தமிழ் மொழியின் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்களைக் கீழே பார்க்கவும். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாய தமிழ் மொழி தேர்வு முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்தக் கட்டுரையில், TNPSC, TNUSRB மற்றும் TN TRB போன்ற போட்டித் தேர்வுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், தமிழ் மொழி குறித்த கேள்விகள் மற்றும் பதில்களை நாங்கள் தருகிறோம்.
TNPSC Group 4 Test Series 2023
தமிழ் மொழி
- பாரதியாரின் சிறப்பு பெயர்கள்? நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா, சிந்துக்குத் தந்தை, பாட்டுகொரு புலவன், எட்டயபுர ஏந்தல் .
- காற்று நூல் ஒரு ? வசன கவிதை.
- பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ்கள்? இந்தியா, சுதேசமித்திரன்.
- “கேலிச்சித்திரம் = கருத்துப்படம்” உருவாக்கியவர்? பாரதியார்.
- பாரதியாரின் நூல்கள் யாவை? குயில்பாட்டு, பஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திசூடி.
- புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாக இருப்பது எது ? வசனகவிதை
- வசனகவிதையை ஆங்கிலத்தில் எவ்வாறு அழைப்பர்? Prose Poetry (free verse).
- வசனகவிதையை தமிழில் அறிமுகப்படுத்தியவர் ? பாரதியார்.
- முல்லைப்பாட்டு நூலின் ஆசிரியர்? நப்பூதனார்
- முல்லைப்பாட்டு எந்த நூல்களுள் ஒன்று? பத்துப்பாட்டு.
- முல்லைப்பாட்டு எத்தனை அடிகளை உடையது? 103.
- பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல்? முல்லைப்பாட்டு .
- முல்லைப்பாட்டின் “பா” வகை ? ஆசிரியப்பா
- தலைவன் வருகைக்காக முதுபெண்டிர் தெய்வத்தின்முன் நற்சொல் கேட்டு நிற்பதன் பெயர்? விரிச்சி கேட்டல்.
- முல்லை நிலத்துக்குக்குரிய பெரும்பொழுது? கார்காலம் (ஆவணி, புரட்டாசி).
- முல்லை நிலத்துக்குக்குரிய சிறும்பொழுது ? மாலை.
**************************************************************************
Adda247 TamilNadu Home page | Click here |
Official Website=Adda247 | Click here |