இந்தியா, அரசியலமைப்பு சார்ந்த மற்றும் அரசியலமைப்பு சாரா அமைப்புகளின் ஒருங்கிணைப்பால் நடத்தப்படுகிற ஒரு ஜனநாயக நாடாகும்.
இந்தியாவில், ஒரு அரசியலமைப்பு சார்ந்த அமைப்பு என்பது, இந்திய அரசியலமைப்பால் நிறுவப்பட்ட ஒரு அமைப்பு அல்லது நிறுவனம் ஆகும். ஒரு வழக்கமான, அரசு அல்லது தனியார் மசோதாவைக் காட்டிலும், அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே, அவற்றை உருவாக்கவோ மாற்றவோ முடியும். இந்த அமைப்புகள் தங்களுக்கான அதிகாரங்களை இந்திய அரசியலமைப்பிலிருந்து பெறுகிறார்கள். இவை இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதால், அவை சுயாதீனமானவை, சக்திவாய்ந்தவை என்று கருதப்படுகின்றன.
அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அமைப்புகள்:
Sl. No. | அரசியலமைப்பு அமைப்புகள் | அரசியலமைப்பு சரத்து |
1. | இந்திய அரசுத் தலைமை வழக்குரைஞர் | 76 |
2. | தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா | 148 |
3. | மாநில அரசுத் தலைமை வழக்குரைஞர் | 165 |
4. | மாநில நிதி ஆணையம் | 243-I |
5. | மாநில தேர்தல் ஆணையம் | 243-K |
6. | மாவட்ட திட்டமிடல் குழு | 243ZD |
7. | பெருநகர திட்டமிடல் குழு | 243ZE |
8. | மாநிலங்களுக்கு இடையேயான குழு | 263 |
9. | நிதி ஆணையம் | 280 |
10. | சரக்கு மற்றும் சேவை வரி குழு | 279A |
11. | ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் | 315-323 |
12. | மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையம் | 315-323 |
13. | இந்தியத் தேர்தல் ஆணையம் | 324 |
14. | பட்டியலிடப்பட்ட சாதியினருக்கான தேசிய ஆணையம் | 338 |
15. | பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் | 338A |
16. | பின்தங்கிய வகுப்புகளுக்கான தேசிய ஆணையம் | 338B |
17. | பட்டியலிடப்பட்ட பகுதிகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினருக்கான ஆணையம் | 339 |
18. | பின்தங்கிய வகுப்புகள் ஆணையம் | 340 |
19. | அதிகாரப்பூர்வ மொழி ஆணையம் மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ மொழி குழு | 344 |
20. | மொழியியல் சிறுபான்மையினருக்கான சிறப்பு அதிகாரி | 350B |
இந்திய அரசியலில், அரசியலமைப்பு சார்ந்த பதவிகள் மற்றும் அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள் மிகவும் முக்கியமானவை.
அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகளைத் தவிர, நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அரசியலமைப்பு சாரா அமைப்புகளும் உள்ளன.
இந்தியாவின் அரசியலமைப்பு சாரா அமைப்புகளை (சட்டரீதியான, ஒழுங்குமுறை மற்றும் பல்வேறு நீதிமுறைச் சார்புடைய அமைப்புகளை உள்ளடக்கியது) அடுத்த பதிவில் உள்ளடக்குவோம்.
Use Coupon code: SMILE (77% offer)
*இப்போது உங்கள் வீட்டில் தமிழில் நேரடி வகுப்புகள் கிடைக்கின்றன*
*பயிற்சி மட்டுமே தேர்வுர உங்களுக்கு உதவ முடியும் | Adda247 தமிழ் மூலம் உங்கள் பயிற்சியை இப்போது தொடங்கவும்*
Adda247App | Adda247 Tamil telegram group | Adda247 Tamil Youtube