இந்திய அரசு அமைப்பின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் இந்திய அரசு அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB, SSC மற்றும் ரயில்வே போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்திய அரசு அமைப்பு குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
இந்திய அரசு அமைப்பு
- பஞ்சாயத்து அரசு நிறுவனங்களில் கீழ்மட்ட அமைப்பாக இருப்பது? கிராம பஞ்சாயத்து
- தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மேயர்களின் பதவிக்காலம்? ஐந்து ஆண்டுகள்
- எதன் அடிப்படையில் இந்திய மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன? மொழி
- இந்தியாவின் மிக உயர்ந்த நீதித்துறை அங்கம்? உச்சநீதிமன்றம்
- குடியரசு தினம் கடைபிடிக்கப்படும் நாள்? ஜனவரி 26
- மையப் பட்டியலில் உள்ள துறைகள்? 97 துறைகள்
- மாநில ஆளுநரை பதவியிலிருந்து நீக்குபவர்? குடியரசுத் தலைவர்
- மக்களவையின் அங்கத்தினராவதற்கு தகுதியான குறைந்தபட்ச வயது யாது? 25 வயது
- மாநில உயர்நீதிமன்றம் எதன் கீழ் உள்ளது? உச்சநீதிமன்றத்தின் கீழ் உள்ளது
- ஒரு மசோதா, நிதி மசோதாவா இல்லையா? என்று தீர்மானிப்பவர்? லோக் சபையின் சபாநாயகர்
- பெண்களின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயது? 18 வயது
- மேயரைத் தேர்ந்தெடுப்பது? நேரிடையாக மக்கள்
- உள்ளாட்சி தேர்தல்களை இந்த அமைப்பு நடத்துகின்றது? மாநில தேர்தல் ஆணையம்
- தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை? 383
- தமிழக சட்டசபையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை?234
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website Adda247 | Click here |