TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB மற்றும் TNFUSRC போன்ற தேர்வுகளுக்கான தினசரி விண்ணப்பங்களின் தொகுப்பை Current Affairs Daily Quiz adda247 வழங்குகிறது. தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பாடத்திட்டத்தில் தரமான தினசரி வினாடி வினாக்களை தமிழில் வழங்குகிறோம்.
Current Affairs Daily Quiz (நடப்பு நிகழ்வுகள் வினா விடை) TNPSC, SSC, UPSC, BANKING, RAILWAY, TNUSRB, TNFUSRC போன்ற தேர்வுகளுக்குப் பயன்படும் வகையில் தினசரி தொகுப்பாக adda247 உங்களுக்கு வழங்குகிறது. தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு பாடக்குறிப்புகளுக்குள் மற்றும் தரமான தினசரி வினா விடை குறிப்புகளை நாங்கள் தமிழில் தருகிறோம்.
1) அமெரிக்காவின் எந்த மாநிலம் அக்டோபர் மாதத்தை “இந்து பாரம்பரிய” மாதமாக அறிவித்தது ?
a) புளோரிடா
b) ஜார்ஜியா
c) நியூயார்க்
d) வாஷிங்டன்
2)க்ருஹ லக்ஷ்மி திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?
a) ஆந்திர பிரதேசம்
b) கர்நாடகா
c) தமிழ்நாடு
d) கேரளா
3)பல்நோக்கு கடற்பாசி பூங்கா தமிழ்நாட்டில் அமைத்துள்ளது?
a) நாகப்பட்டினம்
b) தூத்துக்குடி
c) ராமநாதபுரம்
d) கன்னியாகுமரி
4)மாளவியா திட்டதை தொடங்கிய அமைச்சகம் எது?
a) கல்வி அமைச்சகம்
b)தொழில்துறை அமைச்சகம்
c) சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம்
d) வேளாண்மை அமைச்சகம்
5)எந்த ரயில் நிலையம் அதிக பிளாட்டினம் மதிப்பீட்டில் ‘கிரீன் ரயில்வே மாநில சான்றிதழைப்’ பெறுகிறது?
a)மும்பை ரயில் நிலையம்
b) திருவனந்தபுரம் ரயில் நிலையம்
c)கோயம்புத்தூர் ரயில் நிலையம்
d)விஜயவாடா ரயில் நிலையம்
6) 2023 கலைஞர் செம்மொழி விருது பெற்றவர் யார்?
a) கே. ராமசாமி
b)எஸ்.மாலதி
c) காட்வின் வேதநாயகம்
d) ஆர். நல்ல கண்ணு
7.சர்வதேச தொண்டு தினம் எப்போது கொண்டாடப்பட்டது?
a) செப்டம்பர் 2
b) செப்டம்பர் 3
c) செப்டம்பர் 4
d) செப்டம்பர் 5
8)சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக எம்.எஸ் சுவாமிநாதன் விருது 2023 பெற்றவர் யார்?
a) டி எஸ் விஜய குமார்
b) மணிவாசன்
c) எஸ். மதுமதி
d) டி எஸ் ஜவஹர்
9) சர்வதேச சோலார் கூட்டணி அதன் 5வது மண்டல கூட்டம் எங்கு நடத்தியது?
a) கிகாலி
b) நைரோபி
c) கேப் டவுன்
d) ஜோகன்னஸ்பர்க்
10) இந்தியாவின் முதல் சூரிய ஒளி நகரம் எது?
a) இந்தூர்
b) குருகிராம்
c) லக்னோ
d) சாஞ்சி
TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மற்றும் பிறத் தேர்வுகள் போன்ற தேர்வுகளில் உங்கள் வெற்றி விகிதத்தை அதிகரிக்கவும்.
தினசரி நடப்பு நிகழ்வுகள் தினசரி வினாடிவினா விடைகள்
1.விடை b) ஜார்ஜியா
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் ஆளுநர் பிரையன் கெம்ப், அக்டோபர் மாதம் மாநிலத்திற்குள் ‘இந்து பாரம்பரிய மாதமாக’ கொண்டாடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2.விடை b) கர்நாடகா
கர்நாடக அரசு க்ருஹ லட்சுமி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு மாதாந்திர நிதி உதவியாக ரூ.2000 வழங்குகிறது.
3.விடை c) ராமநாதபுரம்
பல்நோக்கு கடற்பாசி பூங்கா தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் வளமாவூரில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் முதல் கடல்பாசி பூங்கா ஆகும்.
4.விடை a) கல்வி அமைச்சகம்
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாளவியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார், இது இந்தியாவின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் ஒரு முக்கியமான அங்கமாகும்.
5.விடை d) விஜயவாடா ரயில் நிலையம்
விஜயவாடா ரயில் நிலையம் இந்திய பசுமை கட்டிட கவுன்சில்(IGBC) மூலம் பிளாட்டினம் தரச்சான்றிதழ் பெற்றது.
6.விடை a) கே.ராமசாமி
கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதை இந்திய மொழிகள் மத்திய கழகம் முன்னாள் துணை இயக்குநர் தமிழறிஞர் கு.ராமசாமிக்கு தமிழக அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
7.விடை d) செப்டம்பர் 5
சர்வதேச தொண்டு தினம் செப்டம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது இது 2012 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது.
8.விடை a) டி எஸ் விஜய குமார்
ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் ஈஸ்ட் மற்றும் கேவின்கரே பிரைவேட் லிமிடெட் ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக 2023 ஆம் ஆண்டுக்கான எம்.எஸ் சுவாமிநாதன் விருதை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான டி.எஸ்.விஜயகுமாருக்கு வழங்கியுள்ளது.
9.விடை d) கிகாலி
சர்வதேச சோலார் கூட்டணி (ISA) அதன் 5வது பிராந்திய கூட்டத்தை கிகாலியில் ருவாண்டா அரசாங்கத்தால் நடத்தியது, இந்த கூட்டத்தில் 36 நாடுகள் பங்கேற்றன.
10.விடை d) சாஞ்சி
மத்தியப் பிரதேசத்தில் உள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான சாஞ்சியை முதல் சூரிய ஒளி நகரமாகமுதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இந்தியாவின் முதல் சூரிய ஒளி நகரமாகும். இந்த நகரம் ஆண்டுக்கு மொத்தம் 13,747 டன் கார்பன்டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் குறைக்கும்.
**************************************************************************

Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |
Adda247App | Adda247 Tamil Youtube
Adda247 Tamil telegram group –Tnpsc sure shot selection group
Instagram = Adda247 Tamil