தலைமையில் தொடங்கியது.
2.விடை: c) வெளியுறவு அமைச்சகம்
வெளியுறவு அமைச்சகம் G20 மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.
3.விடை: b) ஜப்பான்
ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) சந்திரனின் நிலவின் மேற்பரப்பைக் கண்காணிப்பதற்காக எக்ஸ்-ரே-வானியல் செயற்கைக்கோள் மற்றும் SLIM லேண்டரை விண்ணுக்கு அனுப்பியது.
4. விடை: b)பெங்களூரு
இந்தியாவின் முதல் 500 கிலோ வோல்ட் ஆம்பியர் (KVA) நிலத்தடி மின்மாற்றி நிலையத்தை கர்நாடக அரசு பெங்களூரு மல்லேஸ்வரத்தில் திறந்து வைத்தது.
5.விடை: c) கால்பந்து
டியூரான்டு கோப்பையுடன் கால்பந்து தொடர்புடையது. மோகன் பகான் தடகள கிளப் 2023 டியூரான்டு கோப்பையை வென்றது.
6.விடை: a) கனடா
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முதல் திருநங்கை கிரிக்கெட் வீராங்கனை டேனியல் மெக்காஹே கனடா நாடு அறிமுகப்படுத்துகிறது.
7.விடை: a) எரிசக்தி கொள்கை நிறுவனம் சிகாகோ பல்கலைக்கழகம்
சிகாகோ பல்கலைக்கழகத்தின் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவன பல்கலைக்கழகம் வருடாந்திர காற்று தர வாழ்நாள் இழப்புக் குறியீடு அறிக்கை வெளியிட்டது. தற்போதைய காற்று மாசுபாட்டின் நிலை உலக மனித ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
8.விடை: a)தன்வி கண்ணா
இந்தியாவின் புதிய ஸ்குவாஷ் வீராங்கனைகளில் தன்வி கண்ணா முதலிடத்திலும், ஜோஷ்னா சின்னப்பா இரண்டாவது இடத்தில் இருப்பதாக தொழில்முறை ஸ்குவாஷ் சங்கம் (PSA) தரவரிசை வெளியிட்டு உள்ளது .
9.விடை: c) சட்டம் மற்றும் நீதி அமைச்சகம்
சட்ட மற்றும் நீதி அமைச்சகமானது குடிமக்கள் சட்ட உதவி பெறுவதற்காக தொலைபேசி வாயிலான சட்ட சேவை திட்டம் 2.0 ஐ அறிமுகப்படுத்தியது.
10.விடை: d) ஜார்கண்ட்
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் திருநங்கைகளுக்கு 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க ஜார்க்கண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil